முரசொலி தலையங்கம்

பா.ஜ.க-வுக்குச் சரிவு காலம் தொடங்கிவிட்டது! - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த ஒருமாத காலமாகவே அரசியல் சட்ட 70-ம் ஆண்டு நிறைவுவிழா பற்றி பிரதமர் மோடி பேசி வந்தார். நவம்பர் 26-ம் நாள் எதிர்க்கட்சிகள் அந்த விழாவை புறக்கணித்தன. நவம்பர் 23-ம் தேதியோ நள்ளிரவில் பா.ஜ.க-வினர், மகாராஷ்டிராவை கைப்பற்ற ஜனநாயகத்திற்கு சவப்பெட்டியை தயாரித்தனர்.

70 ஆண்டுகளாக அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம், சிக்கல்களை ஆராய்ந்து, விவாதித்து முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில், ஆளுநர்-பிரதமர்- குடியரசுத் தலைவர் ஆகிய மூவரும் சட்டத்திற்கு மாறாக நடந்திருப்பதாக முரசொலி கூறியுள்ளது. இரவோடு இரவாக சதிசெய்து ஆளுநர் ஆட்சியையும் கொண்டுவந்தது பா.ஜ.க. மகாராஷ்டிராவை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க இத்தனை வேலைகளையும் செய்தது.

ஆனால் இறுதியில் எதுவும் எடுபடவில்லை, மகாராஷ்டிராவில் பா.ஜ.க நிகழ்த்திய அரசியல் அநாகரீகம், உச்சநீதிமன்றத்தால் தோலுரித்துக் காட்டப்பட்டுவிட்டது. ஜனநாயகத்தின் ஆட்சி மகாராஷ்டிராவில் நிறுவப்பட்டுவிட்டது. ‘பா.ஜ.க-வுக்குச் சரிவு காலம் தொடங்கிவிட்டது!’ என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

banner