முரசொலி தலையங்கம்

ஆங்கிலத்தின் இடத்தில் சமஸ்கிருதத்தை வைப்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் - உண்மையை தோலுரித்த முரசொலி !

ஆங்­கி­லத்தை அகற்றி விட்டு அந்த இடத்­தில் இந்­தியை உட்­கார வைப்­ப­தும், இந்­தியை உட்­கார வைத்த இடத்­தில் சமஸ்­கி­ரு­தத்தை உட்­கார வைப்­ப­தும்­தான் புதிய கல்விக்கொள்கையின் நோக்கம்.

ஆங்கிலத்தின் இடத்தில் சமஸ்கிருதத்தை வைப்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் - உண்மையை தோலுரித்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (22-09-2022)

புதிய புதிய பொய்கள்!

‘‘தேசி­யக் கல்­விக் கொள்­கை­யில் தமிழ் புறக்­க­ணிப்பு இல்லை” என்று ஒன்­றிய கல்­வித் துறை அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் சொல்லி இருக்­கி­றார். பழைய பொய்­கள் அனைத்­தும் கரைந்து போய்­விட்­ட­தால் புதிய புதிய பொய்­களைத் தேடி அலை­கி­றார்­கள். புதிய கல்­விக் கொள்­கை­யா­னது - கல்­வியை மேம்ப­டுத்­து­வ­தற்­காக என்று இது­வரை சொல்லி வந்­தார்­கள். தமிழ்­நாட்­டில் கல்­வி­யா­னது மேம்­பட்­டுத்­தான் இருக்­கி­றது. மற்ற மாநி­லங்­க­ளை­விட ஒட்­டு­மொத்­த­மாக இந்­திய விழுக்­காட்டை விட தமிழ்­நாட்­டில் கல்­வி­யா­னது மேம்­பட்­டுத்­தான் இருக்­கி­றது என்­பதை புள்­ளி­வி­ப­ரங்­க­ளு­டன் நிரூ­பித்­த­தும் அந்­தப் பொய்­யைச் சொல்­வது இல்லை.

இப்­போது புதி­தாக ‘தாய்­மொ­ழி’க் கார­ணம் காட்­டு­கி­றார்­கள். தாய்­மொ­ழிக் கல்வி என்­பது இல்­லையா? புதிய கல்­விக் கொள்கை வந்­து­தான் தாய்­மொ­ழி­யைக் கற்­பிக்­கப் போகி­றதா? தமிழ்­நாட்­டில் பன்­னி­ரெண்­டாம் வகுப்பு வரை­யிலான பள்­ளிக் கல்வி தாய்­மொ­ழி­யில் கற்­பிக்­கப்­ப­டு­கி­றது. கலை, அறி­வி­யல் கல்­லூ­ரி­க­ளில் தாய்­மொ­ழி­யில் படிக்­க­லாம். பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் தாய்­மொ­ழி­யில் படிக்­க­லாம். ஆராய்ச்­சியை தாய்­மொ­ழி­யில் நடத்­த­லாம். அர­சின் சார்­பி­லான அனைத்து போட்­டித் தேர்­வு­க­ளும் தாய்­மொ­ழி­யில் எழு­த­லாம். அனைத்து தகு­தித் தேர்­வும் தாய்­மொ­ழி­யில் எழு­த­லாம். அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம் நடத்­தும் தேர்­வில் தமிழ் தகு­தித் தாள் என்­பதை மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் கட்­டா­யம் ஆக்கி இருக்­கி­றார்­கள். எனவே, இங்கே அனைத்­தும் தாய்­மொ­ழி­யில்­தான் இருக்­கி­றது. எனவே, தர்­மேந்­தி­ரப் பிர­தான் புதுக்­க­ரடி விட வேண்­டி­யது இல்லை.

ஆங்கிலத்தின் இடத்தில் சமஸ்கிருதத்தை வைப்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் - உண்மையை தோலுரித்த முரசொலி !

தமிழ், - ஆங்­கி­லம் என்ற இரு­மொ­ழிக் கொள்கை கொண்­ட­தாக தமிழ்­நாடு இருக்­கி­றது. இதில் இந்­தி­யைப் புகுத்தி மும்­மொ­ழிக் கொள்கை மாநி­ல­மாக ஆக்கப் பார்க்­கி­றார்­கள். அதற்­கா­கத்­தான் புதிய கல்­விக் கொள்­கை­யைக் கொண்டு வரு­கி­றார்­கள். புதிய கல்­விக் கொள்­கை­யில் முடிந்த இடத்­தில் எல்­லாம் சமஸ்­கி­ருத மொழி­யைத் திணிக்­கி­றார்­கள். அது­தான் அச்­சம் தரு­வ­தாக இருக்கி­றது.

