மு.க.ஸ்டாலின்

“வி.பி.சிங் போன்ற பிரதமரை கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூகநீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர் வி.பி.சிங்!”

“வி.பி.சிங் போன்ற பிரதமரை கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங் அவர்கள். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார்; சர்வோதய சமாஜில் இணைந்தார், பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார், தனது நிலங்களையே தானமாக வழங்கினார்.

1969-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். பின்னர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகவும், ஒன்றிய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். தேசிய முன்னணியை உருவாக்கி 1989-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை.

இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் B.P. மண்டல் தலைமையிலான ஆணையம். சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு, B.P. மண்டல் பரிந்துரையின் ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்தியவர் வி.பி.சிங் அவர்கள்.

வி.பி. சிங் அவர்கள் பதவியிலிருந்த 11 மாத காலத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான தொடக்கப் புள்ளி, வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது;

“வி.பி.சிங் போன்ற பிரதமரை கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தேர்தல் சீர்திருத்தங்கள், மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில், தேசியப் பாதுகாப்புக் குழு, உழவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள், டெல்லி குடிசைப் பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (MRP) அச்சிடுதல் போன்றவற்றை செயல்படுத்திய மாபெரும் சாதனையாளர் ஆவார்.

அப்படிப்பட்ட தலைவரின் நினைவு நாளான இன்று (நவ,27) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது புகழ் ஓங்குக!

தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்!

பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூகநீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர்!

தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ஆம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களின் முழுவுருவச் சிலை!

EWS, NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.

சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் அவர்களது நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்!” என தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories