முரசொலி தலையங்கம்

முன்கூட்டியே திட்டமிட்ட முதலமைச்சர்: பேராபத்து ஏற்படாமல் தடுத்து மக்களைக் காப்பாற்றி வரும் தி.மு.க அரசு!

பேராபத்து ஏற்படாமல் தடுத்து மக்களைக் காப்பாற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முன்கூட்டியே திட்டமிட்ட முதலமைச்சர்: பேராபத்து ஏற்படாமல் தடுத்து மக்களைக் காப்பாற்றி வரும் தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (08-12-2023)

முன்கூட்டியே திட்டமிட்ட முதல்வர்!

வரலாறு காணாத மழையை கடந்த 4ஆம் தேதியன்று பார்த்தோம். வங்கக் கடலில் ஏற்பட்ட ‘மிக்ஜாம்’ புயலானது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஐம்பது ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழையைக் கொடுத்தது. 177 ஆண்டுகளில் இந்தளவுக்குப் பெய்வது மூன்றாவது முறை என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

இதனைப் புயலுக்கு முன்பும் – புயல் நாளிலும் – புயலுக்குப் பிந்தைய நாளிலும் எடுத்த நடவடிக்கைகளின் மூலமாக பேராபத்து ஏற்படாமல் தடுத்து மக்களைக் காப்பாற்றி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மழைநீர் வடிகால் பணிகளை நல்ல முறையில் செய்தாலும், மழைநீர் இறுதியாக கடலில் வடியக்கூடிய அடையாறு மற்றும் கூவம் நதிகளின் முகத்துவாரங்களில் புயலின் காரணமாக அலைகளின் அளவு அதிகமாக இருந்த காரணத்தினால், இந்த நதிகளில் வெள்ள நீர் மிக மெதுவாகவே வடிந்து வருகிறது.

சென்னையின்மக்கள் தொகை 1.18 கோடி. 17 லட்சம் வீடுகள் இருக்கிறது. 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 5,657 கிலோ மீட்டர் சாலைகள் இருக்கிறது. இதில் 2,623 கி.மீ. மழை நீர் வடிகால்கள் வைத்திருக்கிறோம். வடக்கே கொசஸ்தலையாறு, மையத்தில் கூவம் ஆறு மற்றும் தெற்கில் அடையாறு ஆகிய ஆறுகள் மழைநீரை எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சென்னை, 15 பெரிய உப கால்வாய்களையும் 33 சிறிய கால்வாய்களையும், நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் சிறிய குளம் மற்றும் ஏரிகளையும் கொண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் பருவமழையின் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்த முதலமைச்சர் அவர்கள், பல்வேறு பணிகளை திட்டமிட்டுச் செயல்படுத்தினார்கள்.

சென்னையில் பருவமழையின் போது வெள்ளநீர் தேங்காமல் எளிதில் வெளியேறும் வகையில் மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்க பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள் ஊடகங்களில் விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.

முன்கூட்டியே திட்டமிட்ட முதலமைச்சர்: பேராபத்து ஏற்படாமல் தடுத்து மக்களைக் காப்பாற்றி வரும் தி.மு.க அரசு!

« அடையாறு மற்றும் கூவம் வடிநிலப் பகுதிகளில் உலக வங்கி நிதியில் 44.88 கி.மீ. நீளத்திற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளினால் அம்பத்தூர், வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் பகுதிவாழ் மக்கள் பயனடைந்துள்ளார்கள்.

« கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் 769 கி.மீ நீளத்திற்கு, ரூ.3,220 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 68 சதவிதப் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. இதனால் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூரில் வாழும் மக்கள் பயனடைவார்கள்.