சமஸ்­கி­ரு­தம், மும்­மொ­ழிப் பாடத்­திட்­டத்­தின் ஒரு மொழி­யா­கப் பள்­ளிக் கல்­வித் திட்­டத்­தின் எல்லா நிலை­க­ளி­லும், கல்­லூ­ரி­க­ளி­லும் ஒரு முக்­கி­ய­மான வள­மூட்­டக் கூடிய விருப்­பப் பாட­மாக வழங்­கப்­ப­டும்.

மொழிச் சுவை­யு­ட­னும், அனு­ப­வப் பூர்­வ­மா­க­வும் மட்­டு­மல்­லா­மல் தற்­கா­லத்­திற்­குப் பொருந்­தும் வகை­யில் சமஸ்­கி­ருத ஞான மர­பு­க­ளின் வழி­யில் முக்­கி­ய­மாக ஒலிப்பு மற்­றும் உச்­ச­ரிப்பு முறை­க­ளின் மூலம் கற்பிக்கப்படும். ஆரம்ப மற்­றும் இடை­நிலை சமஸ்­கி­ரு­தப் பாடப் புத்­த­கங்­கள் எளிய, தர­மான சமஸ்­கி­ருத மொழி­யில் எழு­தப்­பட்டு, மாண­வர்­கள் உண்­மை­யி­லேயே அனு­ப­வித்­துக் கற்­கும் வண்­ணம் சமஸ்க்­ரித மொழி­யின் மூலமே கற்­பிக்­கப்­படும்.

மத்திய அரசு நடை­மு­றைப்­ப­டுத்­தும் மும்­மொ­ழிக்­கொள்­கை­யில் சமஸ்­கிருத மொழி ஒரு பாட­மாக்­கப்­பட்டு பள்ளி மற்­றும் உயர்­கல்வி பயி­லும் மாண­வர்­க­ளுக்கு முக்­கி­யத் திறன் வளர்ப்பு விருப்­பப் பாட­மாக அளிக்­கப்ப­டும்.

சமஸ்­கி­ரு­தப் பாடப் புத்­த­கங்­கள் அதி­க­மாக உரு­வாக்­கப்­ப­டும்.

சமஸ்­கி­ரு­தத் துறை­கள் மூல­மாக சமஸ்­கி­ரு­தம் பற்­றி­யும் சமஸ்­கி­ருத அறிவு முறை­கள் (Sanskrit Knowledge System) பற்­றி­யும் மிகச் சிறந்த இடை­நிலை (Inter Disciplinary) ஆராய்ச்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்.

உயர்­கல்­வித் துறை­யில் முழு­மை­யான பல்­துறை (Holistic Multi disciplinary) பயிற்று மொழி­யாக சமஸ்­கி­ரு­தம் விளங்­கும். நாடு முழு­வ­தும் அதிக எண்­ணிக்­கை­யில் உள்ள சமஸ்­கி­ருத ஆசி­ரி­யர்­கள் பாடப் புலமை பெற்­ற­வர்­க­ளாக (Professionalized) ஆக்­கப்­ப­டு­வார்­கள்.

இது­தான் அச்­சம் தரு­வது ஆகும். ஆங்­கி­லத்­துக்கு எதி­ராக தமிழ்­நாட்டு ஆளு­நர் முதல் உள்­துறை அமைச்­சர் வரை பேசு­வ­தன் உள்­பொ­ருள் என்­பது, புதிய கல்­விக் கொள்கை மூல­மாக வெளிப்­ப­டு­கி­றது.

ஆங்கிலத்தின் இடத்தில் சமஸ்கிருதத்தை வைப்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் - உண்மையை தோலுரித்த முரசொலி !

தாய்­மொழி, - இந்­திய இணைப்பு மொழி­யாக இந்தி, - இந்­திய பண்­பாட்டு மொழியாக சமஸ்­கி­ரு­தம் ஆகிய மூன்­றை­யும் அனைத்­துப் பிள்­ளை­க­ளை­யும் படிக்க வைக்­கவே, புதிய கல்­விக் கொள்கை கொண்டு வரப்­ப­டு­கி­றது. மும்­மொ­ழிக் கொள்கை என்ற சொல், ஏழு இடங்­க­ளில் ஒன்­றிய அர­சின் அறிக்­கை­யில் இடம் பெற்­றுள்­ளது. ஆங்­கி­லத்தை அகற்றி விட்டு அந்த இடத்­தில் இந்­தியை உட்­கார வைப்­ப­தும், இந்­தியை உட்­கார வைத்த இடத்­தில் சமஸ்­கி­ரு­தத்தை உட்­கார வைப்­ப­தும்­தான் அவர்­க­ளது நோக்­கம். ஆங்­கி­லத்தை அகற்­று­வ­தற்கு ஒரு தந்­தி­ரம் தேவை. அதற்குத்­தான் தாய்­மொழி பம்­மாத்து.

