உணர்வோசை

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்

ஒவ்வொரு ஆண்டும் சிந்தனையாளர்களால் எழுதப்பட்டு வரும் பெரியார் குறித்த நூல்கள், பெரியாரும், அவர்தம் சிந்தனையும் எக்காலத்திற்கும் தேவை என்பதை உணர்த்தும் சாட்சிகளாக உள்ளன.

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

பெரியார் சமூக சீர்திருத்தப் போராளி. அறிவுலகின் திறவுகோல். ஆதிக்கவாதிகளுக்கு அபாய சங்கு. மனித சமுதாயத்தின் நல்வாழ்விற்கான வழிகாட்டி. ‘பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்...’ என்ற குரல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலிப்பதற்கு பெரியாரின் அற்புதச் சிந்தனைகளே காரணம்.

பெரியாரின் சிந்தனைகள் முழுவதையும், குடியரசு தொகுப்பாக திராவிடர் கழகமும், பெரியாரின் சிந்தனை என்ற தலைப்பில் அறிஞர் வே.ஆனைமுத்தும், பெரியார் சிந்தனைகள் தொகுப்பு என்ற பெயரில் பெரியார் திராவிடர் கழகமும் நூல்களாக வெளியிட்டுள்ளன.

இதுதவிர, பெரியார் பற்றிய நூல்களை சமூகத்தின் நலன்நாடும் எழுத்தாளர்கள், திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் எழுதிக் கொண்டே வருகிறார்கள். பெரியாரின் இயல்கள், தத்துவங்கள் பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியாக ஆய்வேடுகளாக சமர்பிக்கப்பட்டு வருகின்றன.

‘பெண் ஏன் அடிமையானாள்’என்ற புத்தகம் இதுவரை பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு காலக்கட்டத்திலும் பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது. சமீபமாக, திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கவிஞர் தம்பி, இந்த நூலை லட்சக்கணக்கில் அச்சிட்டு மலிவுவிலையில் (ரூ.10) அளித்துள்ளார்.

“பெண்கள் ஆண்களைப் போன்று துணிவாக நடந்து கொள்ளவேண்டும். பெண்கள் தனியாக வாழமுடியும்; எதையும் சாதிக்க முடியும் என்கின்ற நிலையில் வாழ வேண்டும். சுதந்திரமாக, கவலையற்று வாழ, தொல்லையற்று வாழ, அறிவைக் கொண்டு சிந்தித்து, அதன்படி நடந்துகொள்ள வேண்டும்” என்று பத்து அத்தியாயங்களில் பெண்கள் ஏன் இந்த இழிநிலையில் உள்ளார்கள் என்பதை எடுத்துரைக்கிறார் தந்தை பெரியார்.

பெரியாரின் வலிமையான கருத்துக்கள் பொதிந்த இந்நூல் திருமணம், பொது நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பெரியாரின் பிறந்தநாளில் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் இந்நூல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இனி எதிர்காலத்தில் ‘ஒரு கோடி கைகளில் பெரியார்’காலப் பொக்கிஷமாக விளங்குவார்.

பெரியாரைப்பற்றிய அறிய நூல்கள்...தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய நூல்கள் இதோ...

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்

விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பெரியார் அன்றும்-இன்றும்’ என்ற நூல் பெரியாரின் கருத்துக்களின் பெட்டகம். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இதுவரை விற்றுத் தீர்ந்திருக்கின்றன. பெரியாரின் சிந்தனை களஞ்சியம் இந்நூல். புத்தகக்கண்காட்சிகளில் இந்நூலுக்கு தேவை அதிகமாக இருக்கிறது.

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்

திராவிடர் கழகத் தலைவர்- ஆசிரியர் கி.வீரமணி எழுதி திராவிடர் கழக வெளியீடாக வந்துள்ள ‘நீதிமன்றங்களில் தந்தை பெரியார்’ என்ற நூல் பெரியார் சந்தித்த வழக்குகள், வாதங்கள், நீதிமன்ற தீர்ப்புகளை பட்டியலிடுகிறது.

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்

திராவிட இயக்கச் சிந்தனையாளர்- பேராசிரியர் பசு.கவுதமன் எழுதிய ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?’ என்ற நூலை நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. 5 பாகங்கள் கொண்ட இந்நூல் பெரியார் பற்றிய ஒட்டுமொத்த சிந்தனைக்கும் அறிமுகமாக அமைந்துள்ளது.

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்

எஸ்.வி.ராஜதுரை மற்றும் வ.கீதா ஆகியோரின் பெரியாரின் வாழ்க்கை வரலாற்று ஆய்வு 'பெரியார்: சுயமரியாதை சமதர்மம்' என்ற நூலில் விரிவாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமான நூலான இது தற்போது அச்சில் இல்லை. இதன் தொடர்ச்சியாக எஸ்.வி.ராஜதுரை 'பெரியார்: ஆகஸ்ட் 15' என்ற நூலையும் எழுதியுள்ளார்.

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்

நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியீட்டில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதிய ‘சுயமரியாதை ஒரு நூற்றாண்டின் சொல்’என்ற இந்நூல், சமூக நீதியை நிலைநிறுத்துவதற்காக தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிராகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பல்வேறு நிலைப்பாடுகளை அலசுகிறது.

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்

திராவிட இயக்கச் சிந்தனையாளரும், கலைஞர் தொலைக்காட்சி செய்திப்பிரிவுத் தலைவருமான ப.திருமாவேலன் எழுதி நற்றிணைப் பதிப்பகம் சார்பில் வெளிவந்துள்ள ‘ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?’ என்ற இந்நூல் பெரியார் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பெரியாரின் சிந்தனைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைத்த அவரது கருத்துக்களையும் உள்ளடக்கியது.

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்

பெரியாரின் வாழ்வியலை முன்வைத்து, பாரதி புத்தகாலய வெளியீடாக பேராசிரியர் பசு.கவுதமன் எழுதிய, ‘ஈ.வெ.இராமசாமி என்கிற நான்’என்ற மூன்று பாகங்கள் கொண்ட 1364 பக்கங்கள் உடைய இந்நூல் விற்பனையில் புதிய சாதனையை படைத்து வருகிறது.

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்

வரலாற்று எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார் எழுதியுள்ள 'பெரியார்' என்ற நூல் மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் பெரியாரின் வாழ்க்கையும் சிந்தனைகளையும் அறிமுகம் செய்யும் சிறு நூல். இந்நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்

திராவிடர் கழக வெளியீட்டில் பெரியார் பெருந்தொண்டர் கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதிய ‘பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்’ என்ற நூல் பெரியாரின் பெருமைகளை பேசும்நூல். புத்தக சந்தைகளில் அனைவரையும் கவரும் நூலாகத் திகழ்கிறது.

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்

வானவில் பதிப்பகம் சார்பில் பேராசிரியர் சுப.வீ எழுதிய ‘பெரியாரின் இடதுசாரி தமிழ்தேசியம்’ என்னும் நூல் பெரியாரின் நுண் அரசியலை பேசுகிறது.

‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்

சமூக செயற்பாட்டாளரும், பேராசிரியருமான அ.மார்க்ஸ் எழுதிய ‘பெரியாரின் கல்விச் சிந்தனைகள்’ என்ற நூல், பெரியாரின் கல்வியியல் தொடர்பான கட்டுரைகளை முன்வைத்து, அவற்றை ஆய்வுசெய்யும் அற்புத நூலாகும்.

பெரியார் தமிழகத்தின்- தமிழர்களின் பாதுகாப்பு அரண். எப்போதெல்லாம் தமிழருக்கு இன்னல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பெரியார் தேவைப்படுவார். அவரைப்பற்றிய நூல்கள் வந்து கொண்டே இருக்கும். நாம் வாசித்து அறிவை வளப்படுத்தி... இனத்தை பலப்படுத்துவோம்!.

banner

Related Stories

Related Stories