முரசொலி தலையங்கம்

“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!

நீதி என்பது குழப்பங்களைப் போக்கும் தெளிவான நடவடிக்கையாக இருக்க வேண்டும், பொறுப்புகளை குழப்பும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது.

“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நிறைகள் நிறைந்த தலையங்கம்!

கரூர் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவாக தீர்ப்பைத் தந்துள்ளது. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் இதனை விமர்சித்து தலையங்கம் தீட்டி இருக்கிறது. ‘குறைகள் நிறைந்த உத்தரவு’ என்ற தலைப்பில் உள்ளது. ‘தி இந்து’ நாளிதழின் இந்த தலையங்கம், நிறைகள் நிறைந்ததாக இருக்கிறது. இதற்காக ‘தி இந்து’ நாளிதழைப் பாராட்டுகிறோம்.

‘கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது பல கவலையளிக்கும் கேள்விகளை எழுப்புகிறது’ என்று சொல்லி இருக்கிறது ‘தி இந்து’.

•நீதித்துறையின் தலையீடு குற்றப் பின்னணியைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, அரசியல் ரீதியான விளங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியது உள்ளது.

•சி.பி.ஐ. விசாரணை மற்றும் நீதித்துறை மேற்பார்வைக்கான மனுதாரர்களின் கோரிக்கைகள் ‘இடைக்கால நிவாரணமாக’ வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகள் மாற்ற முடியாதது. சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின், மீண்டும் மாநில காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட முடியாது.

•வழக்கை சி.பி.ஐ.–க்கு மாற்றியமைக்க உச்சநீதிமன்றம் கூறும் காரணங்களும் அதிகம் சிக்கல் நிறைந்தவையாகும்.

“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!

•மூத்த அதிகாரிகள் நடத்திய செய்தியாளர் சந்திப்புகள், கீழ்நிலை அதிகாரிகள் மீது நிர்பந்தம் செலுத்தும் முயற்சி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் உச்சநீதிமன்றம் கூறுகிறது. ஆனால் இந்த கருத்து அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பூட்டும் நடவடிக்கையாகும். இந்த சம்பவத்தின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக விஜய்யும் அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டினர். ‘நடுநிலையாக இருக்க வேண்டும்’ என்பதற்காக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு அரசு அதிகாரிகள் பதிலளிப்பதைத் தவிர்க்க வேண்டுமா?

•வீடியோ உள்ளிட்ட உண்மையான ஆதாரங்களை வெளியிடுவது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருத முடியாது.

•ஒன்றிய அரசின் கூண்டுக் கிளி என நீதிமன்றத்தால் வர்ணிக்கப்பட்ட சி.பி.ஐ.க்கு இந்த வழக்கை மாற்றுவதற்கு இது மிகவும் பலவீனமான காரணமாகும்.

•மேற்கு வங்க அரசுக்கும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழுவுக்கும் இடையே நடந்த வழக்கில், ‘உள்ளூர் காவல்துறை மீது சிலர் குற்றச்சாட்டுகள் சுமத்துவதாலேயே, சி.பி.ஐ. விசாரணைகளுக்கு உத்தரவிட முடியாது’ என உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஆனால், தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு, உச்சநீதிமன்றத்தின் முந்திய உத்தரவுகளில் இருந்து முரண்படுவதாக உள்ளது.

•பேரணியை ஏற்பாடு செய்ததிலும், த.வெ.க. தலைவர்களின் பொறுப்புகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. தவறு செய்தவர்கள் யார் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது. ‘உயர் நீதிமன்ற விசாரணையின் போது த.வெ.க. தரப்பு விசாரிக்கப்படவில்லை’ என்பதை இந்த உத்தரவு சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இக்கருத்து நியாயமான விசாரணையின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை கணக்கில் கொள்ளவில்லை.

“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!

•ஒரு மனுதாரர் தனக்குத் தெரியாமலேயே தனது பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குற்றம்சாட்டி உள்ளதையும், பல ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தை கைவிட்டுச் சென்றவர் உயிரிழந்த குழந்தையின் உண்மையான பிரதிநிதி அல்ல என்ற புகாரையும் உச்சநீதிமன்றம் எவ்வாறு கையாளுகிறது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

•நீதி என்பது குழப்பங்களைப் போக்கும் தெளிவான நடவடிக்கையாக இருக்க வேண்டும், பொறுப்புகளை குழப்பும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது.

– ஆகியவை ‘தி இந்து’ நாளிதழ் எழுதி உள்ள தலையங்கத்தின் உள்ளடக்கம் ஆகும். மிகமிகச் சரியாக, துல்லியமாக இத்தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது தமிழ்நாடு அரசு. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு விசாரணைக் குழு ஆஸ்ரா கர்க் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விசாரணைகளும் நடந்து வரும் நேரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவாக பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் மனு தாக்குதலுக்கு பிறகு இந்த உத்தரவு மாறலாம்.

கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு மீது குற்றம் சுமத்த எந்த வழிவகையும் இல்லை. 26.09.2025 அன்று அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர், வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரினார். அவர் கொடுத்த மனு ஏற்கப்பட்டு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அக்கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என அக்கட்சியினர் மதிப்பிட்டனர். அதற்கு ஏற்ற வகையில் மட்டுமல்ல; கூடுதலாக காவலர்கள் பாதுகாப்பு தரப்பட்டது. மொத்தம் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தீயணைப்பு துறையைச் சேர்ந்த 17 வீரர்கள் அங்கு பணியில் இருந்தனர்.

“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!

அக்கட்சியின் தலைவர் வருவதற்கு முன்னால் குறிப்பிட்ட இடத்தில் ரசிகர்கள் அதிகம் குவிந்திருப்பது, அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அதனை அவர்கள் மதிக்கவில்லை. தவறான பாதையில் விஜய் வாகனம் சென்று, தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தியது. மதியம் 12 மணிக்கு வருவதாகச் சொன்ன விஜய், இரவு 7 மணிக்குத்தான் வந்தார். ஏழு மணி நேரமாக மக்கள் காத்திருந்தனர். உரிய நேரம் சொல்லப்படவும் இல்லை. சொல்லப்பட்ட நேரத்துக்கு வரவும் இல்லை. இதுதான் முதல் குழப்பத்துக்கு காரணமாக அமைந்திருந்தது.

காலை முதல் காத்திருந்த மக்களுக்கு குடிநீர் தரப்படவில்லை. குடிநீர் கிடைக்கவில்லை. உணவு வழங்கப்படவில்லை. உணவு வழங்குவதற்கான எந்த ஏற்பாடுகளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. வெளியில் அவர்களைச் செல்ல அனுமதிக்கவும் இல்லை. ‘கயிறு வைத்து கட்டி வைத்திருந்தார்கள்’ என்று ஒரு பெண் பேட்டி அளித்துள்ளார். இவை அனைத்தும் தள்ளுமுள்ளு ஆகி, ஒரு ஆள் மீது இன்னொருவர் விழுந்து, மிதித்தார்கள்.

இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டியவர் விஜய்தான். எனவே, சி.பி.ஐ. காவல் துறையால் விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் அவர்தான்.

banner

Related Stories

Related Stories