முரசொலி தலையங்கம்

பா.ஜ.க அரசுக்கு பொருளாதார நிபுணர் விடுத்த எச்சரிக்கை! - முரசொலி தலையங்கம் 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அபிஜித் பானர்ஜி, அவரின் துணைவியார் எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகிய மூவருக்கும் இந்த ஆண்டு பொருளியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது. ஏழை மக்களின் வறுமையை போக்குவதற்காக இந்த மூன்று நிருபணர்களாலும் வடிவமைக்கப் பட்டிருக்கும் ஆய்வு அணுகுமுறை, வெறும் ஏட்டளவில் இல்லாமல் அதை களத்தில் செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து அபிஜித் அளித்த பேட்டியில் இந்தியப் பொருளாதாரம் சரிந்து மோசமான நிலையில் உள்ளதாக விவரித்து கூறியிருக்கிறார். மேலும் இதை அரசு ஏற்றுக்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அபிஜித் எச்சரித்துள்ளதையும், இனிவரும் காலங்களில் பொருளாதாரத் துறையில் ஈடுபடும் இளைஞர்கள் கிராமப்புறங்களை நாடிச்செல்ல வேண்டும் எனவும் முரசொலி கூறியுள்ளது.

banner