முரசொலி தலையங்கம்

“அமெரிக்காவை முந்திவிட்டோம் அண்டார்டிகாவைத் தாண்டிவிட்டோம் என்பதெல்லாம் போலிப் பெருமையே” : முரசொலி சாடல்!

தமிழ்நாடு அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் பா.ஜ.கவினர் ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசியை கேட்டு வாங்கித் தருவார்களா என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

“அமெரிக்காவை முந்திவிட்டோம் அண்டார்டிகாவைத் தாண்டிவிட்டோம் என்பதெல்லாம் போலிப் பெருமையே” : முரசொலி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதனால் ஒன்றிய சுகாதாரத் துறையினருக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

“இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தின் வேகம் அதிகரித்துள்ளது. இதனைச்செயல்படுத்தும் அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவருக்கும் தடுப்பூசி - அனைவருக்கும் இலவசம் என்பதே எங்களின் உறுதிப்பாடாக உள்ளது” என்று கூறியிருக்கிறார் பிரதமர். ஆனால் நாடு அப்படி பெருமைப்படும் நிலைமையில் இருக்கிறதா என்றால் இல்லை!

இன்னொரு செய்தியையும் கசிய விட்டுள்ளார்கள். அமெரிக்காவுக்குப் பிறகுதான் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடங்கினாலும், இப்போது அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையில் தடுப்பூசியைச் செலுத்திய நாடு என்ற மைல் கல்லை இந்தியா தொட்டுள்ளது என்பது தான் அந்தச் செய்தி.

தடுப்பூசித் திட்டம் அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியாவில் தடுப்பூசி போடும் திட்டம் 2021 ஜனவரி 16 ஆம் தேதிதான் தொடங்கப்பட்டது. இந்தியாவில் இதுவரையில் 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரையில் 32 கோடியே 33 லட்சத்து 27 ஆயிரத்து, 328 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

“அமெரிக்காவை முந்திவிட்டோம் அண்டார்டிகாவைத் தாண்டிவிட்டோம் என்பதெல்லாம் போலிப் பெருமையே” : முரசொலி சாடல்!

அதாவது சுமார் 3 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் அதிகம் செலுத்தப்பட்டுள்ளனவாம். இதை வைத்து அமெரிக்காவை விட அதிகமான கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தி இந்தியா சாதனை என்று சொல்லப்படுகிறதே! இது போன்ற போலியான பெருமை தேவையா?

இப்படி இந்தியப் பிரதமர் பெருமைப்படுவதைப் போல எந்த மாநில முதலமைச்சர்களும் பெருமைப்பட முடியாது. ஏனென்றால் எந்த மாநிலத்துக்கும் தேவையான தடுப்பூசிகள் ஒன்றிய அரசால் தரப்படவுமில்லை. மக்களுக்குப் போட முடியவுமில்லை. பிரதமர் சொல்வது போலிப் பெருமைதான் என்பதை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் அம்பலப்படுத்தி இருக்கிறது.

உண்மையான நிலைமை என்ன என்பதை முதலமைச்சரின் கடிதம் வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு முதலமைச்சர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். “கடந்த சில வாரங்களில் தடுப்பூசி போடுவது தீவிரமடைந்தது. ஆனால் தடுப்பூசி இருப்புதான் முதன்மையான தடையாக உள்ளது. நாட்டிலேயே மிகக் குறைவாக தடுப்பூசி எங்களுக்குத்தான் கொடுத் துள்ளீர்கள்.

ஒரு கோடி டோஸ்களை அதிகப்படுத்திக் கேட்டு ஏற்கனவே உங்களுக்குக் கடிதம் எழுதினேன். ஆனால் தடுப்பூசிகள் குறைவாகத்தான் தமிழ்நாட்டுக்கு வந்தது. அதனையே மீண்டும் வலியுறுத்துகிறேன். தற்போது இருப்பில் இருக்கும் தடுப்பூசிகளை இயன்ற வரை குறுகிய காலத்தில் பயன்படுத்துவதற்கு ஒன்றிய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார் முதலமைச்சர்.