‘‘புதிய கல்­விக் கொள்­கையை எதிர்ப்­ப­தற்கு தமிழ்­நாடு முறை­யான கார­ணத்­தைச் சொல்­ல­வில்லை. நியா­ய­மான எதிர்ப்பை நான் பார்க்­க­வில்லை” என்­றும் ஒன்­றிய அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் சொல்லி இருக்­கி­றார். அவ­ருக்­குப் பழைய செய்­தி­களை நினை­வூட்­ட­வேண்­டி­யது நமது கட­மை­யா­கும்.

புதிய கல்­விக் கொள்கை குறித்து விவா­திக்க 14.7.2019 அன்று வல்­லு­நர் குழு அமைத்­தார், தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின். இதன் அறிக்கை ஒன்றிய மனிதவள மேம்­பாட்­டுத் துறை அமைச்­ச­ரி­டம் 28.7.2019 அன்று தரப்­பட்டது.“அர­சி­யல் சட்­டத்­திற்கு எதி­ரான, மாண­வர்­க­ளுக்கு எதி­ரான, மக்­க­ளுக்கு எதிரான, “2019 வரைவு தேசி­யக் கல்­விக் கொள்­கை”யை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. அதைத் திரும்­பப் பெற வேண்­டும்” என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது. அந்த அறிக்­கையை எடுத்­துப் பார்க்க வேண்­டும் ஒன்­றிய அமைச்­சர்.

ஆங்கிலத்தின் இடத்தில் சமஸ்கிருதத்தை வைப்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் - உண்மையை தோலுரித்த முரசொலி !

‘‘சமஸ்­கி­ருத மொழிக்கு மட்­டும் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கும் முக்­கி­யத்­து­வம், ஏனைய இந்­திய மொழி­கள் மீது கொண்­டுள்ள மாற்­றாந்­தாய் மனப்­பான்­மையை உணர்த்­து­கி­றது” என்று தி.மு.க. தீர்­மா­னம் போட்­டுக் கண்­டித்­துள்­ளது.

‘‘மழ­லை­யர் பரு­வத்­தில் முறை­சார்ந்த கல்வி, 3,5,8-ம் வகுப்­பு­க­ளுக்­குத் தேர்வு, தமி­ழ­கத்­தில் வெற்­றி­க­ர­மாக இயங்­கும் ‘பிளஸ் டூ’ கல்­வி­மு­றை­யில் மாற்­றம், தமி­ழ­கத்­தில் மக்­க­ளால் புறக்­க­ணிக்­கப்­பட்ட ‘குலக்­கல்­வி’த் திட்­டத்­தின் மறு வடி­வ­மான தொழிற்­கல்வி, இருக்­கின்ற பள்­ளி­களை மூட வழி வகுக்­கும் பள்ளி வளாகங்­கள், ஆசி­ரி­யர் தேர்வு, ஆசி­ரி­யர் பணி குறித்த தர நிர்­ண­யம் உள்­ளிட்­டவை, மாநி­லங்­க­ளி­டம் எஞ்­சி­யி­ருக்­கும் கல்வி உரி­மை­யி­லும் தேவையே இல்லா­மல் தலை­யிட்டு - மத்­திய அர­சைத் தவிர மாநி­லங்­க­ளுக்கு கல்­விச்

சீர்­திருத்­தம் பற்றி எது­வுமே தெரி­யாது என்று நினைப்­பது மேலா­திக்­கப் போக்­கா­கும்” என்­றும் தி.மு.க. தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யுள்­ளது.

ஏற்­க­னவே நீட் தேர்வு கொண்­டு­வ­ரப்­பட்டு மருத்­து­வக் கல்­வி­யில் பெரும்­பான்மை மக்­க­ளின் கனவு சிதைக்­கப்­பட்­டது. இதே­போல் அனைத்து உயர்­கல்­விக்­கும் பொது நுழை­வுத் தேர்­வைக் கொண்டு வரப்­போ­கி­றார்­கள். இனி பள்­ளிக் கல்­வி­யு­டன் ஒடுக்­கப்­பட்ட சமு­தா­யம் ஒடுக்­கப்­பட்டு விடும். அவர்­களை உயர்­கல்வி நிலை­யங்­க­ளுக்­குள் நுழைய விட­மாட்­டார்­கள். இத­னால்­தான் எதிர்க்­கி­றோம்.

banner

Related Stories

Related Stories