முரசொலி தலையங்கம்

“கல்வி, சுகாதார வசதிகள் வழங்குவதில் வட இந்தியாவைவிட, சிறப்பாகச் செயல்படும் தமிழ்நாடு” : முரசொலி!

கல்வி, சுகாதார வசதிகள் வழங்குவதில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக பி.பி.சி. இணையதளம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“கல்வி, சுகாதார வசதிகள் வழங்குவதில் வட இந்தியாவைவிட, சிறப்பாகச் செயல்படும் தமிழ்நாடு” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிறக்கும் தென்னகம் - தமிழகம் முதலிடம்!

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை ஆங்கில ஊடகங்கள் உணர்ந்து உள்ளார்ந்த எண்ணத்துடன் பாராட்டுகளைத் தெரிவிக்கத் தொடங்கி இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன், ‘பிசினஸ் லைன்’ எழுதியதை பி.பி.சி., ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் ஆகிய ஊடகங்கள் உறுதி செய்து செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இது சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிபரம்தான். தேசிய சராசரி பணவீக்கமானது 6.2 சதவிகிதத்தில் இருந்து 7.79 சதவிகிதமாக உயர்ந்தது. ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கமானது 5.37 சதவிகிதமாக குறைந்தது -என்ற புள்ளிவிபரம் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இதுகுறித்து ‘பிசினஸ் லைன்’ எழுதிய கட்டுரையில், தமிழகத்தில் உணவுப் பொருள் விலை குறைந்துள்ளது என்று குறிப்பிட்டது. எரிபொருள் விலை அதிகரித்தாலும், பெண்களுக்கு வழங்கிய இலவச பேருந்து வசதி அதனை ஈடுசெய்து விட்டது என்று குறிப்பிட்டது. பெண்களின் போக்குவரத்துச் செலவு குறைந்ததை சுட்டிக்காட்டியது.

“கல்வி, சுகாதார வசதிகள் வழங்குவதில் வட இந்தியாவைவிட, சிறப்பாகச் செயல்படும் தமிழ்நாடு” : முரசொலி!

‘’கல்வி, சுகாதாரம், சமூகநலத் திட்டங்கள், வேலை வாய்ப்புகள், தொழில்வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான குறியீடுகளை அடையும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் பணவீக்கம் குறைந்து வருகிறது” என்று எழுதியது. இந்த வரிசையில் நேற்றைய தினம் பி.பி.சி. நிறுவனமும் ‘இந்து’ ஆங்கில நாளிதழும் எழுதி இருக்கின்றன.

கல்வி, சுகாதார வசதிகள் வழங்குவதில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக பி.பி.சி. இணையதளம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘’ வட இந்தியாவைவிட தென்னிந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் பிறக்கும் பெண் குழந்தைக்கு வட இந்தியாவில் உள்ளதைவிட தடுப்பூசிகள் உள்ளிட்ட கூடுதல் மருத்துவச் சேவைகள், ஊட்டச்சத்து மற்றும் முறையான கல்வி கிடைக்கிறது. வட இந்தியாவில் உள்ளதைவிட, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெண் குழந்தைகள் கல்லூரி செல்வதற்கும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் வாய்ப்பு அதிகம். மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு தென்மாநிலங்களில் அதிகம் உள்ளதால், பெண்கள் குறைவான குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கும், அவர்களுக்கு சிறந்த கல்வியும், ஆரோக்கியமான வாழ்வை அளிப்பதற்கும் வாய்ப்பு அதிகம்” என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கல்வி, சுகாதார வசதிகள் வழங்குவதில் வட இந்தியாவைவிட, சிறப்பாகச் செயல்படும் தமிழ்நாடு” : முரசொலி!

