முரசொலி தலையங்கம்

"இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா?".. OPS,EPS-யை சாடிய முரசொலி தலையங்கம்!

ஜெயலலிதாவின்வாரிசுகள்தான் இவர்கள் என்பதை மெய்ப்பித்துக் கொண்டுஇருக்கிறார்கள்.

EPS & OPS
ANI EPS & OPS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜன., 25 2022) தலையங்கம் வருமாறு:

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். இதைப் பார்த்து பன்னீர்செல்வமும், பழனிசாமியும் பயந்து நடுங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோரக் கரங்களை தி.மு.க. அரசு நீட்டிவிட்டதாம். சோதனை என்ற பெயரால் சட்டமீறல்களை நடத்துகிறார்களாம். வெறும் கையோடுதான் திரும்புகிறார்களாம். எதுவும் கிடைக்கவில்லையாம்.

எம்.ஜி.ஆரின் பாசறையிலும், ஜெயலலிதாவின் பள்ளியிலும் ஒழுக்கமான கல்வியை இவர்கள் பயின்றார்களாம். இப்படி அவர்கள் இருவரும் இணைந்துஅறிக்கையை விட்டுள்ளார்கள். இவர்களது யோக்கியதை ஊரும், நாடும் அறிந்தது. அ.தி.மு.க.வினரே அறிந்தது. அதைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை.

எந்தெந்த இடங்களில் சோதனை நடக்கிறது, என்னென்ன கைப்பற்றப்பட்டன என்பதை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வெளிப்படையாகஅறிவித்து வருகிறார்கள். அதற்குப் பிறகும் எதுவும் கிடைக்கவில்லை என்றுசொல்வதற்கு பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் வெட்கமாக இல்லையா?

கே.பி.அன்பழகன், தமிழக அரசின் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் தனது அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசு நிதிமுறைகேடு மூலமாக, தனது பெயரிலும், தனது குடும்பத் தினர், உறவினர் மற்றும் பினாமிகளின் பெயர்களிலும் பல்வேறுசொத்துக்களை தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களிலும் வாங்கியுள்ளதாகவும் புகார் அனுப்பி இருந்தார் எம்.கிருஷ்ணமூர்த்தி என்பவர்.

இது சம்மந்தமாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்திற்கு, தான் அனுப்பிய மனுவின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொள்ள, இயக்குநர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைஅவர்களுக்கு உத்தரவு வழங்குமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்மனுதாக்கலும் செய்திருந்தார். இதன் படிதான் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரக உத்தரவுப்படி அந்த விசாரணை நடந்துள்ளது.

“கே.பி.அன்பழகன் (வயது 62) சட்டமன்ற உறுப்பினர், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி என்பவர், தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராகஇருந்தபோது, 27.04.2016 முதல் 15.03.2021 வரையிலான காலத்தில் தன்பெயரிலும், தனது குடும்பத்தினர் மற்றும் பிற நபர்களின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக Rs.11,32,95,755/- சொத்து சேர்த்ததாககே.பி.அன்ப ழகன், அவரது மனைவி திருமதி.மல்லிகா, அவரது மகன்கள்சசிமோகன், சந்திரமோகன் மற்றும் திருமதி.வைஷ்ணவி க/பெ சந்திரமோகன்ஆகியோர் மீது தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்புபிரிவுகுற்றஎண். 03/AC/2022, U/S 13(2) R/W 13(1)(E) OF THA PREVENTION OF CORRUPTION ACT,1988 and 13(2) r/w 13(1) (b) OF THA PREVENTION OF CORRUPTION ACT,1988 as amenden in 2018 and 109 IPC r/w 13(2) r/w 13(1) (e) OF THA PREVENTION OF CORRUPTION ACT, 1988 and 12 r/w 13(2) r/w 13(1) (b) OF THA PREVENTION OF CORRUPTION ACT,1988 as amended in 2018 என்ற பிரிவுகளின் கீழ் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சோதனையில் பணம் ரூ2,87,98,650/-, தங்கநகைகள் 6.637 கிலோ கிராம், சுமார் 13.85 கிலோகிராம் வெள்ளி மற்றும்ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூ.2,65,31,650/-, வங்கி பெட்டக சாவிமற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன” என்று லஞ்ச ஒழிப்புத் துறை அறிவித்துள்ளது. இதன் பிறகும் வெறும் கையோடு திரும்பினார்கள் என்று பொய் சொல்ல வெட்கமாக இல்லையா?

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 13 லட்சமும், 2 கோடிக்கான வைப்பு தொகை, நிலப்பதிவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வணிகவரித்துறை அமைச்சராக இருந்த வீரமணி வீட்டில் 34 லட்சம் பணம், 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 1,80,000 மதிப்பிலான அந்நியச் செலாவணி டாலர் கைப்பற்றப்பட்டுள்ளது. 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம்வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னர் இருந்ததை விட 646 சதவிகிதம் இவரது சொத்து அதிகமானதாக போலீஸார் கணக்கிட்டுள்ளனர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், வருமானத்துக்கு அதிகமாக 27 கோடி சம்பாதித்துள்ளதாக போலீஸார் கணக்கிட்டுள்ளார்கள். 23 லட்சம் பணமும், 4. 87 கிலோ தங்கமும், 136 கனரக வாகனங்களின் ஆவணமும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மின்சார அமைச்சராக இருந்த தங்கமணி 4 கோடி மதிப்பிலான தொகையை வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்ததாக ரெய்டு நடத்தப்பட்டு கணக்கில் வராத பணம், சான்று பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் வெளிப்படையாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டது ஆகும். அதன்பிறகும் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று சொல்ல வெட்கமாக இல்லையா?

ராஜேந்திர பாலாஜியின் ஊழல்களை வெளிப்படுத்தியது அ.தி.மு.க.வினர் தானே? அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவரது கட்சியினர் தானே? அமைச்சர் பதவியில் இருக்கும் போது தரம் கெட்ட பேச்சை மட்டுமே பேசிய ராஜேந்திரபாலாஜி, பதவிபறிபோனதும் தலைமறைவு ஆனது ஏன்? கே.பி.அன்பழகனுக்காக அறிக்கை விடும் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் ராஜேந்திர பாலாஜிக்காக அறிக்கை விடாதது ஏன்?

இதுதான் ஜெயலலிதாவின் பள்ளி படிப்பா? ஆமாம்! இதுதான் ஜெயலலிதா பள்ளியின் படிப்பு!

“எனது வீட்டில் நல்லமநாயுடு கொண்டு வந்து நகைகளைவைத்துவிட்டுப் போனார்” என்றும், “டான்சி பத்திரத்தில் இருப்பதுஎன்னுடைய கையெழுத்தே அல்ல'' என்றும் சொன்ன ஜெயலலிதாவின்வாரிசுகள்தான் இவர்கள் என்பதை மெய்ப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories