முரசொலி தலையங்கம்

“பா.ஜ.க. ஆட்சி முடியும் வரை இது போன்ற சதிச்செயல்கள் நிறைய நடக்கும்...” - முரசொலி எச்சரிக்கை !

கட்சிகளை உடைப்பது, எம்எல்ஏ-க்களை இழுப்பது அதன் மூலமாக பாஜக ஆட்சியையோ அல்லது பாஜக-வின் அடிமை ஆட்சியையோ அமைப்பது அவர்களது பாணியாகும். அதனைதான் ஜார்கண்டிலும் பார்க்க நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

“பா.ஜ.க. ஆட்சி முடியும் வரை இது போன்ற சதிச்செயல்கள் நிறைய நடக்கும்...” - முரசொலி எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜார்கண்டில் ஒரு சதிச்செயல் !

ஜார்கண்டில் ஒரு ஜனநாயகப் படுகொலையை நடத்தி இருக்கிறது பா.ஜ.க. இது எதற்குமே தொடர்பு இல்லாதவரைப் போல இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

மக்களை நேரிய வழியில் சந்தித்து வாக்குகளைப் பெற முடியாத பா.ஜ.க., பல்வேறு மாநிலங்களில் குறுக்கு வழியில், கொள்ளைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடித்துள்ளதை அதிகம் விவரிக்கத் தேவையில்லை. நாடும் நாட்டு மக்களும் அறிந்தவை தான் அவை. கட்சிகளை உடைப்பது, எம்.எல்.ஏ.க்களை இழுப்பது அதன் மூலமாக பா.ஜ.க. ஆட்சியையோ, அல்லது பா.ஜ.க.வின் அடிமை ஆட்சியையோ அமைப்பது அவர்களது பாணியாகும். அதனைத் தான் ஜார்கண்டிலும் பார்க்க நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தனக்கு எதிரியே இல்லை என்ற இறுமாப்புடன் செயல்பட்டு வந்தது பா.ஜ.க. ஆனால் ‘இந்தியா’ என்ற வலுவான கூட்டணியை அமைத்து விட்டார்கள் எதிர்க்கட்சிகள். இதில் அகில இந்தியக் கட்சிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற இலட்சியத்துடன் இக்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. ‘இந்தியா’ என்று கூட்டணிக்கு பேர் வைத்ததே பா.ஜ.க.வுக்கு திகிலைக் கிளப்பியது. ‘இந்தியா’ என்று சொல்லாமல், ‘பாரதம்’ என்று புலம்பத் தொடங்கினார்கள்.

“பா.ஜ.க. ஆட்சி முடியும் வரை இது போன்ற சதிச்செயல்கள் நிறைய நடக்கும்...” - முரசொலி எச்சரிக்கை !

அடுத்ததாக இந்தியாக் கூட்டணித் தலைவர்களை வேட்டையாடத் தொடங்கினார்கள். ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் மேல் சம்மனாக கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதுவரை 5 முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். 5 சம்மனையும் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார். அவரது ஆட்சியைக் கவிழ்க்கும் வேலைகளை பா.ஜ.க. தொடங்கி விட்டது. இதனை அரவிந்த் கெஜ்ரிவாலே ஊடகங்களில் அம்பலப்படுத்தினார்.

‘ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறவும், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கவிழ்க்கவும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேருக்கு தலா 25 கோடி ரூபாய் தர பா.ஜ.க. பேரம் பேசி உள்ளது. ஆபரேஷன் தாமரை 2.0 என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்’ என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை வெளியிடுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு போலீஸார், நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்கள்.

பீகாரில் துணை முதலமைச்சராக இருந்த தேஜஸ்வியை பல்வேறு வகைகளில் நெருக்கி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் ஜார்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரனை வளைத்தார்கள்.

அரசு நிலங்களை தனியாருக்கு விற்றதான ஒரு வழக்கை அமலாக்கத்துறை மூலமாக தூசி தட்டி எடுத்து அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்தது அமலாக்கத்துறை. தன்னை எப்படியும் கைது செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்து அவர் தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார். ஹேமந்த் சோரனைக் கைது செய்து ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா ஆட்சியைக் கவிழ்ப்பது தான் பா.ஜ.க.வின் சதியாக இருந்தது. ஆனால் கட்சி உறுதியாக ஹேமந்த் பின்னால் நின்று விட்டது.

“பா.ஜ.க. ஆட்சி முடியும் வரை இது போன்ற சதிச்செயல்கள் நிறைய நடக்கும்...” - முரசொலி எச்சரிக்கை !

ஹேமந்த் கைது செய்யப்பட்டதும் உடனே கூடிய முக்தி மோர்ச்சா கட்சி தனது அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரனை தேர்ந்தெடுத்தது. ஆளுநரிடம் அதற்கான கடிதத்தை கொடுத்ததும், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்க வேண்டும். முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்களை உடைக்க முடியுமா என்று பார்த்தார்கள். அதனால் இழுத்தார்கள். ஆனால் எம்.எல்.ஏக்கள் யாரும் அணிமாறத் தயாராக இல்லை. வேறு வழியில்லாமல் சம்பாய் சோரனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து விட்டார்கள்.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 41 உறுப்பினர்கள் தேவை. 43 உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பதாக வீடியோவை ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி வெளியிட்டது. கூட்டணியாக பார்த்தால் 48 உறுப்பினர்கள் ஆதரவு இந்த அரசுக்கு இருந்தது. ஆனாலும் உடனடியாக ஆட்சி அமைக்க இந்த கட்சியை அழைக்கவில்லை.

பீகாரில் நிதிஷ்குமார் பதவி விலகினார். 15 நிமிடங்களில் புதிய அமைச்சரவையை அமைக்கவும், அதற்கான உரிமை கோரவும் அனுமதிக்கப்பட்டார். இத்தனைக்கும் அவரது கட்சிக்கு பெரும்பான்மை கிடையாது. பா.ஜ.க. ஆதரவு தந்தால் பெரும்பான்மை ஆகும். ஆனால் ஜார்கண்டில் முக்தி மோர்சா கட்சி பெரும்பான்மை உள்ள கட்சி ஆகும். ஆனால் அவர்களது ஆட்சியை அமைக்க கால அவகாசகத்தை நீட்டித்து - பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத விளையாட்டுகளை விளையாட நேரம் கொடுத்தார் ஆளுநர். பா.ஜ.க. நினைத்தது நடக்கவில்லை. வேறு வழியின்றி சம்பாய் சோரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து விட்டார் ஆளுநர்.

ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த நிலையில் ஹேமந்த் சோரனை பதவி விலக வைத்து அமலாக்கத்துறை மூலமாக கைது செய்ய வைத்திருப்பது மாபெரும் ஜனநாயகப் படுகொலை ஆகும். தாங்கள் ஏதோ ஊழலுக்கு எதிரானவர்கள் போலக் காட்டிக் கொள்கிறது பா.ஜ.க. மகாராஷ்டிராவில் 73 ஆயிரம் கோடி ஊழல் புகாரில் சிக்கிய அஜித் பவார், பா.ஜ.க. ஆதரவுடன் துணை முதலமைச்சராக இருக்கிறார். பா.ஜ.க.வில் சேர்ந்ததும் அவர் புனிதராகி விட்டார். இப்படித்தான் ஹேமந்த் சோரனையும் மிரட்டப் பார்க்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து, பா.ஜ.க. ஆட்சி முடியும் வரை இது போன்ற சதிச்செயல்கள் நிறைய நடக்கும்.

- முரசொலி தலையங்கம்

05.02.2024

banner

Related Stories

Related Stories