முரசொலி தலையங்கம்

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு.. இருப்பினும்: மக்களுக்கு முரசொலி தலையங்கத்தின் அன்பான வேண்டுகோள் இதோ!

அரசின் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்யப்பட்டாலும் மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து நடந்து கொள்ள வேண்டும்.

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு.. இருப்பினும்: மக்களுக்கு முரசொலி தலையங்கத்தின் அன்பான வேண்டுகோள் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (பிப்.14 2022) தலையங்கம் வருமாறு:

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அரசின் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்யப்பட்டாலும் மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து நடந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துவதை மாபெரும் இயக்கமாக தமிழக அரசு மாற்றிவிட் டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90.94 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. இதில் 70.42 சதவிகிதம் பேர் இரண் டாவது தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள்.

15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 33.46 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதில் 81 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 5 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிசெலுத்தாதவர்களை செலுத்த வகைக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம் மட்டும் 7 லட்சத்து 36 ஆயிரத்து 708 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் நடந்த 22 ஆவது முகாம் ஆகும். இத்தகைய முகாம்களில் மட்டும் 3 கோடியே 65 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள்.

5 முதல் 15 வயது வரையிலானவர்க்கு தடுப்பூசி போடுவதற்கு விரைவில் முடிவெடுக் கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் சொல்லி இருக்கிறார். மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 53 லட்சத்து 5 ஆயிரத்து 586 தடுப்பூசிகள் செலுத்தப்பட் டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகமானதுதான். இதனால்தான் ஒமைக்ரான், டெல்டா பாதிப்புகள் தமிழகத்தில் குறைந்து விட்டது. தமிழகத்தில் உயிரிழப்பு குறைந்து வருகிறது.

தினசரி ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்துவதால், உடனுக்குடன் கண்டறியப்படு கிறது. பரவல் நடக்காமல் அது தடுக்கிறது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட மக்கள் மிக எச்சரிக்கையுடனும் கவனத்துடன் இருக்க வேண்டும். இங்குதான் ஓரளவு பரவல் இருக்கிறது.

நேற்றைய தினம் அரசுத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி சில முக்கியமான முடிவுகளைஅறிவித்துள்ளார்கள். இக்கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது குறித்தும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில்தயாராக உள்ளது குறித்தும், மருத்துவமனைகளில் உள்நோயாளி களாகச்சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கல்வி நிலையங்கள் தொடர்ந்து மூடி இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட் டுள்ளது. இது மாணவர்களின் கல்வி நலனையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதால் விரைவில் முழுமையாக அனைத்து வகுப்புகளையும் திறப்பது நல்லது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

கொரோனாவால் ஏற்படும் மிக முக்கியமான பாதிப்பு என்பது சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் ஆகும். அன்றாட விற்பனை, வர்த்தகத்தை நம்பி இருக்கும் தொழில்களில் தங்களை ஈடுபடுத்தி இருப்பவர்கள் இந்தக் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்களது வாழ்வாதாரத்தை மனதில் வைத்தும் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுக் கப்பட்டுள்ளது.

சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கலை, விழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் ஒரே நேரத்தில் 200 பேர் வரையிலும் பங்கெடுக்கலாம். இறப்பு நிகழ்வுகளில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை இருக்கலாம்.

திரையரங்குகள், உணவகங்களில் 100 சதவிகித இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படலாம். உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்களிலும் முழுமையாக ஆட்கள் இருக்கலாம். வணிக வளாகங்களிலும் 100 சதவிகிதம் பொதுமக்கள் காணப்படலாம். மிக முக்கியமாக, மழலையர் வகுப்புகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துச் செயல்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “கொரோனா தொற்று எண்ணிக்கை குறையும் போதெல்லாம், தொற்றுத் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவோரின் எண்ணிக் கையும் குறைந்து விடுகிறது. எனவே, கொரோனா தொற்றுப் பரவல் இறங்கி வரும் நிலையில் அடுத்ததாக தொற்று பரவல் எழுச்சி பெற்றுவிடாதபடி மிகவும்எச்சரிக்கையாக இருப்பது அவசியம்” என்று எச்சரிக்கை செய்துள்ளார். அதனை பொதுமக்கள் அனைவரும் உணர வேண்டும்.

மறுபடியும் மறுபடியும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்வது மூன்று தான்:

1. முகக்கவசம் அணிவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

2. நெரிசல் வேண்டாம், போதிய இடை வெளியைக் கடைப்பிடியுங்கள். அனைத்துக் கடைகளிலும் கை சுத்திகரிப்பான்கள் அவசியம். உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவியும் அவசியம்.

3. தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இரண்டு தவணையையும் செலுத்திக் கொள்ளுங்கள். மூத்தவர்கள், பூஸ்டர் செலுத்திக் கொள்ளுங்கள்.

இத்தகைய கட்டுப்பாடுகளை உங்களுக்கு நீங்களே விதித்துச் செயல்பட்டால் கொரோனாவுக்கு முழுத்தடை போடலாம். அதனால்தான் அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருந்தாலும், பொதுமக்கள் கட்டுப்பாட்டு உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

banner

Related Stories

Related Stories