முரசொலி தலையங்கம்

முதலமைச்சர் சொன்னதை வழி மொழியும் இரண்டு நீதியரசர்களின் குரல்கள் : முரசொலி!

அரசமைப்புச் சட்டத்தை எழுதிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னசொல்லைத் தான் முதலமைச்சர் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

முதலமைச்சர் சொன்னதை வழி மொழியும் இரண்டு நீதியரசர்களின் குரல்கள் : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (27-08-2025)

இரண்டு நீதியரசர்களின் குரல்கள்!

தமிழ்நாடு அரசின் மாநில சார்பில் ஒன்றியம் - உறவுகள் குறித்த தேசியக்கருத்தரங்கம் சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதில் பங்கேற்ற இரண்டு நீதியரசர்களின் குரல்கள், மிகமிக முக்கியமானவை ஆகும்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர்களான குரியன் ஜோசப், செல்லமேஸ்வரர் ஆகிய இருவரும் ஒன்றிய அரசு புரிந்து தெளிவுபடுத்த வேண்டிய பல கருத்துக்கள் கருத்தரங்கில் வெளிப்படுத்தினார்கள்.

*‘‘இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் தான். இதனை இந்திய அமைப்புச் சட்டம் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறது. நமது அரசியல்சட்டம், கூட்டாட்சி முறையை கொண்டது. ஜனநாயக நாட்டில் மக்களும், ஒன்றிய அரசும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும்” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன். ஜோசப்.

*‘‘மத்திய அரசு என்ற வார்த்தை அரசமைப்புச் சட்டத்தில் இல்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் கூட்டாட்சியை கொண்டது. ஒன்றிய அரசின் அதிகாரங்கள், அனைத்து மாநிலங்களுக்குமானவை என பரவல் ஆக்கப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் செல்லமேஸ்வரர் முழங்கி இருக்கிறார்.

‘ஒன்றியம்’ என்ற சொல்லை முதலமைச்சர் அவர்கள் சொன்னபோது, ​​அது ஏதோ கேவலமான சொல்லைப் போல பலரும் விமர்சிக்கிறார்கள். ‘ஒன்றியம்’ என்று சொல்லக் கூடாது என்றார்கள். ஆனால் இப்போது நீதியரசர்களே அதனைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தை எழுதிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னசொல்லைத் தான் முதலமைச்சர் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

“கூட்டாட்சி என்ற சொல்லுக்குப் பதிலாக ஒன்றியம் (யூனியன்) என்றசொல்லே குழுவினால் குறிப்பிடப்பட்டுள்ளதை யாவரும் காணலாம். பெயரில்மிக்க பொருள் இல்லை; ஆயினும், குழு பிரிட்டிஷ் முறையில் வட அமெரிக்கச் சட்டத்தின் (கி.பி. 1867 ஆம் ஆண்டு) முன்னுரையிலுள்ள சொல்லை நடை ஏற்க முனைந்துள்ளது; அதுவே இந்தியாவை ‘ஒன்றியம்’ என்று குறிப்பிடுவதனால் உண்டாகும் நலன்களை அறிந்துள்ளது; இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, அமைப்பிலே கூட்டாட்சியாக இருந்தாலும், இந்தியா ஒன்றியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

(நமது அரசியலமைப்பு)காலச் சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக ஓரரசு முறையாகவும் (Unitary State), கூட்டாட்சி முறையாகவும் (Federal State) இயங்கக் கூடியதும் ஆகும்” என்று சொன்னார் அம்பேத்கர் அவர்கள்.

மாநில ஒன்றிய உறவுகளை ஆராய குழுவின் தலைவரான நீதிபதி சர்க்காரியா அவர்கள் கூறினார்:

‘‘இந்தியாவில் பொதுவாகப் பெருமளவில் அதிகாரக் குவிப்பு நடைபெற்று வருகிறது. இதைத் தடுப்பதற்குப் பயனுள்ள வகையிலும் மனசாட்சியுடனும் எல்லா நேரங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறிய அதிகாரக்குவியல்களால் (Undue Powers) மத்திய அரசுக்கு இரத்தக் கொதிப்பும், மாநில அரசுகளுக்கு இரத்த சோகையும் ஏற்படுவது உண்மையாகும். இதன் விளைவு என்னவெனில், திறமையின்மையும் நோயும்தான் இதன் வெளிப்பாடுகளாக உள்ளன. உண்மையில் அதிகாரக் குவியல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீமைகளைப் பெருக்கியுள்ளது” என்றார் அவர்கள் சொல்லி வருகிறார்கள்.

‘‘இந்திய திருநாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரும் பொறுப்பை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி,நகர்ப்புற மேம்பாடு என அனைத்தையும் மாநிலங்கள்முன்னெடுத்துச் செல்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் நிறைவேற்றிடத்தேவையான அதிகாரங்கள் இருந்து பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டு வருகின்றன. பசியால் வாடித் தவிக்கும் தன்னுடைய குழந்தைக்கு என்ன உணவு கொடுத்திட வேண்டும் என்பது அந்த குழந்தையின் தாய்க்கு தான் தெரியும். ஆனால், அந்த குழந்தை உண்ணும் உணவை, கற்கும் கல்வியை, கடந்து செல்லும் பாதையினை, டெல்லியில் இருந்து யாரோ ஒருவர் தீர்மானித்தால் கருணையே உருவான தாய்மையும் பொங்கி எழத்தானே செய்யும்?” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேட்ட முதலமைச்சர் அவர்கள் இது குறித்து ஆராய குழு அமைத்துள்ளார்கள்.

முதலமைச்சர் சொன்னதை வழி மொழியும் இரண்டு நீதியரசர்களின் குரல்கள் : முரசொலி!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய- மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் திரு.குரியன் ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்ட முதலமைச்சர் அவர்கள்அமைத்துள்ளனர். இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். மாநில அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இருக்கிறார்கள்.

இக்குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனவரி மாத இறுதிக்குள், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்க வேண்டும் அவர்கள் கேட்டுக்குக் கொண்டிருக்கிறார்கள்.

மாநில ஒன்றிய அரசுகளின் அதிகாரங்கள், உறவுகள் குறித்து ஆராய ஒன்றிய அரசு இதுவரை மூன்று ஆணையங்களை அமைத்துள்ளது. பிரதமர் இந்திரா காந்தி, நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை 1983 ஆம் ஆண்டு அமைத்தார். பிரதமர் மன்மோகன் சிங், நீதிபதி பூஞ்சி தலைமையில் 2007 ஆம் ஆண்டு ஒரு குழுவை அமைத்தார்.2000 ஆம் ஆண்டு நீதிபதி வெங்கடாச்சலய்யா தலைமையில் அரசமைப்புச் சட்டத்தின் ஆய்வு ஒரு குழுவை அமைத்தார் பிரதமர் வாஜ்பாய்.

மாநில அரசின் சார்பில் இதற்கான குழுவை முதன்முதலில் நீதியரசர் இராஜமன்னார் தலைமையில் 1971 ஆம் ஆண்டு அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதன் தொடர்ச்சியாக குரியன் குழுவை அமைத்துள்ளார் இன்றைய முதலமைச்சர்.

கூட்டாட்சியை வலியுறுத்துவது, மாநில சுயாட்சி கேட்பதும் அரசியல் கோரிக்கை அல்ல. ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல. இந்தியாவுக்கான கோரிக்கை. இந்திய ஒருமைப்பாட்டை காக்கும் கோரிக்கை தான் என்பதை உச்சநீதிமன்ற நீதியரசர்கள் இருவருமே ஒப்புக்கொண்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories