முரசொலி தலையங்கம்

“ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழையை சரிசெய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி”: முரசொலி தலையங்கம் புகழாரம்

மீண்டும் அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பிக்கப்பட்டு முழுவீச்சில் இயங்கத் தொடங்கப் போகிறது.

“ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழையை சரிசெய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி”: முரசொலி தலையங்கம் புகழாரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த வாரம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிஅவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படாமல் இருப்பதை ஆய்வின் மூலம் பார்த்து வேதனை அடைந்து இருக்கிறார். அந்தநூலகத்தை சீரமைக்க அமைச்சர் உறுதி அளித்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் (2006-2011) நிறுவியது அண்ணா நூற்றாண்டு நூலகமாகும். அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா நிறைவின் அடையாளமாக நிறுவப்பட்டதே இந்த நூற்றாண்டு நூலகம்!

இந்நூலகம் நிறுவப்பட்டபோது தென்கிழக்கு ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நூலகம் என்று பாராட்டினர். அறிஞர் அண்ணாவின் பெயரால் ஒரு நூலகம் அமைத்தது முற்றிலும் பொருத்தமானதாகும். அவர் நூல்களைத் தேடித்தேடி விரும்பிப் படிப்பவர். பல நூலகங்களைப் பயன்படுத்திக் கொண்டவர். படித்தவற்றைத் தமது எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும் தம்பிமார்களுக்கு எடுத்துரைத்தவர். நாட்டுக்கு வெளிப்படுத்தியவர். அப்படிப்பட்டவரின் பெயரால்தான் கலைஞர் அவர்கள் நூலகத்தை அமைத்தார். அதற்காகக் கலைஞர் தமது சிந்தனையைச் செலவிட்டார்.

கலைஞர் அவர்கள்,‘புத்தகத்தில் உலகத்தைப் படிப்போம் - உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்’என்று கூறியவர். இந்நூலகத்தைக் கலைஞர் எப்படி வடிவமைத்தார்? - என்னென்ன பிரிவுகள் அங்கே ஏற்படுத்தப்பட்டன என்பதை நாம் எண்ணிப் பார்த்தால் இத்தகைய நூலகத்தையா கடந்த ஆட்சியினர் சிதைத்தனர் என்கிற வியப்பு நமக்கு ஏற்படும். சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூலகம் 8 ஏக்கர்கள் பரப்பளவு கொண்டது. அதில் கட்டடம் மட்டும் 3.75 இலட்சம் சதுர அடி. கட்டடத்தில் தரைத்தளமும் + 8 மாடிகளும் உள்ளன. இருப்பு வைப்பதாய் இருந்தால் 12 இலட்சம் நூல்களை அங்கே வைக்கலாம். முதல் தளத்தில் குழந்தைகளுக்குச் சிறப்பு வசதி செய்யப்பட்டு இருந்தது.

“ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழையை சரிசெய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி”: முரசொலி தலையங்கம் புகழாரம்

மொத்த நூலகத்தில் படிப்போருக்கான இருக்கை 1250. வாகனம் நிறுத்தும் இடத்தில் 417 கார்கள் + 1026 இருசக்கர வாகனங்கள் நிறுத்தலாம். நூலகத்தின் உள்ளே கூட்ட அரங்கு, கலை அரங்கு, கருத்தரங்கு அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. உணவு விடுதி, காப்பிபார் இடம் பெற்று இருந்தது. உலகெங்குமுள்ள முன்னணிப் பதிப்பாளர்களிடமிருந்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் நூல்கள் வாங்கப்பட்டு இருந்தன. பார்வை குறையுள்ளவர்களுக்காக பிரெய்ல் நூல்களும், ஒலிநூல்களும் தொகுக்கப்பட்டு இருந்தன. செய்தித் தாள்களும் வார, மாத இதழ்களும் வரவழைக்கப்பட்டு இருந்தன. குறிப்பு நூல்களுக்கான பகுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

அரிய நூல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. முக்கியப் படத் தொகுப்புகள் இருந்தன. முதல் தளத்தில் 15,000 சதுர அடிப்பரப்பில் குழந்தைகளுக்கு என்று ஓர் நூல் பிரிவு உருவாக்கப்பட்டு இருந்தது. குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிப்பதற்கு ஏற்ற வகையில் செயற்கை மரமொன்றும், அவர்கள் கலை நிகழ்ச்சிக்கென்று சிறிய மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. 20,000-க்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் அவர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு இருந்தன. இந்தியாவிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட 50,000-க்கும் மேற்பட்ட நூல்கள் குழந்தைகளுக்கென்று வைக்கப்பட்டு இருந்தன.

