தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 1,703 முடிவுற்ற திட்டப்பணிகளை ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்து, ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.102.17 கோடி மதிப்பீட்டில் 15,634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் 06.04.2025 அன்று உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு, சிறப்பிக்க உள்ளார்கள்.
இவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 1,703 முடிவுற்ற திட்டப்பணிகளை ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்து, ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.102.17 கோடி மதிப்பீட்டில் 15,634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்கள்.
இதனை முன்னிட்டு நீலகிரிக்கு செல்வதற்காக இன்று (ஏப். 05) காலை விமானம் மூலம் புறப்பட்டார். தொடர்ந்து நீலகிரி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள், தொண்டர்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பளித்தனர்.
இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.