முரசொலி தலையங்கம்

குற்றத்தைத் தடுக்க திறமை இல்லாத முதலமைச்சர்; தனி நீதிமன்றம் போடுவதால் என்ன பயன்? - முரசொலி கேள்வி!

எம்.எல்.ஏ.சரவணன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவரது பதவியைப் பறித்திருக்க வேண்டாமா போக்சோ போராளி விஜய்?

குற்றத்தைத் தடுக்க திறமை இல்லாத முதலமைச்சர்; தனி நீதிமன்றம் போடுவதால் என்ன பயன்? - முரசொலி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (04-11-2026)

தடுக்க மாட்டாராம்... தனி நீதிமன்றம் அமைப்பாராம்!

குற்றத்தைத் தடுக்கச் சொன்னால் தனி நீதிமன்றம் அமைக்கப் போகிறேன் என்று அறிவிப்பு செய்கிறார் முதலமைச்சர் விஜய். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் இருக்கிறவர்தான் விஜய்.

நாடு முழுக்க பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டது. அதைத் தடுக்க முதலமைச்சர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக குற்றங்கள் அனைத்தும் நடந்து முடிந்த பிறகு, விசாரணை செய்ய தனிநீதிமன்றங்கள் அமைக்கப்போவதாக பீடிகை போட்டுள்ளார் விஜய். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் 26 போக்சோ நீதிமன்றங்களை அமைக்க விஜய் உத்தரவிட்டு இருப்பதாக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

நாடு முழுக்க அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்க முதலமைச்சர்என்ன செய்தார்? எதுவமில்லை. முதலில் அவர் தன் கட்சியினர் மீது வரும் பாலியல் பகார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. ஒரு அமைச்சர் தன் கட்சி பெண் உறுப்பினர்களை எப்படி பாலியல் வேட்டையாடி வருகிறார் என்பது சமூக வலைதளங்களில் அவரது கட்சிப் பெண்களால் ஆடியோக்களாக வெளியாகி வருகிறது. தனது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொண்ட பிறகு தான் அவர் பதவிகளைப் பெற்றுத் தருகிறார். இதனை அவர் வழக்கமாக வைத்துள்ளார் என்று அந்தப் பெண்கள் சொல்கிறார்கள். இதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் போக்சோ போராளி விஜய்?

ஆட்சி மீதோ, தன் மீதோ சமூக வலைதளத்தில் வரும் பதிவுக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்கும் முதலமைச்சர் விஜய், ஒரு அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது குற்றம் சாட்டியவர் விஜய் ரசிகை. த.வெ.க. கட்சியில் இருப்பவர். எம்.எல்.ஏ. பெயரைச் சொல்லி தான் த.வெ.க. உறுப்பினர்களால் அந்த ரசிகை வேட்டையாடப்பட்டார். இதுவரை எம்.எல்.ஏ.சரவணன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவரது பதவியைப் பறித்திருக்க வேண்டாமா போக்சோ போராளி விஜய்?

அமைச்சர்களோ, க.வெ.க. எம்.எல்.ஏ.க்களோ தவறு செய்தால் விஜய்யால் நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்களது தயவால் தான் இவர் முதலமைச்சராக இருக்கிறார். அவர்களைத் தூக்கினால் தனது நாற்காலி கவிழ்ந்துவிடும். அதனால் அவர் நடவடிக்கை எடுப்பது இல்லை.

த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீதுதான் எத்தனை பாலியல் புகார்கள். இதுவரை அவர் எடுத்த நடவடிக்கை என்ன?

குற்றத்தைத் தடுக்க திறமை இல்லாத முதலமைச்சர்; தனி நீதிமன்றம் போடுவதால் என்ன பயன்? - முரசொலி கேள்வி!

இதேபோல் போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கவும் 7 தனி நீதிமன்றங்களை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் விஜய். இதை அமைப்பதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா?

வெட்டவெளியில் போதை மருந்து பயன்படுத்தி, அதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டவர் அமைச்சர் சரத்குமார் . அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அந்த வீடியோ காட்சிகள் வெளியானதும் அவர் பதவியை பறித்திருந்தால் விஜய் சரியான நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லலாம். சரத்குமாரை சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலக வைத்திருந்தால் விஜய் சரியான நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லலாம். இதைச் செய்யவில்லை விஜய். 'அமைச்சர் சரத்குமார் அதிகமான பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்ட வேண்டாம்' என்று உத்தரவு போட்டுள்ளார்களாம். இதெல்லாம் ஒரு தண்டனையா?

