முரசொலி தலையங்கம்

பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என்று காட்டி விட்டார்கள் காஷ்மீரத்து மக்கள்! : முரசொலி புகழாரம்!

“காஷ்மீரத்து வெற்றி!” எனத் தலைப்பிட்டு இந்தியா கூட்டணியின் அபார வெற்றியைப் பறைசாற்றியுள்ளது முரசொலி.

பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என்று காட்டி விட்டார்கள் காஷ்மீரத்து மக்கள்! : முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பார்கள். கன்னியாகுமரியில் ‘இந்தியா கூட்டணி’ முன்பே வென்றுவிட்டது. இப்போது காஷ்மீரத்திலும் வெற்றி பெற்றுவிட்டது!

நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து நடத்தினால் ஜம்மு - காஷ்மீரில் இந்தியா கூட்டணி வென்றுவிடும் என்று நினைத்து தள்ளிப் போட்டார்கள். தனியாக நடத்தினார்கள். சேர்த்து நடத்தினாலும், தனியாக நடத்தினாலும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என்று காட்டி விட்டார்கள் காஷ்மீரத்து மக்கள்.

மொத்தமுள்ள 90 இடங்களில் இந்தியா கூட்டணி 49 இடங்களைக் கைப்பற்றியது. தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைக்கிறது. காஷ்மீரில் வென்று, இசுலாமியர் மண்ணைக் கைப்பற்றிவிட்டோம் என்று காட்ட நினைத்த பா.ஜ.க. மனதில் மண் விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் என்ற மாநிலத்தையும் மக்களையும் சிதைக்க சபதம் எடுத்து ஆட்சிக்கு வந்த கட்சிதான் பா.ஜ.க.

ஒரே நாளில் காஷ்மீர் மக்களின் தனி உரிமைகள் பறிக்கப்பட்டன. அங்கிருந்த அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நாடாளுமன்றத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டது.

இரண்டு யூனியன் பிரதேசங்களாக அதனைப் பிரித்தார்கள் என்றும் தெரிவித்துள்ளது. 370ஆவது பிரிவை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு என்றும், எந்த மாநிலமாக இருந்தாலும் அதனைப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உண்டு என்றும் டெக்னிக்கல் காரணங்களைச் சொல்லி உச்சநீதிமன்றமும் இதனை ஏற்றுக்கொண்டது.

இதனை தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு என்று பா.ஜ.க. மனநிறைவை அடைந்தது. ஆனால் அதே தீர்ப்பில் முக்கியமான உத்தரவும் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு 2024 செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியது. அதைக்கூட ஒழுங்காகச் செய்யாமல் அக்டோபரில் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என்று காட்டி விட்டார்கள் காஷ்மீரத்து மக்கள்! : முரசொலி புகழாரம்!

ஐந்து நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் கெளல், “1980ஆம் ஆண்டு முதல் காஷ்மீரத்தில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க பாரபட்சமற்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையாவது எடுக்கப்பட்டுள்ளதா? இல்லை.

இது எதையும் செய்யாமல் - தேர்தலையும் நடத்தாமல் தள்ளிக்கொண்டே போனார்கள். உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாவோம் என பயந்து தேர்தலை இப்போதும் முழு மனமில்லாமல் நடத்தினார்கள். மக்கள் தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்தார் மோடி.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சிதைத்து யூனியன் பிரதேசம் ஆக்கிய பிரதமர் நரேந்திரமோடியே, “மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவோம் என்று இறங்கி வந்ததையும் பார்த்தோம். இதை மட்டுமா சொன்னார் பிரதமர்? பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 18 ஆயிரம் கொடுக்கப்படும் என்றும் காஷ்மீர் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார் பிரதமர்.

பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என்று காட்டி விட்டார்கள் காஷ்மீரத்து மக்கள்! : முரசொலி புகழாரம்!

‘சில ஆயிரம் கொடுப்பதால் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றிவிட முடியாது என்றாரே இந்த நூற்றாண்டின் பொருளாதார மேதை நிர்மலா சீதாராமன். ஆனால் மோடி சொல்கிறார், 18 ஆயிரம் தருகிறேன் என்று. எதற்காக? விவசாயிகளுக்கு 10 ஆயிரம் தருவேன் என்றார் பிரதமர் மோடி.

இலவச மருத்துவக்காப்பீட்டை 5 லட்சத்திலிருந்து 7 லட்சம் ஆக்குவேன், ஜம்மு - காஷ்மீரின் விரைவான வளர்ச்சியைப் பற்றியே யோசித்து வருகிறேன்... என்று வாக்குறுதிகளை அள்ளிவிட்டாரே? என்ன ஆனது? இது எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. பா.ஜ.க.வை தோற்கடித்துவிட்டார்கள். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது.

இப்படித்தான் முடிவுகள் வரும் என்று முன்பே சிக்னல் காட்டினார்கள் மக்கள் என குறிப்பிட்டுள்ள முரசொலி நாளேடு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லடாக்-கார்கில் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில், ‘இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. 1 இடத்தை மட்டும் வெற்றிபெற்று பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது.

இந்தியா கூட்டணி 22 இடங்களைக் கைப்பற்றியது. 17 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்று 16 இடங்களில் படுதோல்வியைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளது. எனவேதான் மக்களை நம்பாமல் சில சதிவேலைகளைச் செய்தது பா.ஜ.க. 5 பேரை நியமன உறுப்பினர்களாக நியமித்து அவர்களுக்கு வாக்களிக்கும் தகுதியை வழங்கியது. நான்கைந்து எண்ணிக்கை தேவைப்பட்டால் இவர்களை வைத்து ஆட்சி அமைக்க நினைத்தார்கள்.

ஆனால் காஷ்மீரத்து மக்கள் தெளிவான முடிவை எடுத்து குழப்பமில்லாத தீர்ப்பை வழங்கினார்கள். “முதல் முறையாக அரசியல் சாசனத்தின் கீழ் நடைபெறும் காஷ்மீர் சட்டசபைத்தேர்தல் வரலாற்றுச் சிறப்பு மிக்கது” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். ஆமாம்! வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவையே மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.

“காஷ்மீரில் இதுவரை இரண்டு கொடிகள், இரண்டு அரசியல் சாசனங்கள் இருந்தன. இப்போது ஒன்றாக ஆக்கிவிட்டோம் என்று பெருமை அடித்துக்கொண்டார் அவர். ஒன்றாக இருந்த இந்தியாவை இரண்டாக ஆக்கத் துடிப்பவர்கள் அவர்கள் தானே தவிர, மற்றவர்கள் அல்ல என சாடியுள்ள முரசொலி நாளேடு, “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நமக்கு ஒரே ஒரு பிரதமர்தான் என்றும் அமித்ஷா பேசினார். உண்மைதான். ஆனால் காஷ்மீரிலும் கன்னியாகுமரியிலும் பா.ஜ.க. தோற்றிருக்கிறது என்பதுதான் பேருண்மை ஆகும்.

banner

Related Stories

Related Stories