
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.12.2025) மதுரை மாவட்டம், உத்தங்குடி, கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், 2,630 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவிலான 63 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 17 கோடியே 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 7 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 1,77,562 பயனாளிகளுக்கு 417 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
=> மதுரை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள் :
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், மதுரை-தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் 150 கோடியே 28 இலட்சம் ரூபாய் செலவில் சந்திப்பு மேம்பாலம்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மதுரை மாநகராட்சியில் 464 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் நீரேற்று நிலையத்துடன் பண்ணைப்பட்டி வரை குழாய்கள், 131 கோடியே 28 இலட்சம் ரூபாய் செலவில் பண்ணைப்பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 720 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் பண்ணைப்பட்டி முதல் மதுரை மாநகர் வரை அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மற்றும் நகர் பகுதியில் 38 புதிய குடிநீர் தொட்டிகள், 293 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் மதுரை மாநகராட்சியில் கூடுதலாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் குடிநீர் விநியோக குழாய்கள் மற்றும் வீட்டு இணைப்புகள், 461 கோடி ரூபாய் செலவில் மதுரை மாநகராட்சி மையப் பகுதியில் உள்ள 57 வார்டுகளில் குடிநீர் விநியோக குழாய்கள் மற்றும் வீட்டு இணைப்புகள், அலங்காநல்லூர் – வலசை சாலையில் 2 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் மேம்பாலாம், அலங்காநல்லூர் – ஆஸ்பத்திரி சாலை, வலசை ஆகிய இடங்களில் 1 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாய நலக் கூடங்கள், சோழவந்தானில் 53 இலட்சம் ரூபாய் செலவில் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகக் கட்டடம், மேலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் 9 கோடியே 20 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் பூங்கா, குளங்கள் மற்றும் 26 கட்டடங்களுடன் மேம்பாட்டுப் பணிகள்;
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியங்களுக்குட்பட்ட 88 ஊரக குடியிருப்புகளுக்கு 127 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவிலும், 240 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் டி.கல்லுப்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 236 ஊரக குடியிருப்புகளுக்கு புதிய கூட்டுக்குடிநீர் வழங்கல் மேம்பாட்டுத்திட்டம்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 96 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில் 14 வகுப்பறைக் கட்டடங்கள், அய்யூர் அரசு உயர்நிலைப் பப்ளியில் 2 கோடியே 35 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் 9 வகுப்பறைக் கட்டடங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 61 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம், டி.வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பி.அம்மாப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் 3 கோடியே 53 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், சந்தையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1 கோடியே 64 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் ஆறு வகுப்பறைக் கட்டடங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் 2 கோடி ரூபாய் செலவில் திட்ட இயக்குநர் முகாம் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு, ஒத்தகடையில் 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் மயான எரிவாயு தகனமேடை, உச்சப்பட்டியில் 5 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், துள்ளுகுட்டி நாயக்கனூரில் 45 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார வளாகம், குறிச்சிப்பட்டியில் 80 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடம், கருங்காலக்குடியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் ஊரக சுகாதார வளாகம், குருவித் துறையில் 10 இலட்சம் ரூபாய் செலவில் மதி அங்காடி;
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், திருமங்கலம்-அண்ணாநகர், முஸ்லீம் ஆண்கள் பள்ளி, சத்திரப்பட்டி, குலமங்கலம் ஆகிய இடங்களில் 70 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையங்கள்;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் உறை விந்து சேமிப்பு வங்கி, மேலூர் கால்நடை மருத்துமனையில் 89 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டடம்;
வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், சோழவந்தானில் 1 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் சார்பதிவாளர் அலுவலகம்;
இயற்கை வளங்கள் துறை சார்பில், 2 கோடி ரூபாய் செலவில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை மதுரை மண்டல இணை இயக்குநர் அலுவலகம்;
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், எழுமலையில் 35 இலட்சம் ரூபாய் செலவில் குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம்;
போக்குவரத்துத் துறை சார்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அம்மா ஓட்டுநர் பயிற்சி பள்ளிக் கட்டடத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் பயிற்சியாளர்கள் தங்கும் விடுதிகளுக்கு கூடுதல் தளம், 13 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட அரசு தானியங்கி பணிமனை;
- என மொத்தம், 2,630 கோடியே 87 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவிலான 63 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

=> மதுரை மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள் :
கூட்டுறவுத் துறை சார்பில், கீழையூர் மற்றும் தும்பைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடங்கள், வாடிப்பட்டி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு சேவை மையம், கே.வெள்ளாகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 1 கோடியே 97 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1000 மெ.டன். கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய சேமிப்புக் கூடம்;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் 1 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கால்நடை பன்முக மருத்துவமனை;
சுற்றுலாத் துறை சார்பில், குட்லாடம்பட்டி அருவி பகுதியில் 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மேலூர் நகராட்சியில் 8 கோடியே 37 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள்;
- என மொத்தம், 17 கோடியே 18 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 7 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.

