முரசொலி தலையங்கம்

“பதவி பவிசில் சித்தம் கலங்கிப் பித்தேறி பேசும் எடப்பாடி பழனிசாமி” - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நானும் தி.மு.க தலைவர் முக.ஸ்டாலினும் ஒன்றாகத் தான் சட்டமன்றம் வந்தோம். நான் முதல்வராகிவிட்டேன். ஆனால் ஸ்டாலின்? என்கிற ரீதியில் பேசினார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதிலளித்துப் பேசினார். அப்போது, “நான் எடப்பாடி பழனிசாமிபோல், யார் காலிலும் மண்புழுபோல் உருண்டு முதல்வராக மாட்டேன். எதற்கு இந்த மானங்கெட்ட பிழைப்பு. நான் கலைஞரின் மகன். எனக்கு சுயமரியாதை உண்டு.

நான் பள்ளி காலத்திலேயே இயக்கத்தில் இணைந்து பணியாற்றி பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞரணி செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என்று உயர்ந்திருக்கிறேன்” என்றார்.

இந்நிலையில் எடப்பாடி பெற்ற தமிழக முதல்வர் பதவி மண்ணில் தவழ்ந்து பெற்ற பதவி என்றும், அதனால் பதவி பவிசில் எடப்பாடி பழனிசாமி சித்தம் கலங்கிப் பித்தேறி பேசுகிறார் என்றும் முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

banner