« கோவளம் வடிநிலப்பகுதியில் 360 கிமீ நீளத்திற்கு. ரூ.1714 கோடி மதிப்பீட்டில் KfW வங்கி நிதியில் ஒருங்கிணைந்தமழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

« M1 மற்றும் M2 திட்டக்கூறு பகுதிகளில் 160 கி.மீ நீளத்திற்கு, ரூ.598 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 60 சதவீதப்பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. இதனால், நங்கநல்லூர், கண்ணன் காலனி, மயிலை பாலாஜி நகர், புவனேஸ்வரி நகர், புழுதிவாக்கம், கண்ணகி நகர், எம்.சி.என். நகர் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். மேலும் M2 திட்டக் கூறு பகுதிகளில் ரூ.735 கோடியில் 122.85 நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவுள்ளது.

இப்பணிகளினால் ஸ்ரீராம் அவென்யூ கண்ணப்ப நகர், கசூரா கார்டன் நகர், ரேடியோ நகர், செக்ரடேரியட் காலனி, ஒக்கியம் துரைப்பாக்கம், ஜோதி நகர், பாரதியார் நகர், இந்திரா நகர், நீலாங்கரை, வெட்டுவான்கேணி, செம்பஞ்சேரி ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள்.

« உலக வங்கி நிதியில் 120 கோடி மதிப்பீட்டில் 48 கி.மீ. நீளத்திற்கு மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில் 10 கி.மீ. நீளத்திற்கு 26 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனால் டாக்டர் பெசன்ட் சாலை, நடேசன் சாலை, திருவல்லிக்கேணி பஜார் சாலை, இளங்கோ நகர், காமராஜர் சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, ஸ்ரீராம் காலனி மற்றும் சிவப்பிரகாசம் சாலைகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டது.

« சிங்காரச் சென்னை 2.0 திட்ட நிதியில் 50 கி.மீ நீளத்திற்கு ரூ. 255 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனால், புளியந்தோப்பு, கொளத்தூர், சீதாம்மாள் காலனி, முனுசாமி சாலை, ஜி.என். செட்டி சாலை, விஜயராகவ சாலை, ராஜமன்னார் சாலை, அசோக் நகர், போஸ்டல் காலனி, டி.எச். சாலை, சர்மா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டது.

முன்கூட்டியே திட்டமிட்ட முதலமைச்சர்: பேராபத்து ஏற்படாமல் தடுத்து மக்களைக் காப்பாற்றி வரும் தி.மு.க அரசு!

« வெள்ள நிவாரண நிதியின் கீழ் 107.59 கி.மீ நீளத்திற்கு ரூ.291.35 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளினால் எம்.கே.பி நகர், வினோபா நகர், பிரதான சாலை, சி.பி. சாலை, ஹபிபுல்லா சாலைகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டது.

« மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 59.5 கி.மீ. நீளத்திற்கு ரூ.232 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 90 சதவீதப் பணிகள் முடிவு பெற்றுள்ளன. இதனால், மண்டலம் 4,5,6,7,8,9,10 ஆகிய மண்டலங்களில் உள்ள மக்கள் பயன்பெறுவர்.

« மூலதன நிதியில் 11 கி.மீ நீளத்திற்கு T.H சாலை இளையா தெரு, ஸ்டீபன்சன் சாலை மற்றும் ஜி.கே.எம். காலனி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளினால் கடந்த ஆண்டை விட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களில் மட்டுமே மழைநீர் தேக்கம் இருந்தது, அவ்விடங்களிலும் சில மணி நேரத்தில் மழைநீர் அகற்றப்பட்டது. மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் 699.71 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. 2191 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் 60 முதல் 80 விழுக்காடு முடிந்துள்ளது. திட்டமிடப்பட்ட பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்த பிறகு மழைநீர் வடிகால் என்பது எதிர்பார்த்த முழுப்பயனைத் தரும்.

“இத்தகைய பெரும் இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிட்டாலும், ஓர் அரசின் உண்மையான கடமை என்பது, இந்த இன்னல்களின் தாக்கத்தைக் குறைப்பதோடு, இந்த இன்னல்களில் இருந்து மக்கள் உடனடியாக வெளிவரத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே ஆகும்” என்று சொல்லி முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories