முரசொலி தலையங்கம்

“கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு - வெறும் வாய்ச்சவடாலில் வண்டி ஓட்ட நினைக்கும் ஒன்றிய அரசு” : முரசொலி சாடல்!

சமையல் கியாஸ் உருளைகளை அதன் கனத்தை விட அதிகமாக உயர்த்திக் கொண்டே போகிறது. நடுத்தர மக்களின் முதுகெலும்பை முறிப்பதாக உருளைகளின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

“கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு - வெறும் வாய்ச்சவடாலில் வண்டி ஓட்ட நினைக்கும் ஒன்றிய அரசு” : முரசொலி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு எந்த சாதனையையும் செய்யத்தெரியாதது ஒன்றிய அரசு. சமையல் கியாஸ் உருளைகளை அதன் கனத்தை விட அதிகமாக உயர்த்திக் கொண்டே போகிறது. நடுத்தர மக்களின் முதுகெலும்பை முறிப்பதாக உருளைகளின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

சென்னையில் 14 . 2 கிலோ கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை ஆயிரத்து 18 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையை 50 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சிலிண்டர் விலை ஆயிரத்து 68 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதம் மட்டும் 2 முறை வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்குப் பின் மீண்டும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு - வெறும் வாய்ச்சவடாலில் வண்டி ஓட்ட நினைக்கும் ஒன்றிய அரசு” : முரசொலி சாடல்!

சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை 8 ரூபாய் 50 காசுகள் குறைந்து 2 ஆயிரத்து 177 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாகவே நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து சிலிண்டர்களின் விலையில் நடந்துள்ள உயர்வுகளைப் பார்த்தாலே தெரியும். இதில் எந்தவிதமான இரக்கும் இல்லாத நிலைமையை உணரலாம்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 850 ரூபாயாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 875 ரூபாயாக ஆனது. அடுத்தமாதமே ரூ.900 ஆனது. அக்டோபரில் ரூ.915 ஆனது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.965 ஆனது. மே மாதம் ரூ.1,015 ஆனது. அதே மாதத்தில் ரூ.1,018.50 ஆக ஆக்கப்பட்டது. இரண்டு மாதம் கழித்து இந்த ஜூலையில் ரூ.1,068.50 ஆகிவிட்டது. இரண்டு மாத இடைவெளியில் இத்தகைய உயர்வு என்றால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும் மத்தியதர வர்க்கத்தால்?

பாரதிய ஜனதா கட்சியில் அங்கம் வகித்துவரும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வருண்காந்தியே இந்த விலை உயர்வைக் கண்டித்து இருக்கிறார். வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,068 ஆகிவிட்டது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்தியர்கள் தான் ‘உலகிலேயே அதிக விலை கொடுத்து கியாஸ் சிலிண்டர்கள் வாங்குகிறார்கள்' என்று சொல்லி இருக்கிறார் வருண்காந்தி.

“கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு - வெறும் வாய்ச்சவடாலில் வண்டி ஓட்ட நினைக்கும் ஒன்றிய அரசு” : முரசொலி சாடல்!

விலை உயரும் போதெல்லாம் சர்வதேச சந்தையைக் காரணமாகச் சொல்வார்கள். நாங்கள் ஏற்றவில்லை, பொதுத்துறை நிறுவனங்கள் தான் காரணம் என்பார்கள். ஆனால் ஏதாவது ஒரு மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வந்தால், அதுவும் பா.ஜ.க.வுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கும் மாநிலமாக இருந்தால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலைகளை உயராமல் பார்த்துக் கொள்வார்கள்.

