முரசொலி தலையங்கம்

மிக்ஜாம் புயல் பாதிப்பு : தமிழ்நாடு அரசு கையாண்ட விதத்தை மனம் திறந்து பாராட்டிய ஊடகங்கள் - முரசொலி !

மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எடுத்த முயற்சிகளை ஊடகங்கள் மனம் திறந்து பாராட்டி உள்ளன.

மிக்ஜாம் புயல் பாதிப்பு : தமிழ்நாடு அரசு கையாண்ட விதத்தை மனம் திறந்து பாராட்டிய ஊடகங்கள் - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்ட அரசு !

மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும் எடுத்த முயற்சிகளை ஊடகங்கள் மனம் திறந்து பாராட்டி உள்ளன.

* கடந்த 7 ஆம் தேதியன்று 'தி இந்து' ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி கட்டுரையில், "செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முறையாக திட்டயிட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பெருமளவு வெள்ளச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகபட்சமாக 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் மழைப்பொழிவு குறைந்ததும் படிப்படியாக அதனை இரண்டாயிரத்து 500 கன அடியாக குறைத்தார்கள். இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் இருந்தது. பெரும் வெள்ளச்சேதம் தவிர்க்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

* மிக்ஜாம் புயலின்போது, தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை களும் சீரிய முறையில் செயல்பட்டதாக 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது. வேளச்சேரியில் திடீர் என ஏற்பட்ட 60 அடி பள்ளத்தில் விழுந்த 3 பேரை போக்குவரத்து காவலரான பிரபாகரன் என்பவர் காப்பாற்றியதையும், மாதவரம் ரெட்டை ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரில் தத்தளித்த இரண்டு முதியவர்களை தமிழ்நாடு பேரிடர் மீட்பு பணியாளர் சதீஷ் குமார் காப்பாற்றியதையும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் பாராட்டியுள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு : தமிழ்நாடு அரசு கையாண்ட விதத்தை மனம் திறந்து பாராட்டிய ஊடகங்கள் - முரசொலி !

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 600 பேர் கடந்த 4 ஆம் தேதி பணியாற்றியதாகவும், இவர்களில் தாமோதரன் என்பவர் ஒரே ஒரு பயணிக்காக மந்தைவெளி செல்லும் பேருந்தை சாந்தோம் நோக்கி இயக்கியதாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' புகழாரம் சூட்டியுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை யில் இயங்கி வரும் உதவி கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இன்முகத்துடன் ஏற்று அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் செய்ததாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா" பாராட்டியுள்ளது. தமது வீட்டில் தண்ணீர் புகுந்த நிலையிலும், ரமேஷ் என்ற இளைஞர் வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கி பணியாற்றினார். இப்படி, தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளும் சீரிய முறையில் செயல்பட்டதாக "டைம்ஸ் ஆஃப் இந்தியா" ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது, "மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டது" என்று கடந்த 10 ஆம் தேதி அன்று தி இந்து ஆங்கில நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

'சென்னை வெள்ளம் - 2015-ம் 2023-ம்' என்ற தலைப்பில் 'தி இந்து' ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், "ஏரிகளில் இருந்து கண்ணீர் திறந்துவிடப்படுவது இந்த முறை, முறைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டதால், 2015-ம் ஆண்டு, நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உயிரிழப்பு மற்றும் பொருட் சேதங்கள் போன்ற கடும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ள 'தி இந்து' நாளிதழ், 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், நள்ளிரவில் திறந்துவிடப்பட்டதும், அடையாற்றின் கொள்ளளவுக்கு மிக அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதும், அன்றைய தினம் பெய்த அதிகன மழையும் உயிரிழப்புகளையும் சேதங்களையும் அதிகமாக்கி விட்டது” என்று தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு : தமிழ்நாடு அரசு கையாண்ட விதத்தை மனம் திறந்து பாராட்டிய ஊடகங்கள் - முரசொலி !

தற்போது, பெருமழை பெய்த மறுநாள், சென்னையில் பெரும்பாலான சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்துவிட்டதாகவும், 45 சென்டிமீட்டர் வரை மழை பெய்த போதும், முறையான மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சென்னை மாநகராட்சியின் துரித நடவடிக்கைகள் இதற்கு காரணம் என்றும் 'தி இந்து' கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சமூக ஊடகங்கள் மற்றும் அரசின் அவசர கால கட்டுப்பட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் கிடைத்ததாகவும், சில இடங்களில் இணைய சேவை முடக்கம் மற்றும் மின்தடை தவிர பெரிய நெருக்கடிகள் ஏதும் ஏற்படவில்லை என்றும், இந்த தடைகளும் வெரு விரைவில் சீரமைக்கப்- பட்டதாகவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்கள் உரிய முறையில் ஒருங்கிணைக்கப் பட்டதாகவும் 'தி இந்து' கட்டுரை தெரிவித்துள்ளது.

கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால், ஆற்றின் வழியாக வெள்ளநீர் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரத்தில் மழையும் தொடர்ந்து பெய்ததால் சாலைகளில் தாழ்வானப் பகுதியில் தண்ணீர் தேங்கியது. இருப்பினும், மழை நின்ற சில மணி நேரங்களில் அரசின் போர்க்கால நடவடிக்கைகளால் தண்ணீர் அகற்றப்பட்டதாகவும் 'தி இந்து' வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு : தமிழ்நாடு அரசு கையாண்ட விதத்தை மனம் திறந்து பாராட்டிய ஊடகங்கள் - முரசொலி !

சென்னையில் வெள்ள மீட்புப் பணிகளில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றிய மீனவர்களை நாளிதழ்கள் பாராட்டி எழுதி உள்ளன. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், நோயாளிகள் என ஆயிரக்கணக்கானோரை வெள்ளத்தில் இருந்து மீட்டதில் மீனவர்களின் பங்கு அளப்பரியது என்று நாளிதழ்கள் பாராட்டி உள்ளன.

'டெக்கான் கிரானிக்கல்' நாளிதழ், மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், நிவாரண பணிகளிலும் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்கு சிறப்பானது என பாராட்டியுள்ளது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி, பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டதாக கூறியுள்ளது. புயலுக்கு பின்னர், எண்ணூர் மற்றும் கொசஸ்தலை ஆற்று பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த கோபுரம் பழுதடைந்ததாகவும், இதனால் எண்ணூர், மணவி, மீஞ்சூர் மற்றும் சில இடங்களில் மீண்டும் மின்சாரம் வழங்க, மின்வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும், படகில் ஏறிச்சென்று, உயரமான கோபுரத்தின் மீது ஏறி தங்களது உயிரை பணயம் வைத்து பழுது நீக்கி மீண்டும் மின்சாரத்தை வர வழைத்ததாக 'டெக்கான் கிரானிக்கல்' குறிப்பிட்டுள்ளது.

நெஞ்சில் நஞ்சில்லாத வகையில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. பத்திரிக்கைகளின் பாராட்டுதல்களுக்காக அல்ல, உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர்.

banner

Related Stories

Related Stories