“அமெரிக்காவை முந்திவிட்டோம் அண்டார்டிகாவைத் தாண்டிவிட்டோம் என்பதெல்லாம் போலிப் பெருமையே” : முரசொலி சாடல்!

பிரதமர் சொல்வது போலியான பெருமைதான் என்பது இதன் மூலம் தெரியவில்லையா? இதேபோல்தான் நாட்டின் ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் சொல்வார்கள். தமிழ்நாடு அரசிடம் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும், ஒன்றிய அரசு கொடுத்தால் தான் இனி தடுப்பூசி செலுத்த முடியும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லி இருக்கிறார். ஒன்றிய அரசிடம் இருந்து 1 கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும், அதில் 1 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 749 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதாகவும், சுமார் 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் மா.சு. சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு, தமிழ்நாட்டுக்குக் கொடுத்தது எவ்வளவு என்பதை கணக்குத் தெரிந்தவர்கள் போட்டுப் பார்த்துக் கொள்ளட்டும்.

இதற்கு மத்தியில், பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர், தடுப்பூசி போடுவதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். வெளிப்படைத் தன்மை கூடாது என்று ஒன்றிய அரசுதான் சொல்லி இருக்கிறது. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை தினமும் இணைய தளத்திலும் அறிவித்து வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேட்டிகளும் கொடுத்து வருகிறார். இதற்குமேல் வெளிப்படைத்தன்மை என்ன வேண்டும்? என்ன வெள்ளை அறிக்கை எதிர் பார்க்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர்? அவர் கேட்பது ஒன்றிய அரசுக்கே விரோதமானது. அப்படி வெளிப்படையாக அறிவிக்கக் கூடாது என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த அடக்குமுறையை பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் மீறச் சொல்கிறார். வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் கேட்பதற்கு முன்னால், தமிழ்நாடு கேட்கும் தடுப்பூசியை ஒன்றிய அரசிடம் கேட்டு வாங்கித் தர தமிழக பா.ஜ.க. தலைவர் முயற்சிக்க வேண்டும். ஒரு வேளை விரும்பினால் அவர் டெல்லிக்குக் கூட பாதயாத்திரையாகப் போகலாம்!

“அமெரிக்காவை முந்திவிட்டோம் அண்டார்டிகாவைத் தாண்டிவிட்டோம் என்பதெல்லாம் போலிப் பெருமையே” : முரசொலி சாடல்!

இப்போது இரண்டு தடுப்பூசிகள்தான் உள்ளது. மேலும் சில தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப் போவதாக பிரதமர் சொன்னார். இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து நேரடியாக மாநிலங்கள் தடுப்பூசியைப் பெறுவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டது. அதனையும் ஒன்றிய அரசு தடுத்தது. செங்கல்பட்டில் செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டு இருக்கும் தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையை நீங்கள் நடத்துங்கள் என்றோம்.

ஒன்றிய அரசு நடத்தவில்லை. எங்களிடம் குத்தகைக்குக் கொடுங்கள் என்று கேட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதற்கும் அவர்கள் கொடுக்கவில்லை. தடுப்பூசி தயாரிப்பில் மொத்த லாபம் ஒருவருக்கே போய்ச் சேரும் வகையில் தனது தடுப்பூசிக் கொள்கையை ஒன்றிய அரசு வடிவமைத்ததுதான் இதற்குக் காரணம். அந்த மொத்த குத்தகைதாரர்கள் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களின் தடுப்பூசித் தேவையை நிறைவேற்றும் சக்தி படைத்தவர்களாக இருந்தால் நாம் இதைப் பேசப் போவது இல்லை.

நம்முடைய கோரிக்கை என்பது, ஒன்றிய அரசால் தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்துக்கும் போதிய தடுப்பூசி வழங்கப்படவில்லை. அப்படி வழங்க வேண்டும். அதனைச் செய்யாமல் அமெரிக்காவை முந்திவிட்டோம் அண்டார்டிகாவைத் தாண்டி விட்டோம் என்பதெல்லாம் போலிப் பெருமையே தவிர உண்மை நிலைமை ஆகாது!

banner

Related Stories

Related Stories