முரசொலி தலையங்கம்

அபத்த சிந்தனை.. தன்னைத் தானே அறிவு மேதையாக காட்டிக்கொள்ளும் குருமூர்த்தி: முரசொலி தலையங்கம் கடும் தாக்கு

‘முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் படிக்கவில்லை’ என்று சொல்கிறார் குருமூர்த்தி. சொல்லும் அவர் சட்டக் கல்லூரியில் படித்தவரா?

அபத்த சிந்தனை.. தன்னைத் தானே அறிவு மேதையாக காட்டிக்கொள்ளும் குருமூர்த்தி: முரசொலி தலையங்கம் கடும் தாக்கு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூன் 23, 2022) தலையங்கம் வருமாறு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் - முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கும் தலா 100 ரூபாய் பரிசளிக்கப் போவதாக ‘துக்ளக்’ இதழின் ஆசிரியர் குருமூர்த்தி அறிவித்திருக்கிறார். அதற்கான காரணத்தை வாசித்தபோது குருமூர்த்திக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்றே தோன்றுகிறது.

தன்னைத் தானே அறிவுலக மேதையாக நினைத்துக் கொண்டு அபத்தமாக வாராவாரம் எழுதுவது குருமூர்த்தியின் வேலை. தன்னை உலகம் கவனிக்க வேண்டும் என்ற அரிப்பு ஒரு பக்கம். தன்னுடைய அபத்தமான சிந்தனைகளை வெளியேற்றிவிட வேண்டும் என்ற தவிப்பு மறுபக்கம். இதனால்தான் எதையாவது எழுதுவது பிழைப்பாக மாறி வருகிறது அவருக்கு.

அபத்த சிந்தனை.. தன்னைத் தானே அறிவு மேதையாக காட்டிக்கொள்ளும் குருமூர்த்தி: முரசொலி தலையங்கம் கடும் தாக்கு

‘ஒன்றியம்’ என்ற சொல் அவரை ‘சூத்திரன்’ என்ற சொல்லைவிட அதிகமாக குமட்டி வருகிறது. ‘ஒன்றியம்’ என்ற சொல்லை வைத்து தனது அறிவின்மையை அவர் காட்டி இருக்கிறார்.

* ஒன்றிய அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் 2009ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்த தி.மு.க. அரசு, அதில் மத்திய அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் என்றே மொழிபெயர்த்திருக்கிறது. ஒன்றிய அரசு என்று அல்ல. எனவே அவர்கள் கூறுவது தவறு. தி.மு.க. அரசு தமிழாக்கம் செய்த அரசியல் சாசனத்தில் ஒன்றிய அரசு என்ற பதத்தைத் தேடிக் கண்டுபிடித்துக் காட்டி விட்டால் 100 ரூபாய் பரிசு தரப்படும்.

* சென்ட்ரல் கவர்மெண்ட் என்பதை யூனியன் என்றுதான் சொல்கிறது அரசியல் சாசனம் என்பதை ப.சிதம்பரமும் காட்டி விட்டால் அவருக்கு 100 ரூபாய் பரிசு தரப்படும் என்றும் - ‘துக்ளக்’ அறிவித்துள்ளது. இப்படி ‘துக்ளக்’ இதழின் 3 ஆவது பக்கத்தில் பரிசுத் தொகை அறிவிக்கும் பிரகஸ்பதி, 9 ஆம் பக்கத்தில் என்ன எழுதி இருக்கிறார் தெரியுமா?

அபத்த சிந்தனை.. தன்னைத் தானே அறிவு மேதையாக காட்டிக்கொள்ளும் குருமூர்த்தி: முரசொலி தலையங்கம் கடும் தாக்கு

‘2009-ல் இந்திய அரசியல் சாசனத்தை இந்திய அரசுக்காகத் தமிழாக்கம் செய்தது தி.மு.க. அரசு. அதில் ‘யூனியன்’ என்ற பதம் ‘ஒன்றியம்’ என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது’ - என்று எழுதி இருக்கிறார்கள்.

3 ஆவது பக்கத்தில் எழுதி இருப்பதும் குருமூர்த்திதான். 9 ஆவது பக்கத்தில் எழுதி இருப்பதும் குருமூர்த்திதான். அவருக்கு 100ரூபாய் அபராதம் போடுவது தானே முறை?!

இதனை எல்லாம் அறிவாளி ‘துக்ளக்’ வாசகர்களுக்குத் தெரியாது.

‘ஒன்றியம்’ என்று சொல்வதற்கான விளக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை சொல்லிவிட்டார்கள். தமிழில்தான் அவர் சொல்கிறார், சமஸ்கிருதத்தில் அல்ல. அதன்பிறகும் இவர்களுக்கு ஏன் புரியவில்லை என்பது புரியவில்லை. “ஒன்றிய அரசு என்று சொல்வதை ஏதோ சமூகக் குற்றம் போலச் சொல்கிறார்கள். சட்டத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளதோ அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் வரி, ‘இந்தியா அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்’ என்று தான் உள்ளது. 'india that is bharath shall be a union of states என்றுதான் இருக்கிறது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை அல்ல. ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல, மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதுதான் பொருள்.” என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே விளக்கம் அளித்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது புரியவில்லையா குருமூர்த்திக்கு?

