முரசொலி தலையங்கம்

“மக்கள் நலனையே நோக்கமாகக் கொண்ட தி.மு.க அரசு 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..” - முரசொலி பாராட்டு !

மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி முன்னேற்றப் பாதையில் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

“மக்கள் நலனையே நோக்கமாகக் கொண்ட தி.மு.க அரசு 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..” - முரசொலி பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மூன்றாம் ஆண்டில்... முன்னேற்றப் பாதையில்...

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்கள்.

“அ.தி.மு.க.வின் பிற்போக்குத்தனமான ஆட்சியினால், தமிழ்நாட்டு மக்கள் அனைத்துவகைப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டு, நெருக்கடியான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சீரழிந்த இந்த சூழ்நிலையை முற்றிலும் மாற்றி அமைப்பதற்காகவும், தொலை நோக்குப் பார்வை கொண்ட - இந்த தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்கிறேன்” என்று அப்போது தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொண்ட அறிக்கை அது. அதில் 85 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றிக் காட்டப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு நிறைவேற்றப்பட்ட மிகமிக முக்கியமான வாக்குறுதிகள் இவை...

“மக்கள் நலனையே நோக்கமாகக் கொண்ட தி.மு.க அரசு 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..” - முரசொலி பாராட்டு !

« தமிழகம் முழுவதும் உள்ளூர் பேரூந்துகளில் மகளிருக்கு கட்டணம் இல்லா பயண வசதி வழங்கப்படும்.

« கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ரூ.4000 நிதி கலைஞர் பிறந்த ஜூன் 3 அன்று வழங்கப்படும்.

« பெட்ரோல் விலை ரூ 3 குறைக்கப்படும்.

« ஆவின் பால் லிட்டருக்கு ரூ 3 குறைக்கப்படும்.

« ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டப்படி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க தனித்துறை அமைக்கப்படும்.

« புதிய திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் உருவாக்கப்படும்.

« விவசாயிகளிடம் கலந்து பேசி வேளாண்மைக்கென தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

« விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும்.

« தொழில் வளர்ச்சியை பெருக்க புதிய கொள்கைகள் வகுக்கப்படும்.

« பொதுப்பணித்துறையோடு இருக்கும் நீர்ப் பாசனத் துறையை தனியாக பிரித்து தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

« தமிழகத்தின் கடன் சுமையை குறைப்பதற்கும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உயர்நிலைக்குழு அமைக்கப்படும்.

« தமிழகத்துக்கு என தனியே மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.

« தமிழகத்தில் உள்ள தொழில்நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் நிறைவேற்றப்படும்.

« மாநில ஆட்சிமொழிகள் அனைத்தும் மத்திய ஆட்சி மொழியாக வேண்டும்.

« மத்தியப் பணிகளுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும்.

“மக்கள் நலனையே நோக்கமாகக் கொண்ட தி.மு.க அரசு 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..” - முரசொலி பாராட்டு !

« அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும்.

« நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றுவோம்.

« மருத்துவ இடங்கள் அனைத்தும் மாநிலத் தொகுப்புக்கே வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

«மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

« வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் புதிய மீத்தேன், ஷேல்வாயு திட்டங்களை கொண்டு வந்தால் அனுமதிக்க மாட்டோம்.

« சேதுசமுத்திரத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தீர்மானம் கொண்டு வருவோம்.

« மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெற குரல் கொடுப்போம்.

« கல்வித்துறை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

« ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரிக்கிறோம்.

« ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

« குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவோம்.

“மக்கள் நலனையே நோக்கமாகக் கொண்ட தி.மு.க அரசு 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..” - முரசொலி பாராட்டு !

« தமிழர் தொன்மையை விளக்கும் அருங்காட்சியகம் கீழடியில் அமைக்கப்படும்.

« தமிழர் பழம் பெருமையை விளக்கும் ஊர்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.

« அனைத்துக் காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்.

« பத்திரிகையாளர் நலன் காக்கும் ஆணையம் அமைக்கப்படும்.

« மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்.

« வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனித்துறை உருவாக்கப்படும்.

« ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

« தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் தொலைக் காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

« சமத்துவ புரங்கள் சீரமைக்கப்படும்.

« புதிய சமத்துவபுரங்கள் கட்டப்படும்.

« அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் புத்துயிர் ஊட்டப்படும்.

« நமக்கு நாமே திட்டம் புத்துயிர் ஊட்டப்படும்.

“மக்கள் நலனையே நோக்கமாகக் கொண்ட தி.மு.க அரசு 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..” - முரசொலி பாராட்டு !

« பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

« நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்குகள் ரத்து செய்யப்படும்.

« பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலைக்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

« பள்ளிப் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து திட்டம்

« போட்டித் தேர்வில் பங்கெடுப்பவர்க்கு பயிற்சிகள்

« வேலை வாய்ப்பு பயிற்சித் திறன்கள் வழங்கப்படும்.

« அரசுப் பணிக்கு செல்லும் மகளிருக்கு 12 மாத பேறுகால விடுப்பு

« சைபர் காவல் நிலையங்கள்

« மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள்

« சென்னையில் அரசு நவீன மருத்துவமனை

« காவலர் ஆணையம்

« கோவில் பூசாரிகளுக்கு நிதி உதவி

« வடலூரில் வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கம் உருவாக்கம்

« புனித நகரங்களுக்கு சுற்றுலா - இவை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட சில முக்கியமான வாக்குறுதிகள். அவை நிறைவேற்றப்பட்டு விட்டன.

“மக்கள் நலனையே நோக்கமாகக் கொண்ட தி.மு.க அரசு 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..” - முரசொலி பாராட்டு !

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது முதல் இதுவரை வெளியிடப்பட்ட அறிவிப்புகள் 3,346. இதில் 95 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 962 அறிவிப்புகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன. 2,216 அறிவிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 144 அறிவிப்புகளுக்கு விரைவில் அரசாணைகள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 பணிகள் ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளது.

இதுவரை 6 ஆயிரத்து 905 கோப்புகளில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கையெழுத்துப் போட்டுள்ளார்கள். 350 ஆய்வுக் கூட்டங்களை துறை ரீதியாக நடத்தி இருக்கிறார்கள். மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி முன்னேற்றப் பாதையில் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

Related Stories

Related Stories