முரசொலி தலையங்கம்

பருத்தி நூல் விலை உயர்வு: தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலாளிகளும் போராட்டம்- மோடி அரசை எச்சரிக்கும் முரசொலி!

பஞ்சை மொத்தமாக கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் பதுக்கி வைத்து செயற்கையான பற்றாக்குறையை உருவாக்குகிறார்கள் என்று கே.பாலகிருஷ்ணன் சுட்டிக் காட்டி உள்ளார்.

பருத்தி நூல் விலை உயர்வு: தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலாளிகளும் போராட்டம்- மோடி அரசை எச்சரிக்கும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“காற்றைப் போன்ற பஞ்சு, கனமாகிறது. அதனால், நெசவு நிறுவனங்கள் போராட்டத்தில் குதித்திருக்கின்றன. “பா.ஜ.க. ஆட்சியில் தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலாளிகளும் போராட்டம் நடத்தும் சூழல் இருக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சொன்னதே முழு உண்மை ஆகி வருகிறது!

கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்- என மேற்கு மண்டல மாவட்டங்களில் செயல்படும் பின்னலாடை, விசைத்தறி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. சுமார் 18,850 ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும், ஒரேநாளில் ரூ.475 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. பஞ்சு விலையில் ஏற்பட்ட அதிக உயர்வுதான் இதற்கு அடிப்படைக் காரணம்.

நூல் விலையானது மாதம்தோறும் அதிகரித்து வருவதாக இவர்கள் சொல்கிறார்கள். பின்னலாடைத் தொழிலுக்கு நூல் தான் அடிப்படை ஆகும். அதனை அதிகரித்துக் கொண்டே போனால், இந்தத் தொழிலே நசிந்து விடும். கடந்த ஜனவரி மாதம் 356 கிலோ கொண்ட ஒரு கண்டின் விலை ரூ.76 ஆயிரமாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு கண்டின் விலை ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதனால் நூல் விலையும் உயர்ந்து வருகிறது. நூல் விலை உயர்வு காரணமாக விற்பனை மந்த நிலையில் உள்ளதால் நூற்பாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

பருத்தி நூல் விலை உயர்வு: தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலாளிகளும் போராட்டம்- மோடி அரசை எச்சரிக்கும் முரசொலி!

இந்நிலையில், பஞ்சு நூல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும், பருத்தியை யூக வணிகத்திலிருந்து நீக்கி, அத்தியாவசியப்பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 2 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக ஜவுளி மற்றும் பின்னலாடைத் துறையினர் அறிவித்திருந்தனர். பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறினால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. வரும் மாதங்களில் இந்த விலை இன்னமும் உயர வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

பஞ்சுப் பதுக்கலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக எழுந்துள்ளது. பஞ்சை முழுமையாக உள்நாட்டு உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே இவர்களது முக்கியமான கோரிக்கை ஆகும். இப்பிரச்சினை எழுந்ததும் பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதினார்கள்.

பருத்தி, நூல் விலை உயர்வு தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்ததையும், பருத்தி, நூல் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று வலியுறுத்தியதையும் அக்கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதன்பிறகு பருத்தி மீதான இறக்குமதி வரி திரும்பப் பெறப்பட்டாலும், ஜவுளித்துறையில் நிலைமை இன்னும் சீராகவில்லை என்றும், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு கட்டுப் படுத்தப்படவில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். இந்தச் சூழல் காரணமாக தமிழ்நாட்டில் ஏராளமான ஜவுளி ஆலைகள் மூடப்படும் நிலை உருவாகி, ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பருத்தி நூல் விலை உயர்வு: தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலாளிகளும் போராட்டம்- மோடி அரசை எச்சரிக்கும் முரசொலி!

“அனைத்து நூற்பாலைகளிலும் பருத்தி மற்றும் நூல் இருப்பு குறித்த அறிவிப்பினை கட்டாயமாக்கி, உண்மையான தரவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஒப்பந்தம் செய்யப்படும் பருத்திக்கு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். நூற்பாலைகள் பருத்தியை கொள்முதல் செய்ய வங்கிகள் வழங்கும் ரொக்கக்கடன் வரம்பை 3 மாதங்களிலிருந்து 8 மாதங்களாக நீட்டிக்க வேண்டும். இதேபோல், வங்கிகள் வாங்கும் மதிப்பில் 25 விழுக்காடாக உள்ள விளிம்புத் தொகை 10 விழுக்காடாகக் குறைக்கப்பட வேண்டும்” என்றும் முதல்வர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதில் பிரதமர் தலையிட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஏனென்றால் ஒன்றிய அரசின் தவறான சில நடவடிக்கைகள் தான் இதற்குக் காரணம் ஆகும். “பருத்தி நூல் விலை உயர்வுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது முழு உண்மையாகும்.

பருத்தி நூல் விலை உயர்வு: தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலாளிகளும் போராட்டம்- மோடி அரசை எச்சரிக்கும் முரசொலி!

இந்திய பருத்திக் கழகத்தின் வழியாக பஞ்சை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று 2021 ஆம் ஆண்டு சொல்லிவிட்டார்கள். இதனால் பஞ்சை மொத்தமாக கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் பதுக்கி வைத்து செயற்கையான பற்றாக்குறையை உருவாக்குகிறார்கள் என்று கே.பாலகிருஷ்ணன் சுட்டிக் காட்டி உள்ளார்.

இதனால்தான் 2020 வரைக்கும் குறைவான விலையில் இருந்த பஞ்சும், நூலும் இந்த இரண்டு ஆண்டில் அதிக விலைக்குப் போனது. ஒரு ஆண்டுக்குள் பஞ்சு விலை இரண்டு மடங்கு ஆகி இருக்கிறது. இந்திய ஜவுளி தொழில்கட்டமைப்பில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு கொண்டுள்ளது. விசைத்தறி, கைத்தறி ஆகிய ஜவுளித் தொழிலை நம்பி ஒரு கோடிப்பேர் இருக்கிறார்கள்.

விவசாயத்துக்கு அடுத்ததாக அதிகளவு தொழிலாளர்கள் உள்ள தொழிலாக ஜவுளித் தொழில் இருக்கிறது. தமிழகத்தில் 14 மாவட்டங்கள் தொடர்புடைய பிரச்சினையாக இது இருக்கிறது. விவசாயிகளிடம் இருந்து பஞ்சை நேரடியாகக் கொள்முதல் செய்து பஞ்சாலைகளுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இருக்கிறது.

banner

Related Stories

Related Stories