அப்போது சர்வதேச சந்தைகள் சத்தம் இல்லாமல் போய் விடும். கச்சா எண்ணெய்கள் கப்சிப் ஆகிவிடும். பொதுத்துறை நிறுவனங்கள், வாயைப் பொத்திக் கொண்டு இருந்துவிடும். தேர்தல் முடிந்த தும் இவை அனைத்தும் அடக்கி வைக்கப்பட்ட பூதங்களாக வெளியில் கிளம்பி வரும். அப்படித் தான் இப்போது வந்து கொண்டு இருக்கிறது உருளைகளின் விலைகள்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சிலிண்டர் விலைகள் ரூ.710 ஆகத்தான் இருந்தது. இன்று ரூ.1068 ஆகிவிட்டது. கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த மார்ச் மாதம் 50 ரூபாய் அதிகம் ஆனது. மே மாதம் 50 ரூபாய் அதிகமானது. இப்போது 50 ரூபாய் அதிகமாகி உள்ளது. இந்த ஓராண்டு காலத்தைக் கணக்கிட்டால் மட்டும் 168 ரூபாய் அதிகமாகி உள்ளது.

“கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு - வெறும் வாய்ச்சவடாலில் வண்டி ஓட்ட நினைக்கும் ஒன்றிய அரசு” : முரசொலி சாடல்!

“விலைவாசிகள் அதிகமாகி வருகிறது. மளிகைப் பொருட்கள் விலை அதிகமாகி வருகிறது. காய்கறிகள் விலையும் அதிகமாகறது. இந்த நிலையில் சிலிண்டர் விலையையும் அதிகரித்துக் கொண்டே போனால் நாங்கள் எப்படி வாழ்வது?” என்று பெண்கள் கேட்கிறார்கள். இல்லத்தரசிகளை இந்த விலை உயர்வு எரிச்சலடைய வைத்துள்ளது. நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு இது பேரிடி என்று பேட்டி அளித்துள்ளார்கள். ‘ஒவ்வொரு மாதமும் இப்படி விலையை உயர்த்திக் கொண்டே சென்றால் எப்படி சமையல் செய்து சாப்பிடு வது? மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா?' என்று பேட்டி அளித்துள்ளார்கள் பெண்கள்.

கியாஸ் அடுப்புக்கு மாற்றாக வேறு ஏதாவது வந்தால் அதற்கு மாறவும் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். சந்தையின் நிலைமைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே அதன்விலையைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று சொன்னதன் விளைவு இது. விலையில் இப்போது ஏற்பட்டு வரும் அனைத்து குளறுபடிகளுக்கும் இதுதான் உண்மையான காரணம். சிலிண்டர் விலை உயரும் போது காங்கிரசு ஆட்சிக் காலத்தில் மானியம் இருந்தது. அதனை நாங்கள் பணமாகத் தரப்போகிறோம் என்று சொல்லி மானியத்துக்கு மொத்தமாக மரணகானா பாடிவிட்டார்கள். 563 ரூபாயாக இருந்த மானியம், இன்று 25 ரூபாயாக தேய்ந்துவிட்டது.

“கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு - வெறும் வாய்ச்சவடாலில் வண்டி ஓட்ட நினைக்கும் ஒன்றிய அரசு” : முரசொலி சாடல்!

உடனே பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பற்றி சொல்லிக் கொள்வார்கள். இதன் மூலமாக கோடிக்கணக்கான மக்களுக்கு புதிய கேஸ் இணைப்பு வழங்கியதாக சொல்வார்கள். இந்த திட்டத்தின் தோல்வி குறித்து ஒரு ஆய்வாளர் பேட்டி அளித்துள்ளார். “சமீபத்திய ஆய்வின்படி இந்த திட்டத்தில் இணைப்பு பெற்ற 92 சதவிகித மக்கள் காஸ் சிலிண்டரை ரீஃபில் செய்வதே கிடையாது. எட்டு சதவிகித மக்கள் தான் ரீஃபில் செய்கிறார்கள். இந்த விலை ஏற்றத்தால் இந்த எட்டு சதவிகிதமும் இன்னும் குறையும் நிலைதான் ஏற்படும்” என்று சொல்லி இருக்கிறார்.

வெறும் வாய்ச்சவடாலில் வண்டியை ஓட்ட நினைக்கிறது ஒன்றிய அரசு என்பதற்கு உதாரணம்தான் உருளைகளின் விலை உயர்வு ஆகும்

banner

Related Stories

Related Stories