முரசொலி தலையங்கம்

‘‘இந்தி பேசாதவர்களை மூன்றாந்தர குடிமக்களாக மாற்றிவிட்டது பாஜக அரசு”-முரசொலி

“‘இந்திஷா’ என்று தனது பெயரை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு இந்தித்துறை அமைச்சராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அமித்ஷா” என முரசொலி தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

‘‘இந்தி பேசாதவர்களை மூன்றாந்தர குடிமக்களாக மாற்றிவிட்டது பாஜக அரசு”-முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்திவாலாக்களின் அறிக்கை 1

‘‘இன்னொரு மொழிப் போரைத் திணிக்காதீர்கள்” என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்தியர்களை விட இந்தியைக் காப்பாற்றும் கட்சியாகவே பா.ஜ.க. இருந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். இந்தி பேசும் மாநில மக்கள் அதிகம் வாழும் மாநிலத்தில்தான் அந்தக் கட்சிக்கு அதிகம் செல்வாக்கு இருக்கிறது என்பதால் தான் அவர்கள் இந்திக்கு லாலி பாடுவதை எப்போதும் தங்கள் பல்லவியாக வைத்திருப்பார்கள்.

‘‘இந்தி பேசாதவர்களை மூன்றாந்தர குடிமக்களாக மாற்றிவிட்டது பாஜக அரசு”-முரசொலி

இந்தி பேசாத மக்களை வஞ்சிப்பது மட்டும்தான் பா.ஜ.க.வின் வழக்கம் ஆகும். இந்தியை நேரடியாகத் திணிக்க முடியாமல் - தாய் மொழிக் கல்வி என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்வார்கள். இந்தியைத் திணிக்க அவர்களுக்கு பெரும் தடையாக இருப்பது உலக மொழியான ஆங்கிலம்தான்.

தாய்மொழியின் பேரால் ஆங்கிலத்தை அகற்றுவதும் - ஆங்கிலம் அகற்றப்பட்ட இடத்தில் இந்தியை உட்கார வைப்பதும் இந்தி கோலோச்சும் காலத்தில் சமஸ்கிருதத்தை ஆட்சிமொழி ஆக்குவதும்தான் பா.ஜ.க.வின் பிதாமகர்களது காலம் காலமான சதிவலைப் பாதை.

அதாவது மொத்த மொழிகளையும் அழிப்பது - சமஸ்கிருத இந்தியாவை உருவாக்குவதுதான் அவர்களது எண்ணம். அதற்காகத்தான் பழம் பெருமை - நமது பாரம்பர்யம் - வேத கால விழுமியங்கள் என்றெல்லாம் பேசுவது.

‘‘இந்தி பேசாதவர்களை மூன்றாந்தர குடிமக்களாக மாற்றிவிட்டது பாஜக அரசு”-முரசொலி

நமக்கும் பழம் பெருமை இருக்கிறது, அது சங்க காலப் பெருமை ஆகும். நமக்கும் பண்பாட்டு விழுமியங்கள் இருக்கிறது. நமக்கும் வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரையிலான மெய்யியல் கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் அப்புறப்படுத்தி ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, சமஸ்கிருத இலக்கியங்களில் சொல்லப்பட்டவை மட்டுமே இந்தியப் பண்பாடு என்று காட்ட முயற்சித்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பல்வேறு விஷமத்தனமான கருத்துக்களைச் சொன்னார். அதில் ஒன்று, ஆங்கிலத்துக்குத் தரக்கூடிய முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும் என்பது ஆகும். அவர் சொன்ன அடுத்த நாளே நாடாளுமன்ற நிலைக்குழு, இந்தியை முழுமையாகத் திணிக்கும் திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கொடுத்துவிட்டது.

‘‘இந்தி பேசாதவர்களை மூன்றாந்தர குடிமக்களாக மாற்றிவிட்டது பாஜக அரசு”-முரசொலி

‘இந்திஷா’ என்று தனது பெயரை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு இந்தித்துறை அமைச்சராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அமித்ஷா. கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தி நாள்’ விழாவில் உரையாற்றியபோது, “ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டு, இந்தி மொழியை அனைத்து நிலைகளிலும் கட்டாயமாக்குவதுதான் பா.ஜ.க. அரசின் நோக்கம்” என்று அறிவித்தார். தனக்கு வரும் கோப்புகள் இந்தியில்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டவர் அவர்.

