முரசொலி தலையங்கம்

அடிமை அதிமுக கும்­ப­ல் எதுவும் தெரியாமல் கிண்டி மாளி­கை­யில் நொண்டி விளையாடுகிறார்கள் -முரசொலி விமர்சனம்!

அடிமை அதிமுக கும்­ப­ல் எதுவும் தெரியாமல் கிண்டி மாளி­கை­யில் நொண்டி விளையாடுகிறார்கள் -முரசொலி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (20.6.2023)

ஆளுநர் ஆட்டம் அடங்கட்டும்! – 2

குஜராத் மாநில ஆளுநர் கமலாபெனிவாலுக்கும் குஜராத் முதலமைச்சராக இருந்த மோடிக்கும் நேரடி மோதல் நடந்தது. 1986 லோக் ஆயுக்தா சட்டப்படி லோக் ஆயுக்தாவைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் குஜராத் உயர் நீதிமன்றத் தின் தலைமை நீதிபதி மற்றும் ஆளுநரிடம் உள்ளது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ஏ.மேத்தாவை 2011-ல் குஜராத்தின் லோக் ஆயுக்தாவுக்கு நியமித்து ஆளுநர் கமலா பெனிவால் ஒப்புதல் அளித்தார். 'மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை' என்று எதிர்ப்பு தெரிவித்தார் குஜராத் முதல்வர் மோடி. அதற்குப் பழிவாங்கும் வகையில், லோக் ஆயுக்தாவை தேர்ந்தெடுப்பதில் கவர்னர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பங்கை நீக்கி, முதல்வர் தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு நியமனம் செய்வதற்கான அனைத்து அதிகாரங்களையும் வழங்க வழி செய்யும் புதிய சட்டத்தைக் குஜராத் சட்டசபையில் நிறைவேற்றினார். அந்த சட்ட மசோதா ஆளுநர் கமலா பெனிவாலுக்கு அனுப்பப்பட்டது. அதனை நிராகரித்து, 'புதிய சட்டப்படி லோக் ஆயுக்தா அமைப்பது கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல இருக்கும்' என்று 7 பக்க குறிப்புகளுடன் சட்டசபைக்குத் திருப்பி அனுப்பினார் ஆளுநர் கமலா பெனிவால்.

முதல்வர் மோடி சும்மா இருக்கவில்லை. மாநில உரிமையை நிலைநாட்ட அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பினார். 'மாநில அரசாங்கத்தை ஆலோசிக்காமல் லோக் ஆயுக்தாவை நியமிக்க ஆளுநருக்கு உரிமை இல்லை. கூட்டாட்சிக் கொள்கைகளை மீறும் கவர்னரை திரும்ப அழைக்க வேண்டும். மேத்தாவின் நியமனம் அரசியலமைப்பின் 163வது பிரிவை மீறுகிறது. ஒரு மாநிலத்தின் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோச னையின்படி செயல்பட வேண்டும்' என்று கடிதத்தில் மோடி குறிப்பிட்டிருந்தார். (தகவல்: பத்திரிகையாளர் எஸ்.ஏ.எம். பரக்கத் அலி) மேத்தா நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குஜராத் மோடி அரசு வழக்கு தொடர்ந்தது. மேத்தாவின் நியமனத்தை உறுதி செய்த உச்சநீதி மன்றம், 'அமைச்சரவை குழுவின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும்' என ஆளுநருக்கும் குட்டு வைத்தது. தனக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்று எதிர்த்த, சட்டமன்றத்தில் சட்டமியற்றிய, உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்ட அதே மோடி தான், இன்று ஆளுநர் களை வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

அடிமை அதிமுக கும்­ப­ல் எதுவும் தெரியாமல் கிண்டி மாளி­கை­யில் நொண்டி விளையாடுகிறார்கள் -முரசொலி விமர்சனம்!

அமைச்சரவையில் அமைச்சர்களின் துறையை மாற்றுவது முதலமைச்சரின் அதிகாரம் ஆகும். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போதும் இது போல பிரச்சினை எழுந்தது. அ.தி.மு.க. அமைச்சர்கள் செங்கோட்டையன், மதுசூதனன், லாரன்ஸ், இந்திரா குமாரி, ஜெயக்குமார் ஆகியோரின் துறை களை மாற்றி அமைக்க முடிவு செய்து, அதற்கான கோப்பை ஆளுநர் சென்னா ரெட்டியின் ஒப்புதலுக்காக 1994 நவம்பர் 8-ம் தேதி ஜெயலலிதா அனுப்பி வைத்தார். இந்த துறைகள் மாற்றம் தொடர்பான கோப்புக்கான பதில் நவம்பர் 15-ம் தேதி வரை சென்னா ரெட்டியிடம் இருந்து திரும்பி வரவில்லை. இதனால், கோபம் அடைந்த ஜெயலலிதா அரசு அலுவல் விதியின் கீழ் முதல்வருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர்களின் துறைகளை நவம்பர் 16-ம் தேதியன்று மாற்றினார். அதுபற்றிய உத்தரவு சென்னா ரெட்டி யின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதற்கு நவம்பர் 21-ம் தேதி வேறு வழி யில்லாமல் ஒப்புதல் அளித்து கையெழுத்துப் போட்டார் சென்னா ரெட்டி.

