முரசொலி தலையங்கம்

“இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி.. 6 மாநில இடைத்தேர்தலில் சம்மட்டி அடி வாங்கிய பாஜக” : முரசொலி பாராட்டு!

‘இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் நடந்து முடிந்துள்ள இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. இது 'இந்தியா' கூட்டணிக்குக் கிடைத்த முதல் வெற்றி ஆகும்.

“இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி.. 6 மாநில இடைத்தேர்தலில் சம்மட்டி அடி வாங்கிய பாஜக” : முரசொலி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘இந்தியா’வின் முதல் வெற்றி!

‘இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் நடந்து முடிந்துள்ள இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. இது 'இந்தியா' கூட்டணிக்குக் கிடைத்த முதல் வெற்றி ஆகும்.

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்துள்ளது. இது பா.ஜ.க.வுக்கு அடுத்தடுத்து வரப் போகும் தோல்வியின் தொடக்கமாக அமைந்திருக்கிறது.

* உத்தரப்பிரதேச மாநிலம் கோசி தொகுதியை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றி இருக்கிறது.

'கேரள மாநிலத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருக்கிறது.

* மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துப்குரி தொகுதியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருக்கிறது.

* ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்ரி தொகுதியை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கைப்பற்றி இருக்கிறது.

காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகள் ஆகும்.

* திரிபுரா மாநிலத்தில் பாக்ஸாநகர், தன்பூர் ஆகிய இரு தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது.

* உத்தரகண்ட் மாநிலத்தில் பாகேஸ்வர் தொகுதியையும் பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது.

“இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி.. 6 மாநில இடைத்தேர்தலில் சம்மட்டி அடி வாங்கிய பாஜக” : முரசொலி பாராட்டு!

இருப்பினும், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா ஆகியவை மிகப் பெரிய மாநிலங்கள் என்பதால் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. 6 மாநிலங்களை உள்ளடக்கிய 7 தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்கள் அந்தந்த மாநில அளவில் மிகமிக முக்கியமானவையாக கருதப்பட்டன. 'இந்தியா' கூட்டணி உருவானதால் அகில இந்திய அளவிலும் கவனத்தைப் பெற்றன.

இதில் மிகமிக முக்கியமானது உத்தரப்பிரதேச மாநிலம் கோசி சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் ஆகும். சமாஜ்வாதி கட்சியிடம்தான் இந்த தொகுதி இருந்தது. எம்.எல்.ஏ.வான தாராசிங் சௌகான் என்பவரை, வலுக்கட்டாயமாக பா.ஜ.க.வுக்கு இழுத்துச் சேர்த்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். அவர் கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வில் இணைந்தால், இடைத்தேர்தலிலும் நீங்கள்தான் பா.ஜ.க. வேட்பாளர் என்று யோகி வாக்குறுதி கொடுத்தார்.

பா.ஜ.க. சார்பில் தாராசிங் சௌகான் போட்டியிட்டார். சமாஜ்வாதி கட்சி சார்பில் சுதாகர் சிங் போட்டியிட்டார். இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. பா.ஜ.க. வேட்பாளரை விட 42 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார்.

“இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி.. 6 மாநில இடைத்தேர்தலில் சம்மட்டி அடி வாங்கிய பாஜக” : முரசொலி பாராட்டு!

இது யோகிக்கு மிகப் பெரிய சறுக்கலாக அமைந்துள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை வலைவீசி பிடிக்கும் பா.ஜ.க. பார்முலாவுக்கு உத்தரபிரதேச மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் கடந்த 6 மாதங்களில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், 3 தொகுதிகளிலும் பா.ஜ.க. படுதோல்வியடைந்தது. இந்த 3 தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 80 ஆயிரம் வாக்குகளும், அடுத்து வந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் 42 ஆயிரமும் பெற்ற நிலையில் பா.ஜ.க. மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

பா.ஜ.க. வேட்பாளர் லிஜின் லால் வாங்கிய வாக்குகள் 6 ஆயிரத்து 558 தான். இவரது டெபாசிட்டே பறி போய்விட்டது. இதே தொகுதிக்கு 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஹரி வாங்கிய வாக்குகள் 11 ஆயிரத்து 694. இப்போது இரண்டு ஆண்டுகளில் 5 ஆயிரம் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு குறைந்து விட்டது. இதுதான் உன்னிப்பாக கவனிக்கத்தக்கது ஆகும்.

“இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி.. 6 மாநில இடைத்தேர்தலில் சம்மட்டி அடி வாங்கிய பாஜக” : முரசொலி பாராட்டு!

மேற்குவங்க மாநிலம் துப்குரி தொகுதி, பா.ஜ.க. வசம் முன்பு இருந்தது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான விஷ்ணுபத ராய் மரணம் அடைந்தார். எனவே அத்தொகுதியில் நடைபெற்ற இடைதேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. அக்கட்சி வேட்பாளர் நிர்மல் சந்திர ராய், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை காட்டிலும் 4 ஆயிரத்துக்கும் அதிக வாக்குகள் பெற்று வெற்றியை தனதாக்கினார். காஷ்மீரில் மரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் மனைவியை நிறுத்தி அனுதாப வாக்குகளை வாங்க முயற்சித்தது பா.ஜ.க. அதிலும் தோல்வியைத் தழுவியது.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர் பிபி தேவி, 1 லட்சத்துக்கும் கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளார். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. ஆதரவு வேட்பாளரை தோற்கடித்தார்.

திரிபுரா மாநிலத்திலுள்ள 2 தொகுதிகளிலும், உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஒரு தொகுதியிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. உத்திரகாண்டில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்தன் ராம் தாஸ் அண்மையில் மரணம் அடைந்தார். அவரது மனைவியையே வேட்பாளராக நிறுத்தியது பா.ஜ.க. ஆனாலும் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் பா.ஜ.க. வால் வெற்றி பெற முடிந்தது.

- இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது, 'இந்தியா' கூட்டணியை நோக்கி இந்திய மக்கள் அணி திரள்வதை அறிய முடிகிறது.

- முரசொலி தலையங்கம் (11.09.2023)

banner

Related Stories

Related Stories