உள்துறையை முழுமையாக இந்தி மயமாக்கிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளவர் அவர். தான் நடத்தும் கூட்டங்கள் இந்தியில் தான் நடக்க வேண்டும் என்று சொன்னவர் அவர். அத்தகைய அமித்ஷா தலைமையிலான குழு, இந்திக் குழுவாகத்தானே செயல்படும்? வேறு எப்படிச் செயல்படும்.?

‘‘இந்தி பேசாதவர்களை மூன்றாந்தர குடிமக்களாக மாற்றிவிட்டது பாஜக அரசு”-முரசொலி

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11 ஆவது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி மொழியை வலிந்து திணிப்பதற்கான பரிந்துரைகளையே இவர்கள் அளித்திருக்கிறார்கள்.

>> கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி நிச்சயம் இடம் பெற வேண்டும்.

>> கல்லூரிகளில் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைக் கொண்டு வரவேண்டும்.

>> போட்டித் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் நிறுத்தப்பட வேண்டும்.

>> இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்.

>> ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்களின் இந்தி மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் - இப்படி இந்தி மயமாகவே இருக்கிறது அந்த அறிக்கை. இந்திவாலாக்களின் அறிக்கை என்று இதனைச் சொல்லலாமே தவிர நாடாளுமன்றக் குழு அறிக்கை என்று சொல்ல முடியாது. இந்த அறிக்கையை அலுவல் மொழி தொடர்பான அறிக்கையாகப் பார்க்க முடியாது. இந்தி பேசாத மாநில மக்கள் மீது தொடுக்கப்பட்டு இருக்கும் போர் ஆகும்.

‘‘இந்தி பேசாதவர்களை மூன்றாந்தர குடிமக்களாக மாற்றிவிட்டது பாஜக அரசு”-முரசொலி

‘அலுவல் மொழிச் சட்டம் 1963’ இன் படி கடந்த 1976 ஆம் ஆண்டு அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. அதில் மக்களவையைச் சேர்ந்த 20 உறுப்பினர்களும், மாநிலங்களவையைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள். இந்தி மொழிப் பயன்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை குடியரசுத் தலைவரிடம் இவர்கள் அறிக்கை தருவார்கள்.

இக்குழுவின் தலைவராக இப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா இருக்கிறார். அவரைவிட இந்தியைக் காப்பாற்ற தகுதியான ஆள் யாரும் இருக்க முடியாது. இவர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் அல்ல. ஆனால் இந்தி பேசும் மக்களால்தான் பா.ஜ.க. வாழ்கிறது என்பதை உறுதியாக நம்புகிறவர். இவர் பிறந்த குஜராத் மாநிலம், இவர்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் ‘பி’ பிரிவில்தான் இருக்கிறது.

‘‘இந்தி பேசாதவர்களை மூன்றாந்தர குடிமக்களாக மாற்றிவிட்டது பாஜக அரசு”-முரசொலி

இந்தி மொழிப் பயன்பாடு அடிப்படையில் இந்தியாவை இவர்கள் மூன்றாகப் பிரிக்கிறார்கள். இந்தி மொழி பயன்பாடு அதிகம் உள்ள உ.பி, பீகார் போன்ற மாநிலங்கள் மொத்தம் 12. குறைவான பயன்பாட்டைக் கொண்ட குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் 6. மற்றவை அனைத்தும் இந்தி பேசாத மற்ற மாநிலங்கள் ஆகும். இவை ‘சி’ பிரிவாம். இந்தி பேசாத மாநிலங்களை இதுவரை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றிவிட்டார்கள் என்று இதுவரை நாம் சொல்லி வந்தோம். உண்மையில் இப்போது மூன்றாந்தரக் குடிமக்களாக மாற்றிவிட்டது பா.ஜ.க. அரசு.

- தொடரும்

banner

Related Stories

Related Stories