"அரசு அலுவல் விதிகளில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப் படையில்தான் அமைச்சர் இலாகா மாற்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்தேன். இதனை அரசியல் சாசனத்திற்கு விரோதமாகக் கருத முடியாது. பொது நலனுக்கான அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவது அவசியம். அவசரம் காரணமாக அரசு அலுவல் விதிகளைப் பயன்படுத்தி அமைச்சர்கள் இலாகா மாற்றத்திற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில், நானோ அல்லது அரசோ எடுத்த நடவடிக்கையில் எவ்வித முறைகேடோ சட்டவிரோதமோ இல்லை" என சொல்லியிருந்தார் ஜெயலலிதா. இதெல்லாம் இன்றைய அடிமை அ.தி.மு.க. கும்பலுக்குத் தெரியாது. அது தெரியாததால்தான் ஆளுநருக்கு மனு கொடுக்கப் போய் கிண்டி மாளிகையில் நொண்டி விளையாட்டு விளையாடி வந்திருக்கிறார்கள் மாண்புமிகுவை இழந்த மாஜிக்கள்.

அடிமை அதிமுக கும்­ப­ல் எதுவும் தெரியாமல் கிண்டி மாளி­கை­யில் நொண்டி விளையாடுகிறார்கள் -முரசொலி விமர்சனம்!

ஆளுநர் பதவி என்பது நியமனப் பதவி ஆகும். அதுவும், ஆளுநர் ரவி எல்லா மேடைகளிலும் - 1947ஆம் ஆண்டே போய்விட்ட பிரிட்டிஷ் படை களுக்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டு இருக்கிறாரே - அந்த பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் எச்சம் தான் இந்தப் பதவி ஆகும். “மாநில ஆளுநர் என்ப வர் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் ஓர் அதிசயப் படைப்பு. ஆங்கிலேயர் விட்டுச் சென்ற ஏகாதிபத்தியத்தின் கடைசிச் சின்னம். இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னரும் நம்மால் அறுத்தெறிய முடியாத அடிமைப் பந்தம்" என்று வர்ணித் தார் 'மலர்க மாநில சுயாட்சி" என்ற ஆராய்ச்சி நூலைத் தீட்டிய அறிஞர் கு.ச.ஆனந்தன் அவர்கள். ஒன்றிய அமைச்சரவையின் கைத்தடிகள் இவர்கள் என்று அவர்தான் சொன்னார். ஜவஹர்லால் நேருவின் சகோதரியான விஜயலட்சுமி பண்டிட் அவர்கள், மராட்டிய மாநில ஆளுநராக இருந்தார். பதவி விலகிய பிறகு அவர் சொன் னார்: "ஆளுநர் பதவியை ஒருவர் ஏற்க தூண்டுகிற முழுமுதல் காரணம், அதில் கிடைக்கும் வசதிகள்தான். ஆளுநர் பதவி பயனற்றது. அதனை அரசிய லமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கிவிட வேண்டும். ஆளுநர்களும் ராஜ்பவ னங்களும் நியாயமாக எதற்காகச் செயல்பட வேண்டுமோ அதற்காகச் செயல் படவில்லை" என்று சொன்னார். இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது இன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள். "Shamsher Singh v. State of Punjab" (1975) என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “The constitutional conclusion is that the Governor is but ashorthand expression for the State Government and the President is an abbreviation for the Central Government." என்று சொன்னது. அத­னைத்­தான் பேர­றி­வா­ளன் வழக்­கில் தீர்ப்­ப­ளித்த உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­க­ளும் உறுதி செய்­தார்­கள். மாநில அர­சின் சுருக்­கெ­ழுத்­து­தான் ஆளு­நர் என்று சுருக்­க­மா­கச் சொன்­னார்­கள். சுருக்­கெ­ழுத்­தா­ள­ரான ஆளு­நர், முத­ல­மைச்­சர் சொல்­வ­தைத் தான் எழுத வேண்­டுமே தவிர சொந்த எண்­ணங்­களை செயல்­ப­டுத்த நினைக்­கக் கூடாது. சொந்­தக் கதை­களை அப்­பாவி மாண­வர்­க­ளைக் கூட்டி வைத்­துக் கொண்டு வகுப்­பெ­டுக்­க­லாம். பாவம் அவர்­கள், திருப்­பிக் கேள்வி கேட்க மாட்­டார்­கள்!

banner

Related Stories

Related Stories