முரசொலி தலையங்கம்

“பசிப்பிணி நீக்கும் மருத்துவராய் உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி பாராட்டு !

பசிப்பிணி நீக்கும் மருத்துவராய் உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என முரசொலி தலையங்கத்தில் பாராட்டியுள்ளது.

“பசிப்பிணி நீக்கும் மருத்துவராய் உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பசிப்பிணி மருத்துவர் - முரசொலி தலையங்கம் (29.08.2023)

சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னன், ஏழை எளியோரின் பசியைப் போக்கியதால் ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று போற்றப்பட்டுள்ளார்.

‘பசிப்பிணி மருத்துவன் இல்லம், அணித்தோ சேய்த்தோ?’ என்கிறது புறநானூறுப் பாட்டு. அத்தகைய பசிப்பிணி மருத்துவராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.

17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டத்தை கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்த முதலமைச்சர் அவர்கள், தனது வாழ்விலோர் பொன்னாள் என்று சொல்லி இருக்கிறார். அவரது ஆட்சியே பொற்கால ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

“பசிப்பிணி நீக்கும் மருத்துவராய் உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி பாராட்டு !

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி என்கிறார் வள்ளுவர். வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும் என்கிறார் வள்ளுவர். அதையும் தாண்டிய ஒரு கருத்தை முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். ‘காலை உணவுத் திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்வதை நிதி ஒதுக்கீடு என்று சொல்ல மாட்டேன், நிதி முதலீடு ஆகும்’ என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்தின் அறிவுக்கு முதலீடு செய்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வழியில் - இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர். அவ்வை மூதாட்டி சொன்னாரே... பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்று. பசி வந்து அந்த பசியைத் தீர்க்க உணவு கிடைக்காத மனிதன் தன்னிடமுள்ள மானம், குலம், கல்வி, வன்மை, அறிவு, தானம், தவம், காமுறுதல், முயற்சி, தாளாமை - ஆகிய பத்தையும் இழந்து விடுவான் என்றார். அந்த வகையில் பசியைப் போக்கினால்...? அனைத்துச் செல்வங்களும் அந்த மாணவச் செல்வங்களை அடையுமே? அதைத்தான் செய்திருக்கிறார் முதலமைச்சர்.

“சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேனிலைப்பள்ளிக்கு ஒரு விழாவுக்கு நான் சென்றிருந்தபோது அங்கு படிக்கும் மாணவிகளிடம் பேசிக் கொண்டு இருந்தேன். காலையில என்ன சாப்பிட்டீங்க என்று கேட்டேன். சாப்பிடவில்லை என்று பெரும்பாலானவர்கள் சொன்னார்கள்.

“பசிப்பிணி நீக்கும் மருத்துவராய் உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி பாராட்டு !

எங்க வீட்டுல சமையல் பண்ணல என்று ஒரு மாணவி சொன்னார். மத்தியானம் ஸ்கூல்ல சாப்பிட்டுக்கோ என்று அம்மா சொல்லிட்டாங்க என்று இன்னொரு மாணவி சொன்னார். காலையில் டீ குடிச்சிட்டு வந்தேன் என்று மற்றொரு மாணவி சொன்னார். இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் காலை உணவுத் திட்டம் உருவாக்கப்பட்டது” என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருப்பது எத்தனை உண்மையான சொற்கள் என்பதை இணைய தளத்தில் பலரும் எழுதி பாராட்டி வருகிறார்கள்.

ப்ரியம்யா என்ற பதிவர் ஒருவர் எழுதி இருக்கிறார்...

“மதிய உணவுக்காக மட்டுமே பள்ளி வரும் பிள்ளைகளை எனக்கு பரிச்சயம் உண்டு. செல்லப்பூனை போல சிறுகுடலைத் தூங்க வைத்து இருப்பார்கள். காலை ஒண்ணுக்கு பெல் அடிக்கும் போது பள்ளி சமையலறை கூடத்திலிருந்து கிளம்பும் தாளிப்பு மணம் வயிற்றில் சமத்தாய் தூங்கும் பூனையின் காதை பிடித்து உயர்த்த புலன் விழிப்பார்கள். சாப்பிட்டியா என்று கேட்கவே பயமாக இருக்கும். இல்லை என்று சொல்ல மாட்டார்கள் பெரும்பாலும். ஆமாம் என்றும் சொல்ல மாட்டார்கள்...