நுழைவுவாயிலில் பேரறிஞர் அண்ணாவின் சிலையை அமைத்தனர். நூலகம் முழுமையும் குளிர்மை வசதியுடன் கணினிமயமாக்கப்பட்ட நூலகமாகத் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டு இருந்தது. கணினி வழியில் நூல்களை மின்பதிவுகளைத் தொகுத்து வைத்து இருந்தனர். இங்கேயே உருவாக்கப்படும் மின்பதிவுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிற இடங்களில் தொகுக்கப்பட்டு இருக்கும் பதிவுகளையும் இணையத்தின் மூலம் பெறலாம். மின் நூலகத்தில் செய்திகளைச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டும் பொழுது பயன்படுத்திக் கொள்ளும் வசதி செய்யப்பட்டு இருந்தது. நூலகத்தின் நூல்களை எடுப்பதும், திருப்புவதும் தன்னியக்க முறையில் அமைக்கப்பட்டு இருந்தது. ஸ்மார்ட் கார்டு மூலம் நூலகத்தைப் பயன்படுத்த வசதி செய்யப்பட்டு இருந்தது.

“ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழையை சரிசெய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி”: முரசொலி தலையங்கம் புகழாரம்

நுகர்வோருக்கு வசதியாக தரை தளத்திலேயே பிரெய்ல் பிரிவு அமைக்கப்பட்டு இருந்தது. பிரெய்ல் வாசிப்பு வசதியும். குறுவட்டுத் தொகுப்புகள் இருந்தன. பிரெய்ல் வாசகர்களுக்கு உதவி செய்வதற்காக பணியாளர்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர். பிரெய்ல் நூல் பகுதிகளை உருவாக்கும் கருவி இருந்தது. அதில் முடிவு எடுத்துக் கொள்ளும் வசதி இருந்தது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்படும்போது நாம் மேலே சுட்டிக்காட்டிய வசதிகள் அனைத்தும் பெற்று இயங்கி வந்தது. இப்போது நூலகம் இயங்கவில்லை என்பதால் அந்த வசதிகள் அனைத்தும் இல்லாமல் ஆகிவிட்டன. நாம் மேலே எடுத்துக்காட்டி இருப்பவை நாமாகக் கற்பனையாக எழுதியது இல்லை. பள்ளிக்கல்வித் துறை அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்படும் போது வெளியிட்ட குறிப்புகளில் இடம் பெற்றிருந்தவையே ஆகும்.

2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது கோட்டூர்புர அண்ணா நூலகக் கட்டடத்தையும், அண்ணா சாலையில் கலைஞரால் கட்டப்பட்ட சட்டமன்றக் கட்டடத்தையும் புறக்கணித்தார். அக்கட்டடங்களை செயல்படாமல் செய்தார். ஜெயலலிதா அண்ணாவின் பெயரால் உள்ள நூலகத்தைச் சிதைத்தது என்பது மன்னிக்க முடியாத இமாலயத் தவறாகும். இத்தனைக்கும் அவர் புத்தகங்களைப்படிப்பவர் என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தும் அவர் இந்த நூலகத்தைப் புறக்கணித்து இயங்கவிடாமல் செய்து இருப்பது அவர் செய்த பல வரலாற்றுப் பிழைகளுள் இதுவும் ஒன்றாகும்.

“ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழையை சரிசெய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி”: முரசொலி தலையங்கம் புகழாரம்

நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துறைசார்ந்த பிரச்சினைகள் எது எது என உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதன்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 8 ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார். அப்போது அவர், ‘இந்த நூலகம் பராமரிக்கப்படாமல் அப்படியே உள்ளது. நூலகத்தைச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’என்று கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தியை நாம் நாளேடுகளில் படித்தபோது பெருமகிழ்ச்சி அடைந்தோம். மீண்டும் அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பிக்கப்பட்டு முழுவீச்சில் இயங்கத் தொடங்கப் போகிறது. இந்நூலகம் பராமரிக்கப்படாமல் இருந்ததைக் கண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் மிகவும் வருந்திய நிலை இனி மாறப்போகிறது. புத்தகப் பிரியர்கள், படிப்பாளிகள், ஆய்வாளர்கள் அனைவரும் பெரிதும் மகிழ்வர். எதிர்வரும் அறிஞர் அண்ணா பிறந்த நாளில் நூலகம் செயல்படும் விதத்தில் பராமரிப்புப் பணிகள் அமைந்தால் நன்றாக இருக்கும்.

banner

Related Stories

Related Stories