முரசொலி தலையங்கம்

'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் அறத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது -முரசொலி !

இந்த திட்டம் பசித்த வயிறுகளுக்கான சோறுதானே தவிர, எல்லாம் சாப்பிட்டவர்களுக்கு தரப்படும் பால் பாயாசம் அல்ல.

'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் அறத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது -முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (30-03-2023)

ஆயிரம் கேள்விக்கு ஒரே பதில்!

"ஆயிரம் ரூபாய் எப்போது தருவீர்கள்?" என்பது கேள்வி! “இதோ! அறிவிக்கப் போகிறோம்!" என்பது முதலமைச்சரின் பதில்! “உங்களிடம் நிதி எங்கே இருக்கிறது?" என்பது கேள்வி!

“இதோ! ரூ.7000 கோடியை ஒதுக்கிவிட்டோம்" என்பது முதலமைச்சரின் பதில்!

“சிலருக்குத்தானே கொடுக்கப் போகிறீர்கள்? என்பது கேள்வி!

“ஒரு கோடி பேருக்கு தரப் போகிறோம்" என்பது முதலமைச்சரின் பதில்!

"அனைவர்க்கும் தர வேண்டும்" என்பது கோரிக்கை.

“மாதம் ஆயிரம் ரூபாய் என்பது யார், யாருடைய முகத்தில் எல்லாம் மலர்ச்சியை ஏற்படுத்துமோ, அவர்கள் அத்தனைபேருக்கும் இத்திட்டம் பலன் கொடுக்கும்” என்பது முதலமைச்சரின் விளக்கம்!

ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டாலும் பதில் ஒன்று தான். “மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வை சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியையும், இந்த திராவிட மாடல் அரசு கைவிட்டுவிடாது” என்று சொல்லி விட்டார் முதலமைச்சர் அவர்கள். இதில் அனைத்துக் கேள்விக்கான பதிலும் அடங்கி இருக்கிறது.

'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் அறத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது -முரசொலி !

"மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தால் தன் குழந்தையின் கல்விச் செலவுக்கு உதவும் என்றொரு பெண் நினைத்தால், நமது அரசின் காக்கும் கரங்கள் அவருக்கு உதவும்.நடைபாதையில் வணிகம் செய்திடும் பெண்மணி, அதிகாலை யில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், ஒரேநாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் பணிப்பெண்கள் மட்டுமின்றி, விலை மதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து செலுத்தி வரும் இல்லத்தரசிகளும், இந்தத்திட்டத்தால் பயன்பெறுவார்கள்” என்று மிகத் தெளிவாக விளக்கிவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இந்த திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட யாரும் இப்படி விதண்டாவாதக் கேள்விகளைக் கேட்க மாட்டார்கள். இந்த திட்டம் பசித்த வயிறுகளுக்கான சோறுதானே தவிர, எல்லாம் சாப்பிட்டவர்களுக்கு தரப்படும் பால் பாயாசம் அல்ல. இது பெண்களுக்கான நன்கொடையோ - பாக்கெட் மணியோ - டிப்ஸோ அல்ல. ஏதுமற்றவர்களுக்கு உதவுவதே அறம். அந்த அறத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம் இது."ஆடுகளை ஓட்டிக்கொண்டு வரும் ஒரு விவசாயி, ஒரே ஒரு ஆட்டை மட்டும் தோளில் தூக்கிப் போட்டு சுமந்து வருவான். அது காலில் அடி பட்டு நடக்க முடியாத ஆடாக இருக்கும். அதற்குப் பேர்தான் சமூக நீதி" - என்று சொன்னவர் தலைவர் கலைஞர்.

'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் அறத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது -முரசொலி !