‘’இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் தென் மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களே. தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டம் இதற்கு சிறந்த உதாரணம். மதிய உணவுத் திட்டத்தால், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடுகளை ஒன்றிய அரசு குறைத்து வரும் நிலையிலும், தென் மாநிலங்கள் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகவும் பி.பி.சி. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தியதற்கான தண்டனையாக தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வரும் காலங்களில் குறைய வாய்ப்புள்ளதாகவும் பி.பி.சி. கட்டுரை எச்சரித்துள்ளது. பி.பி.சி. -செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையையும், ‘இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தையும் இணைத்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

வட இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதும், இதற்கு நேர்மாறாக வேளாண் உற்பத்தி அதிகரிப்பால் தென் மாநிலங்களில் சில்லறை பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக ‘இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

“கல்வி, சுகாதார வசதிகள் வழங்குவதில் வட இந்தியாவைவிட, சிறப்பாகச் செயல்படும் தமிழ்நாடு” : முரசொலி!

ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் தானியங்களின் விலை 9.5 சதவீதம் அதிகரித்ததே சில்லறை பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாகும். கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு சில்லறை பணவீக்கத்தில் ஏற்பட்ட மிக அதிக உயர்வு இதுவாகும். ஆனால், சில்லறை பணவீக்கத்தின் மாநில வாரியான பட்டியலில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் பாதிப்பு குறைவாகவே உள்ளது.

அதாவது, தென் மாநிலங்களில் சில்லறை பணவீக்கம் 5 சதவீதமாகவே உள்ளது. இதற்கு நேர்மாறாக வட மாநிலங்களில் சில்லறை பணவீக்கம் இந்தியாவின் சராசரியைவிட அதிகமாகவே உள்ளது. குஜராத்தில் 11.5 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 10.4 சதவீதமாகவும், மேற்கு வங்கத்தில் 10.3 சதவீதமாகவும், உத்தரப்பிரதேசத்தில் 9.2 சதவீதமாகவும், மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட் 8.5 சதவீதமாகவும் சில்லறை பணவீக்கம் உள்ளது. ஆனால், தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் உணவுப் பொருட்களின் சில்லறை பணவீக்கத்தில் கடைசி இடங்களில் உள்ளன -என்பதை புள்ளி விபரங்களுடன் ‘இந்து’ வெளியிட்டுள்ளது.

கல்வி, சுகாதார வசதிகள் வழங்குவதில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக பி.பி.சி. இணையதளம் கட்டுரை வெளியிட்டு இருப்பதும், வேளாண் துறையின் உற்பத்தி அதிகரிப்பால் தமிழ்நாட்டில் உணவுப் பொருள்களின் சில்லறை பணவீக்கம் குறைந்திருப்பதும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக் கொள்கைகளின் சாதனைகள் ஆகும்.

“கல்வி, சுகாதார வசதிகள் வழங்குவதில் வட இந்தியாவைவிட, சிறப்பாகச் செயல்படும் தமிழ்நாடு” : முரசொலி!

உற்பத்தி பரப்பை அதிகரித்ததும், அதன் மூலமாக உற்பத்தி அதிகமானதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகத்தான சாதனை ஆகும். அதனால் விலைவாசி அதிகரிக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தினாலும் பேருந்துகளில் இலவசப் பயணம் என்பதால் மகளிருக்கு அதனால் செலவு அதிகரிக்கவில்லை. விலைவாசி உயர்வு இல்லாததால் பணவீக்கம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சரின் சமூகநலத் திட்டங்கள் -வேளாண் திட்டங்கள் அனைத்துத் துறைகளின் வளர்ச்சி காரணமாக இத்தகைய வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.

பொருளாதாரம் என்பதை வறட்டுத்தரமாக தொழில் நிறுவனங்களின் உற்பத்தியாக மட்டுமில்லாமல், சமூக உற்பத்தியாக -மனித உற்பத்தியாக- உழைப்பின் உற்பத்தியாக பார்க்கும் அரசாக தி.மு.க. அரசு செயல்படுவதால் மட்டுமே இத்தகைய வளர்ச்சியை நாம் அடைகிறோம். இதனைத்தான் பி.பி.சி., இந்து நிறுவனங்களின் செய்திக் கட்டுரைகள் சாட்சியம் கூறுகின்றன!

banner

Related Stories

Related Stories