=> மதுரை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் :
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 7,784 பயனாளிகளுக்கு நத்தம் வீட்டுமனைப் பட்டாக்கள், நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் 2,880 பயனாளிகளுக்கு பட்டாக்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 3,400 பயனாளிகளுக்கு பட்டாக்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 1,376 பயனாளிகளுக்கு பட்டாக்கள், நகர நிலவரித் திட்டத்தின் கீழ் 28,424 பயனாளிகளுக்கு பட்டாக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 2,437 பயனாளிகளுக்கு பட்டாக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் 1,099 பயனாளிகளுக்கு பட்டாக்கள், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் 12,236 பயனாளிகளுக்கு உட்பிரிவுடைய பட்டாக்கள் மற்றும் 4,062 பயனாளிகளுக்கு உட்பிரிவற்ற பட்டாக்கள் என பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் 1,00,211 பயனாளிகளுக்கு பட்டாக்கள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 1000 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள், 61,433 பயனாளிகளுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் கடனுதவிகள்;
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 260 பயனாளிகளுக்கு பெண் ஓட்டுநர் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோக்கள், இ-ஸ்கூட்டர் மானியம்;
வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பில், 712 பயனாளிகளுக்கு வணிக விரிவாக்க மானியம், நடமாடும் காய்கறி விற்பனை வண்டி, பவல் டில்லர், பவர் வீடர், பேட்டரி தெளிப்பான், விசை தெளிப்பான், உழவர் நல சேவை மையம், ஆழ்துளை குழாய் கிணறு, புதிய மின் மோட்டார், சூரிய கூடார உலர்த்தி, சோலார் பம்ப்செட், வெங்காய சேமிப்புக் கூடம், நிரந்தர பந்தல் அமைப்பு, நிழல்வலைக் குடில் டிராக்டர் மற்றும் உபகரணங்கள் ஆகிவற்றிற்கான மானியத்துடன் கூடிய கடனுதவிகள், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், மதிப்புக்கூட்டு மையம், தொழில் முனைவோர் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 735 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், திறன்பேசிகள், மூன்று சக்கர சைக்கிள், மூளை முடக்கு வாதத்தில் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 52 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்புப் பெட்டிகள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணி நியமன ஆணைகள்;
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 134 பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்புப் பெட்டிகள்; தாட்கோ சார்பில், 97 பயனாளிகளுக்கு வாகனங்களுக்கான கடனுதவிகள், பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாப் யோஜனா திட்டத்தின் கீழ் கடனுதவிகள்;
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், 16 பயனாளிகளுக்கு 250 கோழிகள்/நாட்டுக் கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50 விழுக்காடு மானியத்துடன் உதவிகள், கொல்லைபுர, நடுத்தர மற்றும் ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு திட்டங்கள், புதிய மீன்வளர்ப்பு பண்ணை அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 11,476 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், சுய உதவிக் குழு கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், சிறுபான்மையினர் நல கடன், பிற்படுத்தப்பட்டோர் நல கடன், புதிய குடும்ப அட்டைகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 1010 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் உதவிகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய், சேய் நலப் பெட்டகங்கள்;
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 50 பயனாளிகளுக்கு வாகனங்களுக்கான கடனுதவிகள், கலைஞர் கைவினைத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 316 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், திருமண உதவித் தொகை வழங்குதல் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;
வனத் துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு பழங்குடியினர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உதவிகள்;
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 50 பயனாளிகளுக்கு உச்சப்பட்டி தோப்பூர் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள்;
என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 417 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 1,77,562 பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.