அத்தகைய நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது இந்த திட்டம்.ஏழைக் குடும்பப் பெண்களின் வருமான அளவை அதிகரிப்பதும் - வறுமை விகிதத்தை குறைப்பதும்தான் இந்த திட்டத்தின் நோக்கம். குடிமக்களிடம் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இது. தனிநபரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இது வழங்கப்படுகிறது. பொருளாதார வசதி உள்ள பெண்ணுக்கு,பொருளாதார வசதி இல்லாத பெண்ணை விட கூடுதல் உரிமை சமூகத்தில் குடும்பத்தில் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் இந்த ஆயிரம் ரூபாய் என்பது சமூக அந்தஸ்தை உயர்த்தும் பொருளாதார உதவியாக வழங்கப்படுகிறது. இதனை ஏழை எளிய மகளிர் பெற வேண்டும் என்றே உயர்ந்த நிலையில் இருக்கும் பெண்களும் எதிர்பார்ப்பார்கள்.

ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தரப்போகிறதே தமிழ்நாடு அரசு என்று ஊடகம் ஒன்று வசதியான பெண்களிடம் கேட்ட போது. "இல்லாத ஏழை மக்களுக்கு இது பெரிய உதவியா இருக்கும்' என்று தான் சொல்கிறார்கள். யாருக்கு பயனுள்ளது என்பது மக்களுக்கே தெரிகிறது.மற்ற நாடுகளில் வறுமைக்கோடு என்பது ஏழைகளாக மட்டும் இருப்பார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் சமூகத்தின் அடிமட்ட வகுப்பாகக் கருதப்படும் மக்களாக இருப்பார்கள். எனவே இங்கே வறுமைக்கோடு என்பதை சமூகக் கோடாகப் பார்த்து திட்டங்களைத் திட்ட வேண்டி உள்ளது.

'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் அறத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது -முரசொலி !

வறுமை ஒழிப்புத் திட்டங்கள் முழுப்பயனைத் தராமல் போனதற்குக் காரணம் - வறுமையில் உள்ள மக்களை மட்டுமே இனம் கண்டு அவர்களுக்குத் தராமல் போனதுதான். பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களின் பலன் முறையாக - தேவையானவர்களுக்கு மட்டும் வழங்காமல் போனதுதான் காரணம். எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனாளிகளைச் சரியாக அடையாளம் காண வேண்டும். இதனை முறைப்படுத்தவில்லை என்றால் தேவையானவர்களுக்கு உரிய பலன் போய்ச் சேராது.

எந்தத் திட்டமாக இருந்தாலும் அந்தத் திட்டம் என்ன நோக்கத்துக்காகக் கொண்டு வரப்படுகிறதோ அந்த அடிப்படையிலேயே பயனாளி ளும் தீர்மானிக்கப்படுவார்கள். கிராமப்புற ஏழை எளிய பெண்களுக்கு - ஆதரவற்ற பெண்களுக்கு - ஆதரவாக ஒரு தொகையை மாதம் தோறும் தர வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் நேரடியாகவோ - மறைமுகமாகவோ பலன்பெறாத பெண்களுக்கு அரசின் சார்பில் உதவி தரப்பட இருக்கிறது.

'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் அறத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது -முரசொலி !

அரசின் நலத்திட்டங்கள் பயனளிக்காமல் போவதற்கு முக்கியக் காரணம், ஒதுக்கப்பட்ட தொகை வீணடிக்கப்படுவதை காரணமாக பொருளாதார அறிஞர்கள் சொல்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி “ஏழைகளின் பொருளாதாரம்" (Poor Economics) என்ற புத்தகத்தில் “நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளை பேசாமல் பிரச் சினைகளை மட்டுமே பேசுவது மேம்பாட்டுக்கு உதவாது” என்று கூறு கிறார். இப்போது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்க இருக்கும் உரிமைத் தொகை என்பது நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வு ஆகும்.இவ்வளவு விளக்கத்துக்குப் பிறகும் ஒரு கும்பல் கேட்கிறது: “ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும்?" என்று! “ஆயிரம் ரூபாய் கூட இல்லாதவரிடம் போய் அதைக் கேள்" என்பதுதான் ஒரே பதில்!

banner

Related Stories

Related Stories