முரசொலி தலையங்கம்

தமிழின மீட்சியின் முதல்வராக உயர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.. முரசொலி ஏடு தலையங்கம் கூறியது என்ன?

நமது பழம் பெருமைகளைப் பார்த்து எரிச்சல் அடைந்து கொண்டு இருந்தார்கள் சிலர். அவை அனைத்துக்கும் வரலாற்று ஆய்வுகளின் மூலமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் முதலமைச்சர் என முரசொலி தலையங்கள் தீட்டியுள்ளது.

தமிழின மீட்சியின் முதல்வராக உயர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.. முரசொலி ஏடு தலையங்கம் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழின மீட்சி அரசு!

தமிழினத்தின் பெருமையை எந்நாளும் மீட்கும் அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது. மீட்கும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் திகழ்ந்து வருகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நகர நாகரிகமும், எழுத்தறிவும், வேளாண்மையின் சிறப்பும், இரும்பின் பயனும் பெற்று வாழ்ந்தனர் என்பதை தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக மயிலாடும்பாறையைக் காட்டியிருக்கிறார்கள். இதைக் கேட்கும் போது தமிழ் மனம் ஆடிக்களிக்கிறது!

இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்கு - 1968 ஆம் ஆண்டு - உலகம் முழுவதும் இருந்து அறிஞர்கள் வருகை தந்திருந்தார்கள். அவர்களிடம் அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசினார்கள்.

"சென்ற காலத்தைச் சிந்தை செய்யும்போது உண்மையான ஒரு பெருமித உணர்ச்சியையும், வருங்காலத்தை எண்ணும்போது இடையறாத ஒரு நம்பிக்கையையும் இன்றைய இன்னல்களுக்கு இடையிலும் தமிழர்களின் உள்ளத்திலே இவ்விழாவின் நிகழ்ச்சிகள் ஏற்றி வைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. வரலாற்றுக் காலத்திற்கு முன்பு தொட்டு, வளமார் பண்பாடும் உயர் நாகரிகமும் மலிந்த ஒரு நாட்டில் இத்தகைய வெற்றியினை நாம் எதிர்பார்த்தல் இயல்பானதே"" என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

தமிழின மீட்சியின் முதல்வராக உயர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.. முரசொலி ஏடு தலையங்கம் கூறியது என்ன?

மயிலாடும்பாறைக் காட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விவரித்த போது ஏற்பட்ட பெருமித உணர்ச்சி என்பது அன்றைய தினம் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டிய பெருமித உணர்ச்சியைப்போல இருந்தது. இத்தகைய வெற்றிச் செய்தி களுக்குச் சொந்தமானது தமிழினம் என்ற எதிர்பார்ப்பு மகிழ்ச்சியும் இருந்தது.

கடந்த சனவரி மாதமே சட்டமன்றத்தில் இத்தகைய பெருமித அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தார்கள். கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் விரிவான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு தொடங்கி இருக்கிறது என்பதை அப்போது முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது. அதேபோல் சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து எனக் கண்டறியப்பட்டுள்ளது. ‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் - கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே - இந்த ஆய்வுகளை விரிவுபடுத்த முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

* கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் (கொந்தகை, அகரம், மணலூர்), சிவகங்கை மாவட்டம்

* சிவகளை, தூத்துக்குடி மாவட்டம்

* கங்கைகொண்டசோழபுரம், அரியலூர் மாவட்டம்

* மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம்

* வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்

* துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்

* பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம் - முதல் கட்டம் - ஆகிய ஏழு இடங்களில் விரிவான ஆய்வுகளை நடத்துவதற்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். இதோ ஆய்வு முடிவுகள் வரத் தொடங்கி உள்ளன. பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன பெருமித உணர்வு, உள்ளமெல்லாம் பரவத் தொடங்கி இருக்கிறது.

* கீழடிக்கு அருகில் அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்த போது அங்கே நெல்மணிகள் பயிரிடப் பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

* சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அங்கே நீர் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றுள்ளதும், தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலையில் இருந்து இந்நீர் கொண்டு வரப்பட்ட தாகவும் தெரிய வந்துள்ளது.

*கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும் பாறையில் கிடைத்த பொருளானது கி.மு. 1615 - கி.மு. 2172 என காலக் கணக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டு களுக்கு முந்தையது எனக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, காலத்தால் முந்தியது மயிலாடும் பாறைதான்.

- இதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்த மாபெரும் அறிவிப்பு ஆகும். இலக்கியத்தின் ஏதோ சில வரிகளை வைத்துக் கொண்டு பழம் பெருமை பேசி வருவதாகச் சிலர் கிண்டலடித்தார்கள். கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை வைத்துக் கொண்டு சிலர் கதை விட்டுக் கொண்டு இருந்தார்கள்.

தமிழின மீட்சியின் முதல்வராக உயர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.. முரசொலி ஏடு தலையங்கம் கூறியது என்ன?

எதைச் சொன்னாலும் அது எல்லாமே வேதகால நாகரிகத்தில் இருக்கிறது என்று சொல்லி தங்களது வேதனைகளைச் சிலர் மறைத்துக் கொண்டு இருந்தார்கள். நமது பழம் பெருமைகளைப் பார்த்து எரிச்சல் அடைந்து கொண்டு இருந்தார்கள் சிலர். அவை அனைத்துக்கும் வரலாற்று ஆய்வுகளின் மூலமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

தமிழினத்தின் பெருமையை மீட்கும் அரசாக தமிழ்நாடு அரசை உயர்த்திவிட்டார் முதலமைச்சர். இத்தோடு நிற்கப்போவதில்லை இதை இனமீட்சிப் பயணம் என்றும் அறிவித்து இருக்கிறார் முதலமைச்சர். தமிழர்கள் தடம்பதித்த இந்தியாவின் பிற பகுதிகளிலும், கடல் கடந்து வெற்றி கொண்ட நாடுகளிலும் அகழாய்வு செய்யத் திட்டமிட்டுள்ள தாக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

"தமிழர் அல்லது தமிழ் நாட்டார் முன்னேற்ற வினையை ஒல்லும் வகையால் செல்லும் வாயெல்லாம் செய்து வருவது தி.மு.க. அரசே" - என்று முந்தைய (1971இல்) தி.மு.க. அரசு குறித்து எழுதினார் திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள். அப்படிப் பாராட்டும் அரசாக இன்றைய தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

"தனித்தமிழியக்கம், திராவிடர் கழகம், சிறப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தமிழைப் புகழ்வதோடு அனைத்திந்திய நோக்கைத் தவிர்த்தன'' என்றும், "பண்பாட்டு நோக்கில் அகச்சார்பு நிலைப்பட்ட ஒரு கண்ணோட்டத்தை ஊக்குவித்தன" என்றும் மானுடவியல் ஆய்வாளர் கா.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்தகைய நோக்கம் கொண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது அறிவிப்புகள் உள்ளன.

"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்" என்ற முதலமைச்சரின் அறிவிப்பானது அவரை தமிழின மீட்சியின் முதல்வராக உயர்த்தி நிறுத்துகிறது!

banner

Related Stories

Related Stories