அபத்த சிந்தனை.. தன்னைத் தானே அறிவு மேதையாக காட்டிக்கொள்ளும் குருமூர்த்தி: முரசொலி தலையங்கம் கடும் தாக்கு

பிறகு எதற்காக தனது தரம் 100 ரூபாய்க்கும் கீழேதான் என்பதை வெளிப்படுத்த வேண்டும் அவர்கள்?!

தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லாத ஒன்றை - ஏற்காத ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்கிறார்கள் என்று கட்டமைக்க நினைக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 1957 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே ‘இந்திய யூனியன்’ என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய யூனியனில் பிணைக்கப்பட்டிருக்கும், இந்திய யூனியன் என்னும் அமைப்பில், யூனியன் அமைப்பிலிருந்து, எப்போது வேண்டுமானாலும் இந்திய யூனியனிலிருந்து, இந்திய யூனியனில் மாநிலங்கள்... என்று பல்வேறு இடங்களில் பேரறிஞர் அண்ணா காலத்திலேயே சொல்லப்பட்ட சொல்தான் அது.

இது தவறான சொல் அல்ல, சரியான சொல்தான் என்பதை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் முகுந்த் பி. உன்னி, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில், விரிவாக எழுதி இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லி வரும் ‘ஒன்றியம்’ என்ற சொல் சரியானதுதான் என்பதை அவர் ஒப்புக்கொண்டு எழுதி இருக்கிறார். “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்பதே சட்டச் சொற்கள் என்று சொல்லி விட்டு, ‘மத்திய’ என்ற சொல் எங்கும் இல்லை என்கிறார்.

அபத்த சிந்தனை.. தன்னைத் தானே அறிவு மேதையாக காட்டிக்கொள்ளும் குருமூர்த்தி: முரசொலி தலையங்கம் கடும் தாக்கு

“இந்திய அரசியலைச் சேர்ந்த ஒரு மாணவர் ‘மத்திய அரசு’ என்ற வார்த்தையின் தோற் றத்தைக் கண்டுபிடிக்க முயன்றால், அரசியலமைப்பு அவரை ஏமாற்றும்.

ஏனென்றால் அரசியலமைப்புச் சபை அதன் 395 கட்டுரைகளில் 22-ல் ‘மையம்’ அல்லது ‘மத்திய அரசு’ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அசல் அரசியலமைப்பில் பாகங்கள் மற்றும் எட்டு அட்டவணைகள் - பிரதம மந்திரி தலைமையிலான அமைச்சர்கள் சபையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயல்படும் ஒன்றியத்தின் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ‘யூனியன்’ மற்றும் ‘மாநிலங்கள்’ நம்மிடம் உள்ளன. அரசியலமைப்புச் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பில் ‘மையம்’ அல்லது ‘மத்திய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் இருப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். ஏனெனில் அவர்கள் ஒரு பிரிவில் அதிகாரங்களை மையப்படுத்துவதற்கான போக்கை அவர்கள் தவிர்த்தார்கள். அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மை அதன் அடிப்படை அம்சம் ஆகியவற்றை மாற்ற முடியாது என்றாலும், அதிகாரம் செலுத்தும் நடிகர்கள் நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி அம்சத்தைப் பாதுகாக்க விரும்பு கிறார்களா என்பதைத்தான் பார்க்க வேண்டும்” என்றும் அவர் எழுதி இருக்கிறார்.

‘முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் படிக்கவில்லை’ என்று சொல்கிறார் குருமூர்த்தி. சொல்லும் அவர் சட்டக் கல்லூரியில் படித்தவரா?

இதோ சட்டம் படித்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சொல்கிறார்: “தி.மு.க. ஒரு மாநிலக் கட்சி என்று மேலோட்டமாகச் சிலர் கருதலாம். ஆனால் எல்லா மாநில அரசுகளுக்கும் நியாயமான சுயாட்சி என்கிற அடிப்படையில் ஒரு உண்மையான கூட்டாட்சி உருவாவதற்காகத்தான் தி.மு.க. பிரதிநிதியாக இருக் கிறது. செயல்பட முடியாத, திறமையற்ற, கொடுமையான மத்திய அரசிற்கான தேசிய எதிர்ப்பைத்தான் தி.மு.க. பிரதிபலிக்கிறது. பிரிவினைவாதிகள் என்று அவர்களைக் கூறுவது ஒரு கட்சிக் கொடுங்கோன்மையை நாட்டில் நீட்டிக்கச் செய்வதற்காகக் கண்டுபிடித்த பூச்சாண்டியாகும். இந்தியாவின் அளவிற்கும் இயல்பிற்கும் ஏற்ற திறமையான அமைப்பு உண்மையான கூட்டாட்சி அரசுதான். தி.மு.க.வின் வெற்றிகரமான மறுப்பியக்கம் இந்த அரசியல் உண்மையின் அடையாளமாகும்” என்று சொன்னவர் இராஜாஜி அவர்கள்.

‘ஒன்றிய’ ஆராய்ச்சியை விட்டு விட்டு - அ.தி.மு.க.வினருக்கு ஆண்மை இருக்கிறதா, பெண்களில் 30 சதவிகிதம் பேருக்குத்தான் பெண்மை இருக்கிறது என்பது போன்ற ஆராய்ச்சிகளில் அவர் தன்னை மூழ்கடித்துக் கொள்வதே சாலப் பொருத்தமாக இருக்கும்!

banner

Related Stories

Related Stories