முரசொலி தலையங்கம்

“கர்­நா­ட­காவை போல மணிப்பூரிலும் சமூ­கங்­க­ளுக்கு இடையே கலவரத்தை உருவாக்கிவிட்டது பாஜக” - முரசொலி தாக்கு!

கர்நாடகாவில் கலவரத்தை ஏற்படுத்தியதைப் போலவே மணிப்பூரிலும் சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி விட்டது பா.ஜ.க. என முரசொலி விமர்சனம்.

“கர்­நா­ட­காவை போல மணிப்பூரிலும் சமூ­கங்­க­ளுக்கு இடையே கலவரத்தை உருவாக்கிவிட்டது பாஜக” - முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மணிப்பூர் எரிவது ஏன்? - பகுதி 1

பா.ஐ.க. ஆளும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. கடந்த ஆண்டு தான் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. இதோ பற்றி எரிகிறது அந்த மாநிலம். கர்நாடகா தேர்தல் பரப்புரையைக் கூட ஒத்தி வைத்து விட்டு மணிப்பூர் தீயை அடக்கிக் கொண்டு இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையாளர்களை கண்டவுடன் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை பகுதிகளில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் நிலவரம் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசித்தார். உடணடி யாக மத்திய பாதுகாப்பு படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை மேற்பார்வையிட உளவுத்துறை டி.ஜி.பி. அசுதோஷ் சின்ஹாவை ஒன்றிய அரசு நியமனம் செய்துள்ளது. அதோடு முன்னாள் டி.ஜி.பி.யான குல்தீப் சிங்கையும் அங்கு நியமனம் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது ஆர்.பி.எப். எனும் அதிரடி படையினர், சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப். உள்ளிட்ட மத்திய படை வீரர்கள் மணிப்பூரில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

“கர்­நா­ட­காவை போல மணிப்பூரிலும் சமூ­கங்­க­ளுக்கு இடையே கலவரத்தை உருவாக்கிவிட்டது பாஜக” - முரசொலி தாக்கு!

தற்போதைய சூழலில் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை பகுதியில் இருந்து 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் 600க்கும் அதிகமானவர்கள் அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து மக்கள் வெளியேற தொடங்கி உள்ளனர். மணிப்பூர் கலவரத்தில் 54 பேர் வரை கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை கும்பல் தாக்கியதில் அவர்கள் இறந்திருக்க லாம் எனவும் கூறப்படுகிறது. இம்பால் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீ வைக்கப்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பற்றிய கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது.

மணிப்பூரில் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மலைப்பகுதிகளில் இருப்போர் ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். மணிப்பூரில் தற்போது வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்குச் சென்ற ராணுவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

குக்கி போர் நினைவுச்சின்னம் எரிக்கப்பட்டது. குக்கி சமூகத்தைச் சேர்ந்த டி.ஜி.பி. பி டவுங்கலை, காவல்துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலக்கி, கூடுதல் டி.ஜி.பி. (உளவுத்துறை) அசுதோஷ் சின்ஹா விடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மணிப்பூர் மாநிலம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

“கர்­நா­ட­காவை போல மணிப்பூரிலும் சமூ­கங்­க­ளுக்கு இடையே கலவரத்தை உருவாக்கிவிட்டது பாஜக” - முரசொலி தாக்கு!

3200 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் ராணுவத்தின் விமான படையினர் அங்கு முகாமிட்டு அமைதி திரும்ப ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இம்பாலில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்த இந்திய வருவாய்துறை அதிகாரி லெட்மின்தாங் ஹாக்கிப்பின் என்பவர் வன்முறையாளர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி உள்ளது.

இம்பாலில் உதவி வரித்துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் லெட்மின்தாங் ஹாக்கிப்பின். அங்குள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். கலவரத்தின் போது ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்து அவரை வெளியே இழுத்து வந்துள்ளது. பின்னர் அவர்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அதிகாரி லெட்மின் தாங் ஹாக்கிப்பின் பரிதாபமாக இறந்துள்ளார்.

“கர்­நா­ட­காவை போல மணிப்பூரிலும் சமூ­கங்­க­ளுக்கு இடையே கலவரத்தை உருவாக்கிவிட்டது பாஜக” - முரசொலி தாக்கு!

"இவரது இறப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குரூரமாக நடந்த இந்த சம்பவத்தின் மூலம் அதிகாரி லெட்மின்தாங் ஹாக்கிப்பின் குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு என்ன ஆறுதல் கூறமுடியும் என தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு எங்கள் அமைப்பு சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்” என்று ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, சிக்கிம், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மிசோரம் உள்ளிட்டவை வடகிழக்கு மாநிலங்களாக அழைக்கப்படுகின்றன. நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகையில் இந்த மாநிலங்கள் மிகவும் சிறியவையாக உள்ளன. இங்கு அதிகளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்திலும் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்தான் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் மோதலை உருவாக்கி விட்டார்கள்.

கர்நாடகாவில் பிரச்சினையை உருவாக்கியதைப் போலவே மணிப்பூரிலும் உருவாக்கி இருக்கிறது பா.ஐ.க.

“கர்­நா­ட­காவை போல மணிப்பூரிலும் சமூ­கங்­க­ளுக்கு இடையே கலவரத்தை உருவாக்கிவிட்டது பாஜக” - முரசொலி தாக்கு!

2பி -நிலையில் உள்ள மதச் சிறுபான்மையினருக்கான (முஸ்லிம்) இட ஒதுக்கீட்டை கர்நாடக பா.ஜ.க. அரசு நீக்கியது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம் மக்களுக்கு இதுவரை 4 விழுக்காடு இடஒதுக்கிடு வழங்கப்பட்டு வந்தது. அதனை மொத்தமாக நீக்கினார்கள். அவர்களை, மொத்தமாகக் கொண்டு போய் 'பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதி ஏழைகளுக்கான (EWS) பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். பறிக்கப் பட்ட 4 விழுக்காட்டை லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடாக்கள் ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு தலா 2 விழுக்காடு எனக் கொடுத்துவிட்டார்கள்.

மதச் சிறுபான்மையினரான இசுலாமியர்களையும் - சமூகப் பிரிவுகளான இரண்டு ஜாதியினரையும் எதிரெதிராக நிறுத்திவிட்டது பா.ஜ.க. தனியாக 15 விழுக்காடு தேவை என்ற லிங்காயத்துகளுக்கு 2 விழுக்காடு மட்டுமே கொடுத்து விட்டார்கள்.

இவை அனைத்தும் சேர்ந்து கர்நாடகாவில் கலவரத்தை ஏற்படுத்தியதைப் போலவே மணிப்பூரிலும் சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி விட்டது பா.ஜ.க. – தொட­ரும்!

banner

Related Stories

Related Stories