முரசொலி தலையங்கம்

கிழிகிறது பாஜக ஆட்­சி­யின் முகத்திரை.. மோடியின் நாடகத்தை அம்பலப்படுத்திய நாளிதழ்கள்.. முரசொலி தாக்கு !

பா.ஜ.க. ஆட்­சி­யின் முகத்­தி­ரை கிழிந்து வரு­கி­றது.இவை அனைத்­தை­யும் ‘புதை­கு­ழி­யில்’ போட்டு மூட நினைக்­கி­றார் பிர­த­மர்.

கிழிகிறது பாஜக ஆட்­சி­யின் முகத்திரை.. மோடியின் நாடகத்தை அம்பலப்படுத்திய நாளிதழ்கள்.. முரசொலி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (15-03-23)

‘புதைகுழி’ பேச்சுகள் எதனால்?

கர்­நா­டகா மாநி­லத்­தின் மீது திடீர் பாசம் வந்­தி­ருக்­கி­றது பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு. பாசம் வரத்­தான் செய்­யும். ஏனென்­றால் அங்கு சட்­ட­மன்­றத் தேர்­தல் வரப் போகி­றது. வோட்டு அறு­வ­டைக்­காக அவ­ரது இத­யம் கர்­நா­ட­கா­வுக்­கா­கத் துடிக்­கி­றது.

கடந்த இரண்டு மாதத்­தில் ஐந்­தா­வது முறை­யாக பிர­த­மர் அவர்­கள் கர்­நா­டக மாநி­லத்­துக்கு வந்து சென்­றுள்­ளா­ராம். இதில் இருந்தே அவர் ஆர்­வம் தெரி­கி­றது. ‘தேர்­த­லுக்­காக வேலை­கள் ஜரூர்’ என்று ‘தின­ம­லர்’ தலைப்­புச் செய்­தி­யா­கவே வெளி­யிட்­டுள்­ளது. ‘தேர்­தல் வியூ­கம்’ என்று ‘தின­மணி’ பெட்­டிச் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. தேர்­தல் ஆதா­யத்­துக்­காகத்­தான் இது என்­பதை அவர்­க­ளது ஆத­ரவு சக்­தி­களே ஒப்­புக் கொண்டு வரு­கின்­றன.

கிழிகிறது பாஜக ஆட்­சி­யின் முகத்திரை.. மோடியின் நாடகத்தை அம்பலப்படுத்திய நாளிதழ்கள்.. முரசொலி தாக்கு !

பிர­த­ம­ரின் பேச்சு அவ­ரது தோல்­வியை இப்­போதே ஒப்­புக் கொள்­வ­தைப் போல இருக்­கி­றது. ‘இரும்பு மனி­தர்’ என்று சொல்­லப்­ப­டும் அவர், ‘காங்­கி­ரஸ் உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் எனக்கு புதை­குழி தோண்ட கனவு காண்­கி­றது’ என்று பேசி இருக்­கி­றார். ‘காங்­கி­ரஸ் இல்­லாத இந்­தியா’ என்­பது அவ­ரது முழக்­கம். அந்த முழக்­கம் ஈன ஸ்வரத்­தில் ஒலிப்­ப­தையே பிர­த­ம­ரின் உரை காட்­டு­கி­றது. புதை­குழி தோண்­டும் அள­வுக்கு காங்­கி­ர­சுக்­கும், எதிர்க்­கட்­சி­க­ளுக்­கும் பலம் இருப்­ப­தையே பிர­த­ம­ரின் உரை காட்­டு ­கி­றது. எதற்­காக இந்த கழி­வி­ரக்­கம் தேடும் பேச்சு? ஏன் தேவைப்­ப­டு­கி­றது இந்த அழு­காச்சி காவி­யம்?

பல்­வேறு திட்­டப்­ப­ணி­க­ளைத் தொடக்கி வைப்­ப­தற்­காக கர்­நா­டகா வந்­தி­ருந்த பிர­த­மர், பெங்­க­ளூரு – மைசூரூ அதி­வி­ரை­வுச் சாலை­யைத் திறந்து வைத்­துள்­ளார். 8,480 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் இது அமைக்­கப்­பட்­டுள்­ளது. மொத்­தம் 118 கிலோ மீட்­டர் நீள­முள்ள சாலை­யா­கும் இது. இது முழு­மை­யாக முடிந்­துள்­ளதா என்­றால் இல்லை. இன்­னும் 21 கி.மீ. தூரத்­துக்கு சாலை­கள் போடப்­ப­ட­வில்லை. இந்­தத் திட்­டத்­திற்கு 2018 ஆம் ஆண்டு அப்­போ­தைய காங்­கி­ரஸ் அரசு ஒப்­பு­தல் வழங்கி நிதி ஒதுக்­கி­யது. ஐந்து ஆண்­டு­கள் கழித்­தும் அரை­கு­றை­யா­கவே இருக்­கி­றது. இந்­தச் சாலை­களை இணைக்­கும் ராம்­ந­கர், மத்­தூர், மண்­டியா உட்­பட பல்­வேறு பகு­தி­க­ளில் இணைப்­புச் சாலை பணி­கள் இன்­னும் முடி­வ­டை­ய­வில்லை.ஏன் இந்த அவ­ச­ரம்? இதோ ‘தின­ம­ணி’யே எழு­து­கி­றது:

‘‘பழைய மைசூரு பகு­தி­யைச் சேர்ந்த மாண்­டியா மாவட்­டத்­தில் சாலைப் பேர­ணி­யை­யும் விரை­வுச்­சாலை தொடக்க விழா நிகழ்ச்­சி­யை­யும் பா.ஜ.க. நடத்­தி­யது சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்­கான வியூ­க­மா­கவே பார்க்­கப்­ப­டு­ கி­றது. மாண்­டியா மாவட்­ட­மா­னது முன்­னாள் பிர­த­மர் தேவ­க­வுடா தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற ஜனதா தளம் கட்சி, செல்­வாக்கு செலுத்­தும் பகு­தி­யாக உள்­ளது. அங்கு காங்­கி­ரஸ் கட்­சிக்­கான ஆத­ர­வா­ளர்­க­ளும் குறிப்­பி­டத்­தக்க அள­வில் உள்­ள­னர். பழைய மைசூரு பிராந்­தி­யத்­தில் உள்ள 11 மாவட்­டங்­க­ளில் 89 சட்­டப்­பே­ர­வைத் தொகு­தி­கள் அமைந்­துள்­ளன. அந்த மாவட்­டங்­க­ளில் பா.ஜ.க.வுக்கு குறைந்த அள­வி­லான ஆத­ரவே உள்­ளது. அதைக் கருத்­தில் கொண்டு அங்கு மக்­கள் ஆத­ர­வைப் பெற­வும் மதச்­சார்­பற்ற ஜனதா தளம், காங்­கி­ரசு கட்­சி­க­ளின் செல்­வாக்­கைக் குறைக்­க­வும், தொடர் நட­வ­டிக்­கை­க­ளில் பா.ஜ.க. ஈடு­பட்டு வரு­கி­றது’’ என்று எழுதி இருக்­கி­றது ‘தின­மணி’. சட்­ட­மன்­றத் தேர்­தல் வரு­வ­தால் அர­சி­யல் லாபத்­துக்­காக நடத்­தப்­பட்ட நிகழ்ச்சி இது என்­பதை அம்­ப­லப்­ப­டுத்தி இருக்­கின்­றன நாளி­தழ்­கள்.

கிழிகிறது பாஜக ஆட்­சி­யின் முகத்திரை.. மோடியின் நாடகத்தை அம்பலப்படுத்திய நாளிதழ்கள்.. முரசொலி தாக்கு !

திட்­டங்­க­ளைத் தொடங்கி வைப்­பதை வர­வேற்­க­லாம். ஆனால் தேர்­தல் வரு­வ­தற்கு முன்­பு­தான் தொடங்கி வைப்­பார்­களா? ஐந்­தாண்டு காலம் என்ன செய்­தார்­கள் அந்த மாநி­லத்­துக்கு என்­றால் எது­வு­மில்லை. கர்­நா­டக காங்­கி­ரசு கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் காதில் பூ வைத்­துக் கொண்டு சபைக்­குள் வந்­தி­ருந்­தார்­கள். ‘‘கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லின்­போது தேர்­தல் வாக்­கு­று­தி­யில் அளித்த எந்த திட்­டங்­க­ளை­யும் பா.ஜ.க. அரசு இது­வரை நிறை­வேற்­ற­வில்லை… அதே­போல், கடந்த பட்­ஜெட்­டில் வெளி­யி­டப்­பட்ட திட்­டங்­க­ளை­யும் நிறை­வேற்­றா­மல் மக்­களை பா.ஜ.க. அரசு ஏமாற்­றி ­விட்­டதை சுட்­டிக்­காட்­டும் வகை­யில் காதில் பூ வைத்­துள்­ளோம்’’ என்று சொன்­னார்­கள் காங்­கி­ரஸ் எம்.எல்.ஏக்­கள். ‘காதில் பூ’ என்ற பொருள்­ப­டும் வார்த்­தை­யான #KiviMeleHoova என்ற ஹேஷ்­டேக்­கும் சமூக வலை ­த­ளங்­க­ளில் டிரெண்ட் ஆனது.

