முரசொலி தலையங்கம்

‘நீட்’ விலக்குப் போராட்டம்.. நெருப்பை அணையாமல் காத்தது திமுக : பாகம் 2-யை வெளியிட்ட முரசொலி தலையங்கம்!

நீட் தேர்வு தொடர்பான போராட்டம் இந்தியா முழுமைக்கும் தொடரும் நிலையில், அதற்கான அடித்தளத்தை அமைத்தது திமுக தான் என, திமுக-வின் பங்களிப்பை 2-வது பாகமாக வெளியிட்டுள்ளது முரசொலி தலையங்கம்.

‘நீட்’ விலக்குப் போராட்டம்.. நெருப்பை அணையாமல் காத்தது திமுக : பாகம் 2-யை வெளியிட்ட முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

முதல் குரல் எழுப்பிய கலைஞரும் தொடர் போராட்டம் நடத்திய தலைவரும் - (2)

"தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும்; அதை எதிர்க்கும்!”என்று தலைவர் கலைஞர் காட்டிய வழியில் நடந்தார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் மாநில அளவில் நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வுகளை, 2007- ஆம் ஆண்டு அகற்றி, அதற்காகத் தனிச்சட்டம் இயற்றினார்கள். அச்சட்டத்திற்கு மாண்புமிகு குடியரசுத் தலைவருடைய ஒப்புதலையும் பெற்று, கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் நலன் காக்கப்படுவதை உறுதிசெய்தார். இதன் அடிப்படையில் தான், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிலே மருத்துவ மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று, திறன்மிக்க நம் மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி பயிலக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

ஆனால், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட ‘நீட்' தேர்வுக்கான திருத்தச்சட்டம், அதன் பிறகு கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியவை மருத்துவ மாணவர் சேர்க்கையில் ‘நீட்’ தேர்வைக் கொண்டு வந்தது. இது நமது மாணவர்களை வெகுவாக பாதித்தது. எனவே, இதனை தி.மு.கழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

2016 முதல் தி.மு.க. தனது எதிர்ப்பை பதிவு செய்து வந்தாலும் 2021 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மாபெரும் சட்டப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

‘நீட்' தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே. இராஜன் தலைமையில் ஒருகுழுவை அமைத்தார். 10.06.2021 அன்று இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிலே பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம்பெற்று இருந்தார்கள். பொதுமக்கள் அனைவரிடமிருந்தும் கருத்துக்களைஇக்குழு கேட்டுப் பெற்றது. 86 ஆயிரத்து 342 பேர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்கள். இந்தக் கருத்துகளை ஆராய்ந்து, தனது விரிவானபரிந்துரைகளை நீதியரசர் ஏ.கே.இராஜன் குழு 14.07.2021 அன்று அரசுக்கு அளித்தது.

‘நீட்' தேர்வை ரத்து செய்யும் சட்டம் கொண்டு வரலாம் என இக்குழு பரிந்துரை செய்தது. 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 3/2007) போன்றதொருசட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி அதற்காகக் குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்தது.

இந்த உயர்மட்டக் குழு அளித்த விரிவான பரிந்துரைகளைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள, தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் அரசு செயலாளர்களைக் கொண்ட குழு ஒன்று 15.07.2021 அன்று அமைக்கப்பட்டது. செயலாளர்கள் குழுவும் 'நீட்' விலக்குச் சட்டத்தை உருவாக்க பரிந்துரை செய்தது. இதன் தொடர்ச்சியாக 'நீட்' தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை 13.9.2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார்.

மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிஆகிய இளநிலை மருத்துவக் கல்விச் சேர்க்கைகளை, இனிமேல் 12-ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்துவதற்கு ஏதுவாக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு"தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு - 2021” என்ற பெயர்.

அப்படி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தார் முதலமைச்சர். ஆளுநர் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருந்தார். 27.11.2021 அன்று நேரில் சென்று ஆளுநரிடம் முதலமைச்சர்வலியுறுத்தினார். 28.12.2021 அன்று அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன்புதுடெல்லி சென்று குடியரசுத் தலைவர் அவர்களைச் சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினார்.

17.1.2022 அன்று நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் குழு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியது. இவ்வளவுக்குப் பிறகும் ஆளுநர் அசைந்து கொடுக்கவில்லை. 1.2.2022 அன்று அதனைத் திருப்பி அனுப்பினார் ஆளுநர்.

உடனடியாக 05.02.2022 அன்று சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி சட்டமுன்வடிவு மீண்டும் 08.02.2022 அன்று பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. பிரதமரைச் சந்தித்தும் முதலமைச்சர் வலியுறுத்தினார்கள்.

இது குறித்து, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை-- ஆயுஷ்துறை – உள்துறை- உயர்கல்வித் துறை என பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கங்களையும் வழங்கியது. அதன்பிறகும் சட்டத்துக்கு ஒப்புதலை வழங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படி தொடர்ச்சியாக சட்டப்போராட்டத்தை நடத்தியவர்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இன்றைக்கு ‘நீட்' விலக்குப் போராட்டம் இந்தியா முழுமைக்கும் பற்றி எரிகிறது என்றால் அதற்கு பத்தாண்டு காலமாக அடித்தளம் அமைத்து அந்த நெருப்பை அணையாமல் காத்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

banner

Related Stories

Related Stories