முரசொலி தலையங்கம்

மோ(ச)டி தேர்தல் ஆணையம் : அம்பலமான பா.ஜ.கவின் சதி திட்டம் - முரசொலி கண்டனம்!

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் தேர்தல் நடந்தால் நியாயமான தேர்தலாக அது இருக்காது.

மோ(ச)டி தேர்தல் ஆணையம் : அம்பலமான பா.ஜ.கவின் சதி திட்டம் - முரசொலி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (12-08-2025)

மோ(ச)டி தேர்தல் ஆணையம்!

பிரதமர் நரேந்திர மோடியின் நாற்காலியைப் பிடித்து ஆட்டியிருக்கிறார் ராகுல் காந்தி. வாக்குத் திருட்டு’ மூலமாக ‘திருட்டு வெற்றி’யை பா.ஜ.க. ராகுல் காந்தி சொல்லி இருக்கிறார். பிரதமரும் உள் அமைச்சரும் வாய்மூடிக் கிடக்கிறார்கள். போலித் தேர்தல் அம்பலமானதை மவுனத்தால் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று இந்திய நாட்டின் முக்கியமான ஊடகங்கள் அனைத்தையும் அழைத்து படம் போட்டுக் காட்டிவிட்டார் ராகுல் காந்தி. ‘மோசடித்தனமான’ தேர்தலை, ‘மோசமான’ முறையில் தேர்தல் ஆணையம் ‘முறையாக’ நடத்திக் காட்டி இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டினார் ராகுல் காந்தி.

1. கர்நாடகாவில் உள்ள மத்திய பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. போலி வாக்காளர்கள், இல்லாத முகவரிகள், ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள், செல்லாத புகைப்படங்கள், படிவத்தின் 6–இன் தவறான பயன்பாடு காரணமாக இந்த மோசடி நடந்துள்ளது.

போலி வாக்காளர்களாக 11,965 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தவறான முகவரி கொடுத்தவர்களாக 40,009 பேர் உள்ளனர். ஒரே முகவரியில் 10,452 பேர் உள்ளனர். 4,132 வாக்காளர்களுக்கு நிழற்படம் இல்லை. படிவம் 6 ஐ தவறாகப் பயன்படுத்தி இருப்பவர்களின் எண்ணிக்கை 33,692 ஆகும்.

2.ஐந்து மாதங்களில் அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 வயதுக்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. வாக்குப்பதிவு நாளில் மாலை ஐந்து மணிக்குப் பிறகு திடீரென வாக்குப்பதிவு அதிகரித்தது.

3. தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தொடர்பானவற்றை வழங்காமல் காலம் தாழ்த்துகிறது ஆவண மற்றும் சிசிடிவி காட்சிகள் போன்ற ஆதாரங்களை அழிக்கிறது.

4. படிவம் 6 – தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் படிவம் இது. இந்தப் படிவத்தைப் பயன்படுத்துவோர் வயது வரம்பு பெரும்பாலும் 18 – 25 வயதாக இருக்கும். ஆனால் இந்த வயதில் எவரும் இல்லை. 8,97,85,75 வயதுகளில் பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். 70 வயது மூதாட்டி ஒருவர் தனது பெயரை இரண்டு வாக்குச் சாவடிகளில் சேர்த்துள்ளார். இரண்டு இடத்திலும் அவர் வாக்களித்துள்ளார்.

5. மகாதேவபுரா தொகுதியில் மட்டும் ஒரே வாக்காளர், வாக்காளர் பட்டியலில் பல்வேறு பூத் எண்களின் கீழ் வருகிறார். ஒரே வாக்காளர் மாநிலங்களின் வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.

6. வாக்குகளைத் திருட தவறான முகவரிகளில் உள்ள பல போலியான வாக்காளர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனர். முகவரிகள் இல்லை அல்லது முகவரி வர வேண்டிய இடங்களில் “0’’ என்று இருக்கிறது.