இதற்கு என்ன கார­ணம் என்­பதை எதிர்க்­கட்­சித் தலை­வர் சித்­த­ரா­மையா சொல்லி இருந்­தார். ‘‘தேர்­தல் அறிக்­கை­யில் 600 வாக்­கு­று­தி­களை அளித்த பா.ஜ.க. அதில் 10 சத­வீ­தத்தை மட்­டுமே நிறை­வேற்றி இருக்­கி­றது’’ என்று சொல்லி இருக்­கி­றார் அவர். கர்­நா­ட­கத்­தில் பா.ஜ.க. அரசு சார்­பில் மேற்­கொள்­ளப்­ப­டும் பணி­க­ளுக்கு ஒப்­பந்­த­தா­ரர்­க­ளி­டம் 40 சத­வீ­தம் கமி­ஷன் பெறப்­ப­டு­வ­தாக பிர­சா­ரம் செய்­து­வ­ரும் காங்­கி­ரஸ் கட்சி பேடி­எம் (PAYTM) க்யூ ஆர் கோட் (QR Code) போலத் தோற்றமளிக்­கும் ஒரு போஸ்­டரை வடி­வ­மைத்து அதை சுவர்­களில் ஒட்­டி­யது. அதில் பேடி­எம் பெயர் இருக்­கும் இடத்­தில் ‘பே சிஎம்’ என கொட்டை எழுத்­தில் அச்­சி­டப்­பட்­டி­ருந்­தது. க்யூ ஆர் கோட் இடம் பெறும் இடத்­தில் கர்­நா­டக முத­ல­மைச்­சர் பச­வ­ராஜ் பொம்மை உரு­வம் இடம் பெற்­றி­ருந்­தது. அம்­மா­நில அமைச்­சர்­கள் மீது தொடர்ந்து ஊழல் குற்­றச்­சாட்­டு­களை பா.ஜ.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களே எழுப்பி வரு­கி­றார்­கள்.

கிழிகிறது பாஜக ஆட்­சி­யின் முகத்திரை.. மோடியின் நாடகத்தை அம்பலப்படுத்திய நாளிதழ்கள்.. முரசொலி தாக்கு !

கர்­நா­டகா பா.ஜ.க. எம்.எல்.ஏ. மதல் விரு­பாக்­சப் பாவின் மகன் ஒப்­பந்­த­தா­ரர் ஒரு­வ­ரி­டம் லஞ்­சம் வாங்­கிய போது கையும் கள­வு­மாக சிக்­கி­னார். தாவ­ண­கெரே மாவட்­டம் சென்­ன­கிரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான மதல் விரு­பாக்­சப்பா, மாநில அர­சுக்கு சொந்தமான கர்­நா­டகா சோப்பு மற்­றும் டிடர்­ஜென்ட் லிமி­டெட் நிறு­வ­னத்­தின் தலை­வ­ரா­க­வும் இருந்து வரு­கி­றார். இவ­ரது மகன் பிர­சாந்த் மதல்

என்­ப­வரை லோக் ஆயுக்தா போலீ­சார் அதி­ர­டி­யாக கைது செய்­துள்­ள­னர். அத­னைத் தொடர்ந்து அவ­ரின் வீடு மற்­றும் அலு­வ­ல­கத்­தில் சோதனை நடத்­தி­ய­போது, அலு­வ­ல­கத்­தில் இருந்து ரூ.1.70 கோடி­யும், வீட்­டில் இருந்து ரூ.6 கோடி­யும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. பா.ஜ.க. ஆட்­சி­யின் முகத்­தி­ரையை இது கிழித்து வரு­கி­றது.இவை அனைத்­தை­யும் ‘புதை­கு­ழி­யில்’ போட்டு மூட நினைக்­கி­றார் பிர­த­மர். அத­னால்­தான் ‘புதை­குழி’ பேச்­சுக்­கள் எல்­லாம்!

banner

Related Stories

Related Stories