வருடந்தோறும் குமார் என்றும்,கண்ணன் என்றும் முனீஸ்வரன் என்றும் பெயர் மட்டும் மாறுகிறது. ஆனால் பசி கர்ப்பக்கிரகம் விக்கிரகம் போல கருக்கு மங்காது இருக்கிறது. இதற்காகவே மதிய உணவுக்கு பின்னர் கணித பாடவேளையை மாற்றி வைக்க சொல்லி சண்டையிட்ட ஒரு ஆசிரியரை எனக்கு தெரியும். என்ன sir காலையில fresh ஆக கணக்கு போடாமல் தூக்கம் வரும் பீரியட் களை வாங்கி வைக்கிறீர்கள் என்போம். பசியில் என்ன படிப்பான் பிள்ளை வயிறு நிறையட்டும் முதலில்.... அதுதான் ஆதார சூத்திரம் என்பார் வெள்ளை சிரிப்போடு.

இந்நிலையில் அரசு காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது எனக்கு உவகையையே தருகிறது. பணிப்பளு எல்லாம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது தட்டு நிறைய பொங்கலும், கிச்சடியும் நிரப்பிக்கொண்டு குட்டி குட்டி விரல்கள் உணவை அள்ளி அள்ளி வாயில் இட்டுக் கொள்கிற ஒரு சித்திரம் என் மனதில் விரிகிறது. நீங்கள் எதையோ பேசிக்கொண்டே கிடங்கள்... அதற்குள் எத்தனையோ கண்ணனும், கார்த்திக்கும், குமரனும் ஒரு பிடியாவது வளர்ந்திருப்பான்கள் இல்லையா?” - என்று எழுதி இருக்கிறார் ப்ரியம்யா. இத்தகையவர்களை நினைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய திட்டம் இது.

“பசிப்பிணி நீக்கும் மருத்துவராய் உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி பாராட்டு !

“ஒன்பது வயதில் தந்தையை இழந்தவன் நான். உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டேன். அப்படி ஒரு சூழலில்தான் நான் பள்ளியில் மதிய உணவு சாப்பிடத் தொடங்கினேன். மதிய உணவு சாப்பிட்ட கையோடு வகுப்பறையில் அமர்ந்து நண்பர்களோடு இணைந்து படித்த அனுபவங்கள் அதிகம். நான் மேடைப் பேச்சாளர் ஆவதற்கான விதையும் அங்குதான் முளைத்தது. அந்த அனுபவங்களே நான் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 456 மதிப்பெண்கள் எடுக்க உந்துசக்தியாக இருந்தன. அந்த மதிப்பெண்களுக்குப் பிறகு என் உறவினர்களே என்னை மதிக்க ஆரம்பித்தார்கள்.

யாரிடமும் போய் நிற்கக் கூடிய சூழலைத் தராத கல்வித் திட்டத்தில் மதிய உணவு கிடைப்பது பெரும்பேறாக இருந்தது எனக்கு. 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதன் பெருமையை, உன்னதத்தை, உண்மையான பலனை நாம் அறிந்துகொள்ள முடியும். இது வயிற்றுப் பசி, அறிவுப் பசி தொடர்புடையது மட்டுமல்ல, உளவியல் தொடர்புடையதும்கூட. அதை காலம் மிகச் சரியாக உணர்த்தும் என நம்புகிறேன்” என்று எழுதி இருக்கிறார் நாகப்பன் என்ற பதிவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நோக்கத்தை இதை விட அழகாக யாரும் சொல்ல முடியாது.

“பெற்றோர் இருவருமே வேலைக்கு போகும் குடும்பங்கள் அதிகமாகி விட்டது. இந்த நிலையில் காலை உணவு தயாரிப்பு என்பதே சிரமம் ஆகிறது மத்திய தரவர்க்கத்தில். இந்தநிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஏழை எளியவர்க்கு மட்டுமல்ல எல்லார்க்கும் நன்மை தருவது தான்” என்கிறார் ஒரு பெண்மணி.

இலட்சக்கணக்கான குடும்பங்களின் கவலையை நீக்கும் பசிப்பிணி மருத்துவராய் உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்...

banner

Related Stories

Related Stories