7. ஒரே முகவரியில் அதிக அளவிலான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 80 பேர் வசிப்பதாக ஒரே வீட்டின் முகவரி உள்ளது. ஆனால் அந்த முகவரியில் அப்படி யாரும் இல்லை. ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் 46 பேரின் பெயர் இருக்கிறது. ஒரே வாக்காளருக்கு நான்கு வாக்குச் சாவடிகளில் வாக்கு இருக்கிறது. கர்நாடகாவில் ஒரு நபர், பல பூத்துகளில் வாக்களித்துள்ளார். ஆதித்யா ஸ்ரீவத்சவா யாருக்கு மகாராஷ்டிராவில் ஒரு வாக்கு, உத்தரப்பிரதேசத்தில் ஒரு வாக்கு, பெங்களூரு மகாதேவபுரத்தில் இரண்டு வாக்குகள் உள்ளன.

8. ஒரே ஒரு தொகுதியில் நடந்த மோசடியைக் கண்டுபிடிக்க ஆறு மாதம் ஆகிவிட்டது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவை வழங்கவில்லை. நாங்கள் இதனை ஆராய்வதை தேர்தல் ஆணையம் விரும்பிய. மின்னணு தரவை தந்தால் முப்பது வினாடியில் மொத்த தவறையும் கண்டுபிடித்துவிடுவோம். மேலும் சிசிடிவி காட்சிகளைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. வாக்குத் திருட்டு மோசடியை மறைக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது.

மோ(ச)டி தேர்தல் ஆணையம் : அம்பலமான பா.ஜ.கவின் சதி திட்டம் - முரசொலி கண்டனம்!

9.வாக்குப்பதிவு கருவிக்கு முன்பாக இந்தியாவில் அனைவரும் ஒரே நேரத்தில் வாக்குச் சீட்டு மூலம் வாக்களித்திருந்தனர். ஆனால் இப்போது தேர்தல்கள் மாதக்கணக்கில் நடக்கின்றன. எதற்கு இத்தனை கட்டங்களாக தேர்தல்கள்? அட்டவணை திடீரென மாற்றப்படுகிறது. இவை அனைத்தும் தேர்தல் நடைமுறையை கட்டுப்படுத்தவே மேற்கொள்ளப்படுகிறது.

10. நான் சொல்லும் வாக்குத் திருட்டுகள் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடைபெறவில்லை, பல இடங்களில் இப்படி நடந்துள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டுவைத்து அக்கட்சி வெல்வதற்கு உதவ வாக்குத்திருட்டில் தேர்தல் ஆணையம் ஈடுபடுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 25 தொகுதிகளில் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்சியில் இருக்க நரேந்திர மோடிக்கு 25 இடங்கள் தேவைப்பட்டது. அதனால்தான் தேர்தல் ஆணையம் எங்களுக்கு டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வழங்கவில்லை. இத்தகைய வாக்குத் திருட்டின் மூலம் ஜனநாயகம் அழிக்கப்படுகிறது.

-– இவைதான் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள். இதற்கு இதுவரை தேர்தல் ஆணையம் முறையான பதிலைச் சொல்லவில்லை.

ராகுல் காந்தி தவறாக வழிநடத்துவதாக தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. ராகுல் சொன்ன பகிரங்க குற்றச்சாட்டு எதற்கும் நேரடியான பதில் இல்லை. பா.ஜ.க.வின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பதில் சொல்கிறது தேர்தல் ஆணையம். ‘பிரமாணப் பத்திரம்’ எடுத்துக் கொண்டு ராகுல் இதனைச் சொல்ல வேண்டுமா. தேர்தல் ஆணையம் சொல்கிறது. மக்கள் மன்றத்தில் சொல்லி இருக்கிறார் ராகுல். இதனை விட வேறு என்ன வேண்டும்?

‘நான் சொல்வதற்கு நான் பொறுப்பேற்கிறேன்’ என்பது உறுதி செய்துள்ளார் ராகுல். இதை விட வேறு என்ன வேண்டும்?

கடந்த நான்கு ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக மாற்றியது மோடி அரசு. அதன் விளைவுகளைத்தான் 2024 தேர்தலில் நாம் பார்க்கிறோம். தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் தேர்தல் நடந்தால் நியாயமான தேர்தலாக அது இருக்காது. உச்சநீதிமன்றம் இதில் தலையிட வேண்டும்.

banner

Related Stories

Related Stories