முரசொலி தலையங்கம்

மேகதாதுவைத் தடுப்போம்.. தமிழ்நாட்டின் உரிமை இல்லாமல் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது: முரசொலி சாடல்!

தமிழகத்தின் உரிமை இல்லாமல் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உரிமைக் குரலை எழுப்பி இருக்கிறார்.

மேகதாதுவைத் தடுப்போம்.. தமிழ்நாட்டின் உரிமை இல்லாமல் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது: முரசொலி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூன் 22, 2022) தலையங்கம் வருமாறு:

தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடியான பிரச்சினைகளில் ஒன்று காவிரிப் பிரச்சினை ஆகும். தமிழ்நாட்டுக்கான முழு உரிமை உள்ளதும்காவிரி நீர் ஆகும். எனவே, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் திராவிடமுன்னேற்றக் கழக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும். வாதாடும். தனது உரிமையை நிலைநாட்டும்” என்று உறுதி அளித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தும்” என்றும் அறிவித்து இருந்தார்கள். இக்குழுவினர் 22ஆம் தேதி (இன்று) சந்திக்க இருக்கிறார்கள்.

“டெல்லி சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வந்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள். கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பணியக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டாட்சியின் மாண்பைக் காக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கிறேன்” என்றும் -

மேகதாதுவைத் தடுப்போம்.. தமிழ்நாட்டின் உரிமை இல்லாமல் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது: முரசொலி சாடல்!

“காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம். அது தொடர்பாக காவிரி ஆணையக் கூட்டம் விவாதிப்பதும் தவறானது ஆகும். தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவிரியின்உரிமையைக் காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும்” என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

காவிரியில் மேகதாது அணையைக் கட்டுவதன்மூலமாக தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுப்பதும் - அரசியல் ரீதியாக கர்நாடகாவில் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதும்தான் கர்நாடக பா.ஜ.க. அரசின் நினைப்பாக இருக்கிறது. அதற்காக தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தைக் கிளப்பிக் கொண்டே வருகிறார்கள்.

மேகதாதுவைத் தடுப்போம்.. தமிழ்நாட்டின் உரிமை இல்லாமல் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது: முரசொலி சாடல்!

காவிரி ஆற்றில் புதியதாக மேகதாது என்ற அணையைக் கட்டுவதில் கர்நாடக அரசு மும்முரமாக இறங்கி இருக்கிறது. ரூ.5 ஆயிரத்து 912 கோடி செலவில் கட்டத் திட்டமிட்டு இருக்கிறார்கள். தமிழகத்துக்கு தண்ணீர் வரும் எல்லையில் இதனை அமைக்கப் போகிறார்கள். தங்கள் மாநிலத்துக் கான குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும், மின் உற்பத்தியைப் பெருக்கப் போவதாகவும் இதற்குக் காரணம் சொல்கிறார்கள். ஏற்கனவே,நமக்குத் தர வேண்டிய தண்ணீரை முழுமையாக - உரிய வகையில் தரமறுக்கும் கர்நாடக அரசு - இனிமேல் தண்ணீரே முழுமையாகக் கிடைக்க வழியில்லாத வகையில் நிறைவேற்றப் போகும் திட்டம்தான் இந்த மேகதாது அணைத் திட்டமாகும்.

இதற்கு அனுமதி கேட்டு ஒன்றிய சுற்றுச் சூழல் துறையிடம் விண்ணப்பம் செய்துள்ளது கர்நாடக அரசு. அனுமதி கிடைப்பதற்கு முன்பே நிதியை ஒதுக்கியது. இவை அனைத்தும் விதிமீறல்கள் ஆகும். இதனைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேகதாதுவைத் தடுப்போம்.. தமிழ்நாட்டின் உரிமை இல்லாமல் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது: முரசொலி சாடல்!

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது பற்றி விவாதிப்போம் என்று சொல்லி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இவருக்கு இப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதே கேள்வி. இவரை இப்படிச் சொல்ல வைத்தது யார்? அவரைஅழைத்துக் கண்டிக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு இருக்கிறது.

‘மத்திய அரசு எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று சொல்ல தமிழக அரசுக்கு உரிமையில்லை” என்று பேட்டி அளித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள். ஒன்றிய அரசு இதனைத்தான் செய்யவேண்டும் என்று சொல்வதற்கு அவருக்கு மட்டும் உரிமை இருக்கிறதா? மேகதாது வுக்கு அனுமதி தந்தாக வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதித் தாக வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தினமும் உத்தரவு போட்டுக் கொண்டு இருக்கிறாரே கர்நாடக முதலமைச்சர்? இதெல்லாம் எந்த உரிமையின் பாற்பட்டது? தங்கள் கட்சி ஒன்றியத்தை ஆள்கிறது என்ற உரிமையா?

“தமிழகத்தின் உரிமை இல்லாமல் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது” என்று தமிழக நீர்வளத்துறைஅமைச்சர் துரைமுருகன் உரிமைக் குரலை எழுப்பி இருக்கிறார். மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டாட்சி நாட்டில் இதுவே செயல்முறையாகவும், நெறிமுறையாகவும் அமைய முடியும். “கீழே இருக்கிற மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் கட்டக் கூடாது என்று உச்சநீதி மன்றத்திலும் தீர்ப்பு இருக்கிறது. தீர்ப்பாயத்திலும் தீர்ப்பு இருக்கிறது. தண்ணீர் ஓடி வருவதால் மேலே இருக்கிறவர்களுக்குச் சொந்தமில்லை என்றும் உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேகதாதுவைத் தடுப்போம்.. தமிழ்நாட்டின் உரிமை இல்லாமல் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது: முரசொலி சாடல்!

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி தொடர்புடைய மாநிலத்தின் அனுமதியைப் பெறாமல் - ஒன்றிய அரசின் அனுமதியையும் பெறாமல் அணையைக்கட்ட முடியாது. எனவே கர்நாடக அரசின் முடிவானது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது ஆகும். எனவே,கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில் நுட்பச் சுற்றுச்சூழல் அனுமதியையும் ஒன்றிய அரசு தரக்கூடாது.

உச்சநீதிமன்றத்தை கர்நாடக அரசு மதிக்க வேண்டும். உச்சநீதி மன்றத்தை விட உயர்ந்தது அல்ல கர்நாடக பா.ஜ.க. அரசு!

banner

Related Stories

Related Stories