முரசொலி தலையங்கம்

இது கல்விக் கொள்கையல்ல, காவிக் கொள்கை: “பாஜக கும்பலுக்கு உச்சநீதிமன்றத்தின் நெற்றியடி” - முரசொலி கருத்து!

முதலில் இந்தி, - அதன்பிறகு சமஸ்கிருதம், இவைதான் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று சொல்வது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை. அதனைத்தான் தேசியக் கல்விக் கொள்கை மூலமாக அமல்படுத்தப் பார்க்கிறார்கள்.

இது கல்விக் கொள்கையல்ல, காவிக் கொள்கை: “பாஜக கும்பலுக்கு உச்சநீதிமன்றத்தின் நெற்றியடி” - முரசொலி கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உச்சநீதிமன்றத்தின் நெற்றியடி!

"பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் கையெழுத்துப் போடுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது" என்று உச்சநீதிமன்றம் நெற்றியடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது,

பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

"நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக ஒன்றிய அரசு தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கிறது. அந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுமைக்கும் 14 ஆயிரம் பள்ளிகளை மேம்படுத்தப் போகிறார்கள்.

இந்த ஒப்பந்தத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்கள் இணையவில்லை. அவர்கள் ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட மறுக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையானது தமிழ் மொழிக்கும், தமிழர் நலனுக்கும் எதிரானது என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்கிறார்கள். இது உண்மைக்கு மாறானது.

இது கல்விக் கொள்கையல்ல, காவிக் கொள்கை: “பாஜக கும்பலுக்கு உச்சநீதிமன்றத்தின் நெற்றியடி” - முரசொலி கருத்து!

அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனவே, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களையும் இத்திட்டத்தில் கையெழுத்துப் போட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கேட்டிருந்தார் பா.ஜ.க. வழக்கறிஞர்.

இந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்த்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு முன்னால் விசாரணைக்கு வந்தது. வழக்குத் தொடுத்திருப்பவரை யார் என்று நீதிபதிகள் கேட்டார்கள். 'நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்' என்றும், 'டெல்லியில் வசிக்கிறேன்' என்றும் அவர் சொன்னார். “டெல்லியில் தானே வசிக்கிறீர்கள், உங்களுக்கு இந்தி கற்றுக் கொள்ள எந்தத் தடையும் இல்லையே, டெல்லியில் இருந்து இந்தியை தாராளமாகக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று நீதிபதிகள் அறிவுரை சொன்னார்கள்.

"மாநிலங்கள், தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது மிகவும் சிக்கலான விவகாரம் ஆகும். நாட்டு மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைநாட்ட முடியும். ஆனால், தேசியக் கல்விக் கொள்கை போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால் அதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியும். எனவே உங்கள் மனுவில் உள்ள கோரிக்கைகளை விசாரணை நடத்த விரும்பவில்லை” என்று சொல்லி பா.ஜ.க. வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்கள்.

இது கல்விக் கொள்கையல்ல, காவிக் கொள்கை: “பாஜக கும்பலுக்கு உச்சநீதிமன்றத்தின் நெற்றியடி” - முரசொலி கருத்து!

தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துங்கள் என்று மாநிலங்களுக்கு உத்தரவிட முடியாது என்று சொன்னது மட்டுமல்ல; தேசியக் கல்விக் கொள்கையானது அடிப்படை உரிமைகளை பாதித்தால் அப்போது தலையிடுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

தேசியக் கல்விக் கொள்கையானது, மாநிலத்தின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாகவே அமைந்துள்ளது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் தமிழ்நாடு சேரவில்லை என்பதற்காக, பள்ளிக் கல்வியின் வேறொரு திட்டத்துக்காக வழங்க வேண்டிய ரூ.2000 கோடி பணத்தை நிறுத்தி வைத்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. பள்ளிக் கல்வித் துறைக்கு தரும் நிதியை, 'மும்மொழித் திட்டத்தை ஏற்காவிட்டால் தர மாட்டோம்' என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

"பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு 2 ஆயிரம் கோடி ரூபாய் இழக்கிறது என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே! தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கிக் கொண்டு இருக்கும் வரியைத் தர மாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும்... மறந்துவிடாதீர்கள்" என்று எச்சரிக்கை செய்தார் முதலமைச்சர் அவர்கள்.

இது கல்விக் கொள்கையல்ல, காவிக் கொள்கை: “பாஜக கும்பலுக்கு உச்சநீதிமன்றத்தின் நெற்றியடி” - முரசொலி கருத்து!

"இந்தத் திட்டத்தில் கையெழுத்துப் போட்டால்தான் இரண்டாயிரம் கோடி பணம் கிடைக்கும் என்றாலும்-பத்தாயிரம் கோடி பணம் கிடைக்கும் என்றாலும் போட மாட்டோம். இரண்டாயிரம் கோடி பணத்துக்காக இன்று கையெழுத்துப் போட்டால் - இரண்டாயிரம் ஆண்டு பின்னோக்கி இந்த தமிழ்ச் சமுதாயம் போய்விடும்.அந்தப் பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்ய மாட்டான்" என்று சொன்னார்.

இந்தியாவில் இப்படி எந்த முதலமைச்சரும் பேசி இருக்க மாட்டார்கள். இப்படி பிளாக் மெயில் செய்யவே இதுபோன்ற திட்டங்களைப் பயன்படுத்துகிறது ஒன்றிய அரசு.

அவர்களுக்கு இந்தியைத் திணிக்க வேண்டும், சமஸ்கிருதத்தை புகுத்த வேண்டும். அதற்காகத்தான் தேசியக் கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் என்று பல்வேறு வித்தைகளைக் காட்டுகிறார்கள்.

'புதிய கல்விக் கொள்கையானது தமிழுக்கும் தமிழர்க்கும் விரோதமானது என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது உண்மைக்கு மாறானது, அரசியல் உள் நோக்கம் கொண்டது' என்று வழக்கு தாக்கல் செய்பவர் சொல்லி இருக்கிறார்.

இது கல்விக் கொள்கையல்ல, காவிக் கொள்கை: “பாஜக கும்பலுக்கு உச்சநீதிமன்றத்தின் நெற்றியடி” - முரசொலி கருத்து!

உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சை அந்த வழக்கறிஞர் படிக்க வேண்டும். "தேசியக் கல்விக் கொள்கையானது சமஸ்கிருதத்தை முக்கியத் தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று பேசி இருக்கிறார்.

இதை வைத்துத்தான் தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரானது தேசியக் கல்விக் கொள்கை என்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

முதலில் இந்தி, - அதன்பிறகு சமஸ்கிருதம், இவைதான் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று சொல்வது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை. அதனைத்தான் தேசியக் கல்விக் கொள்கை மூலமாக அமல்படுத்தப் பார்க்கிறார்கள்.

அதனால்தான், 'இது கல்விக் கொள்கையல்ல, காவிக் கொள்கை' என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதனை உச்சநீதிமன்றத்தின் மூலமாக நுழைக்கப் பார்த்தார்கள். அதுவும் நடக்கவில்லை.

banner

Related Stories

Related Stories