முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நம்பமுடியாத அளவுக்கு ஒரு ஆங்கில நாளேடு சமீபத்தில் அவரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில் ‘தலைக்கு மேல் வெள்ளம் போல்’ ஓடிக்கொண்டிருக்கும் முறைகேடுகள் மற்றும் பிரச்னைகளில் ஒன்றுக்கு கூட சரியான விளக்கத்தையோ, பதிலையோ தர இயலாதவர் எடப்பாடி.
நெடுஞ்சாலை ஊழல், குட்கா ஊழல், ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்குக்கு லஞ்சம் என்று கணக்கிலடங்கா புகார்களை சுமந்து கொண்டிருக்கும் ஒரு முதல்வரை, என்ன தான் ஆங்கில நாளேட்டின் கட்டுரையாளர் ‘ஊதி ஊதி உயரப் பறக்க வைத்தாலும் பருந்தாக்கிப் பார்க்க முடியாது’ என முரசொலி கூறியுள்ளது.








