முரசொலி தலையங்கம்

“பாஜகவை வீழ்த்தியாக வேண்டும்.. திமுக காட்டும் திசை நோக்கி நாடு செல்லட்டும்” : சூளுரைத்த ‘முரசொலி’ !

ஜனநாயகம் , சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகள் தான் பா.ஜ.க.வை வீழ்த்தியாக வேண்டும் என்று கட்டளையிடுகின்றன.

“பாஜகவை வீழ்த்தியாக வேண்டும்.. திமுக காட்டும் திசை நோக்கி நாடு செல்லட்டும்” : சூளுரைத்த ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திசை காட்டும் தி.மு.க. - முரசொலி தலையங்கம் (17.07.2023)

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது இந்தியா செல்ல வேண்டிய திசைக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.

''கடந்த ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை புறக்கணித்து ஏமாற்றியதை வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரக்கக் குரலெழுப்புவோம்!" என்று தீர்மானித்துள்ளது இந்தக் கூட்டம். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் விளம்பர மோகத்தோடு அந்தக் கட்சி இருப்பதை இக்கூட்டம் கண்டித்துள்ளது.

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு வேட்டு வைக்கும் காரியங்களை பா.ஜ.க. எப்படி எல்லாம் செய்து வருகிறது என்பதை பட்டியலிட்டுள்ளது தி.மு.க.வின் தீர்மானம். '' ஜனநாயக இந்தியா - சமத்துவ இந்தியா - சமூக நீதி இந்தியா - பன்முகத்தன்மையின் பூந்தோட்டமாக இருக்கும் இந்தியா என்பது பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலால் - சனாதன அரசியலால் - இன்று எதேச்சாதிகார இந்தியாவாக மாற்ற இன்னொரு முறை வாக்களியுங்கள் என்று விரைவில் பிரதமர் மோடி அவர்களும் - அவரது சகாக்களும் வரப் போகிறார்கள்" என்ற அபாய எச்சரிக்கை செய்துள்ளது தி.மு.க.வின் தீர்மானம்.

“பாஜகவை வீழ்த்தியாக வேண்டும்.. திமுக காட்டும் திசை நோக்கி நாடு செல்லட்டும்” : சூளுரைத்த ‘முரசொலி’ !

தமிழ்நாட்டிற்கு கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி எதையும் தரவில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளது தீர்மானம். “நிதியும் இல்லை. திட்டங்களும் இல்லை. ஒன்றிய அரசு வேலை வாய்ப்புகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இடமுமில்லை” என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது. ''பா.ஜ.க.வுக்கு இனியொரு முறை மக்கள் வாய்ப்பை கொடுத்தால் இந்தியாவும் தாங்காது –- இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சட்டமும் தாங்காது" என்று எச்சரிக்கை செய்துள்ளது தி.மு.க.வின் தீர்மானம். இந்த பேராபத்தை விளக்கிடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரக்கக் குரல் எழுப்பி, தமிழ்நாட்டு மக்களுக்காகவும், இந்தியாவுக்காகவும் செயல்படுவது என அக்கூட்டம் தீர்மானித்துள்ளது.

இரண்டு முறையாக ஆட்சியில் இருக்கிறது பா.ஜ.க. 2014 க்கு முன்னதாக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் எதையும் அந்தக் கட்சி நிறைவேற்றவில்லை.

* நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள அனைத்து கருப்புப் பணத்தையும் மீட்டு வருவோம்.

* கருப்புப்பண பரிவர்த்தனை வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்போம்.

* ஏழை எளிய மக்களுக்கு ரூ.15 லட்சம் கொடுப்போம்.

* ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம்.

* விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்கு ஆகும்.

* கங்கை - காவிரியை இணைப்போம்.

* தென்னக நதிகளை இணைப்போம்.

* ஜவுளித் துணிகளின் சொர்க்கபுரியாக ஈரோடு மாற்றப்படும்.

* ஈரோடு மஞ்சளை வைத்து அழகுசாதனப் பொருள் தயாரிப்போம்.

* ராமேஸ்வரத்தை உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளம் ஆக்குவோம்.

* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிங்கள கடற்படையால் இனி ஒரு பாதிப்பு கூட வராது.

* மீன்கள் இருக்கும் இடத்தை சேட்டிலைட் மூலம் கண்டறிந்து மீனவர்களின் செல்போனுக்கு தகவல் அனுப்புவோம்.

- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

“பாஜகவை வீழ்த்தியாக வேண்டும்.. திமுக காட்டும் திசை நோக்கி நாடு செல்லட்டும்” : சூளுரைத்த ‘முரசொலி’ !

ஜனநாயக சக்திகளின் ஒரே நோக்கமாக பா.ஜ.க.வை தோற்கடிப்பது என்பது மாற வேண்டும். பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சிகள் ஒற்றுமைத் தன்மையுடன் இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள். இன்னும் சில கட்சிகள் இணைந்து பெங்களூரிலும் கூட இருக்கிறார்கள். இவர்களின் ஒற்றை நோக்கம் என்பது பா.ஜ.க.வை வீழ்த்துவதாக அமைந்துள்ளது.

பா.ஜ.க. என்றால் தனிப்பட்ட பா.ஜ.க.வை அல்ல. பா.ஜ.க. என்பது இன்றைய நிலையில் ஜனநாயகத்துக்கும் சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே பா.ஜ.க.வை வீழ்த்துவது என்பது இந்த தத்துவங்களைக் காப்பதன் மூலமாக இந்தியாவைக் காப்பது ஆகும். ஜனநாயகம் , சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகள் தான் பா.ஜ.க.வை வீழ்த்தியாக வேண்டும் என்று கட்டளையிடுகின்றன.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் பா.ஜ.க.வுக்கு கவலை இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனை கட்சியையும் தேசியவாத கட்சியையும் உடைத்து ஆட்சிக்கு வந்துள்ளது பா.ஜ.க. உண்மையில் அங்கு நடப்பது ஆட்சி அல்ல. ஆனால் மராட்டியத்தை ஆள்வதைப் போல பா.ஜ.க. மார்தட்டிக் கொள்கிறது.

சிவசேனாவில் இருந்து கட்சி மாறிய 15 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்வது குறித்து ஓராண்டு காலமாக சபாநாயகர் முடிவெடுக்கவில்லை. விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

உடனடியாக சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது உச்சநீதிமன்றம். 15 கட்சிமாறிகளை தகுதி நீக்கம் செய்தால் அங்கு யாருடைய ஆட்சியும் இருக்காது. இது போன்ற கேவலமான அரசியல்கள் மூலமாகத்தான் பா.ஜ.க.வின் ஆயுள் நீடித்துக் கொண்டு இருக்கிறது. இதைத் தான் பா.ஜ.க. கூச்சமில்லாமல் செய்யும். மீண்டும் வென்றால் இதுதான் தான் இந்தியாவின் ஜனநாயகமாக மாறிவிடும்.

எனவே, தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து பா.ஜ.க.வை வீழ்த்தும் ஒற்றை இலக்குடன் அனைத்துக் கட்சிகளும் பயணிக்க வேண்டும் என்ற தி.மு.க. காட்டும் திசை நோக்கி அகில இந்தியக் கட்சிகள் அனைத்தும் செல்லட்டும்.

banner

Related Stories

Related Stories