சரத்குமாரை நீக்கினால் ஆட்சிக்கான ஆதரவில் ஒன்று குறைந்து போகும். எனவே தனது நாற்காலியைக் காக்க சரத்குமாரைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார் விஜய்.

நாகையில் ரூ.300 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தியதாக த..வெ.க. நிர்வாகி பூபாலனை மத்திய வருவாய் புலனாய்வு காவல் துறை கைது செய்துள்ளது. விஜய் அரசு கைது செய்யவில்லை. ஒன்றிய அரசு தான் கைது செய்துள்ளது. விஜய் வைத்துள்ள போதைப் பொருள் தடுப்புத் துறை என்ன செய்கிறது? அவர்கள் ஏன் பூபாலனை கைது செய்யவில்லை. ஒழுங்காக கண்காணித்திருந்தால் இவர்கள் தானே பூபாலனை கைது செய்திருக்க வேண்டும்? க.வெ.க. நிர்வாகி என்பதற்காக த.வே.க. ஆட்சி பூபாலனை கைது செய்யாமல் வைத்திருந்ததா? இந்த ஆட்சியின் தயவில்தான் அவர் போதைப் பொருள் கடத்தினாரா?

கைது செய்யப்பட்ட பூபாலன் த.வெ.க.நிர்வாகி. த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டாமா? உள்துறையைக் கையில் வைத்திருப்பவர் முதலமைச்சர் விஜய். முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டாமா?

பூபாலனை கட்சியில் சேர்த்து விட்டு செயற்குழு உறுப்பினர் பதவியை வாங்கித் தந்தவர் த..வெ.க. நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன். அவர் மீது விஜய் என்ன நடவடிக்கை எடுத்தார்? பூபாலனின் பணம் கடந்த சட்டமன்றத் தேர்த- லில் த.வெ.க.வுக்காக செலவ செய்யப்பட்டுள்ளது என்றால் கட்சித் தலைவர் என்ற முறையில் விஜயின் பதில் என்ன? அவர் இதற்கு பொறுப்பேற்க வேண்டாமா? பூபாலனுக்கு துணையாக இருந்த காவலர்கள் இருவர், இடமாற்றம் தான் செய்யப்பட்டுள்ளார்கள். விஜய் பொறுப்பில் இருக்கும் உள்துறையின் லட்சணம் இதுதான்.

கேரள மாநில மதுவிலக்கு காவல்துறை நீலகிரிக்கு வந்து முகமது நசீப் என்பவரை அக்டோபர் 23 ஆம் தேதி கைது செய்தார்கள். முகமது நசீப், த.வெ.க.வின் நீலகிரி மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் பதவியில் இருக்கிறார்.

இவர் மீதான குற்றம் என்ன தெரியுமா? கோள மாநிலம் வயநாடு பகுதியில் MDMA போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவாகி இருக்கிறது. தன் கட்சி மாவட்ட நிர்வாகி போதைப் பொருள் கடத்தியது த.வெ.க. ஆட்சிக்கு தெரியாமல் போனது எப்படி? உள்துறையை வைத்து விஜய் என்ன செய்கிறார்.

தமிழ்நாட்டில் த..வெ.க. நிர்வாகிகளால் கடத்தப்படும் போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு போலீஸார் கண்டு பிடிக்கிறார்கள். கேரள போலீஸார் கண்டு பிடிக்கிறார்கள். விஜய் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை. தமிழ்நாடு காவல் துறையின் கைகளை கட்டிப் போட்டுள்ளார் விஜய்.

குற்றங்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறவர்களாக காவல் துறையை மாற்றிவிட்டு, தனி நீதிமன்றம் போடுவதால் என்ன பயன்?

குற்றத்தைத் தடுக்க திறமை இல்லாத முதலமைச்சர், சமாளிக்க தனி நீதிமன்றம் என நடிக்கிறார்.

banner

Related Stories

Related Stories