முரசொலி தலையங்கம்

அன்று சொன்னார்.. இன்று செய்து காட்டி 'நானும் டெல்டாகாரன்தான்' என்பதை நிரூபித்துள்ள முதலமைச்சர் : முரசொலி!

உற்பத்தி பெருகி இருக்கிறது. உற்பத்தி செய்யும் பரப்பும் அதிக ரித்து இருக்கிறது. இது நல்லாட்சியின் அடையாளங்கள் ஆகும்.

அன்று சொன்னார்.. இன்று செய்து காட்டி 'நானும் டெல்டாகாரன்தான்' என்பதை நிரூபித்துள்ள முதலமைச்சர் : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (12-06-2023)

தொடரும் வேளாண் புரட்சி!

தமிழ்நாட்டில் வேளாண் புரட்சி தொடர்ந்து நடந்து வருவதாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்திருப்பதைத்தான் பார்க்கிறோம்!

‘நானும் ஒரு விவசாயி" என்று சொல்லிக் கொண்டு இருந்தார் முன்பு ஆண்ட பழனிசாமி. ஆனால் சும்மா வாய் வார்த்தையாக, தனது இயலாமையை மறைப்பதற்காக அவர் போட்டுக் கொண்ட வேடம் அதுவே தவிர வேறல்ல. மூன்று வேளாண் சட்டங்களையும் விழுந்து விழுந்து ஆதரித்தவர் அவர்தான். 'அது பற்றி என்னிடம் விவாதிக்கத் தயாரா?' என்று ஊடகவியலாளர்கள் முன்னால் சவால் விட்டவர் அவர். “டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் போய் விவாதிக்கவும்' என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். அந்தளவுக்கு வாய்ச்சவடால்களில்தான் பழனிசாமி மூழ்கியிருந்தாரே தவிர, உருப்படியான காரியங்கள் எதையும் செய்யவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சி மலர்ந்தது முதல் வேளாண்மைக்கான திட்டமிடுதல்கள் துரிதமாயின.

வேளாண்மைக்காக தனிநிதி நிலை அறிக்கையை உருவாக்கிக் கொடுத்ததே முதலமைச்சர் அவர்களின் மாபெரும் சாதனையாகும். மூன்று வேளாண் சட்டங்களை உருவாக்கி மண்ணில் இருந்து உழவர்களை ஒதுக்கித்தள்ளும் மூன்று சட்டங்களை பா.ஜ.க. அரசு கொண்டு வந்த காலக்கட்டத்தில் வேளாண்மைக்கென தனி நிதி நிலை அறிக்கையைக் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 'நானும் டெல்டாகாரன்தான்' என்பதை செயல் மூலம் காட்டினார் முதலமைச்சர் அவர்கள். இதன் மூலமாக மண்ணும் மக்களும் மகிழ்ச்சியில் திளைப்பதை இரண்டு ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம்.

உற்பத்தி பெருகி இருக்கிறது. உற்பத்தி செய்யும் பரப்பும் அதிக ரித்து இருக்கிறது. இது நல்லாட்சியின் அடையாளங்கள் ஆகும்.

இருபது ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் நெல் உற் பத்தி புதிய உச்சத்தைத் தொட்டுச் சாதனை படைத்தது. 2014-15ஆம் ஆண்டில் 1.2 கோடி மெட்ரிக்டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. 2020-21ஆம் ஆண்டில் 1.04 கோடி மெட்ரிக் டன்னாக இருந்த நெல் உற்பத்தி, 2022 ஆம் ஆண்டு 1.22 கோடி மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. அதேபோல், 2020-21ஆம் ஆண்டில் நெல் உற்பத்தி பரப்பளவு 20.36 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 22.05 லட்சம் ஹெக்டேராக உயர்ந்தது. இந்த வேளாண் மலர்ச்சியானது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

* காவிரிப் பாசனப்பகுதியில் உள்ள கால்வாய்களைத் தூர்வாருதற்காக 2021-22 ஆம் ஆண்டில் 62.91 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 859 கிலோமீட்டர் நீளமுள்ளகால்வாய்கள் தூர்வாரப்பட்ன. 4.90 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும். 13.341 இலட் சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு 39.73 இலட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.

*2022-23 ஆண்டுக்கான திட்டத்தில் காவிரி பாசனப்பகுதிகளில் கால்வாய்களைத் தூர்வாருவதற்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் கடைமடை வரை தண்ணீர் சென்றது. இதனால் முந்தைய ஆண்டை முறியடித்தது உற்பத்தி. 5.36 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும் - 13.53 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பாசாகுபடியும் நடந்தது. இதனால் 41.45 இலட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த ஆண்டும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நீர்வளத்துறை மட்டுமல்ல. வேளாண் பொறியியல் துறையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையும் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இவையுடன் குளம், குட்டைகளும் தூர்வாரப்பட்டு வருகின்றன. எனவே, முந்தைய இரண்டு ஆண்டுகளை விட உற்பத்தி அதிகம் ஆகும் என உறுதியாக நம்பலாம்.

வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம் அவர்கள், வேளாண் நிதிநிலை அறிக்கையின் தொடக் கத்தில் ஒன்றைச் சொல்லி இருந்தார். "வேளாண்மை என்பது தேடுதலாகத் தொடங்கி. நாகரீகமாக மருவி, வாழ்வாக மலர்ந்து, மக்களை வாழ்வித்த நிலை மாறி - நாளடைவில் பிழைப்பாகப் பிசகி, பிறழ்ந்த நிலையை மாற்றி - பணியாக மருவி, தொழிலாக உயர்ந்து -மீண்டும் தமிழ்நாடு எங்கும் பசுமை தழைத்தோங்க, பயிர்கள் செழித்தோங்க - ‘குடியானவன் வீட்டுக் கோழிமுட்டை, அதிகாரி வீட்டு அம்மியாலும் உடையாத' அளவுக்கு அவர்கள் வாழ்வு சமூகத்தில் - பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் வேளாண்மை நிதிநிலை அறிக்கை” – என்று சொல்லி இருந்தார். அதனை இன்று கண்முன்னே காண்கிறோம்.

நலத்திலும் - உழவர் மக்கள் மனத்திலும் பசுமை மலாந்து வருவதைப் பார்க்கிறோம். திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளைப் பார்வை யிட்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள். லால்குடி அருகில் ஆலங்குடியில் கால்வாய் வெட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்களைச் சந்தித்து முதலமைச்சர் அவர்கள் பேசினார்கள். “கூலி, சம்பளம் எல்லாம் முறையாகக் கிடைக்கிறதா?" என்று கேட்டார் முதல மைச்சர். 285 ரூபாய் கூலி முறையாக வருகிறது என்றும், 100 நாட்கள் வேலைகள் கிடைப்பதாகவும் அந்தப் பெண்கள் சொன்னார்கள். ஏதா வது குறை இருந்தால் சொல்லுங்கள் என்று முதலமைச்சர் அவர்கள் கேட்டபோது, "குறை எதுவும் இல்லை. நினைத்ததை எல்லாம் நிறை வேற்றி விட்டீர்கள் சார். மிகவும் சந்தோசமாக இருக்கிறது, சொன்னதை எல்லாம் செய்துவிட்டீர்கள்" என்று அந்தப் பெண்கள் சொன்னதாக ‘தினத்தந்தி” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“வேளாண்மையில் புரட்சி ஏற்படுத்துவோம்!” என்று சொன்னார் முதலமைச்சர் அவர்கள். அதனையும் செய்து காட்டி இருக்கிறார்.

banner

Related Stories

Related Stories