மு.க.ஸ்டாலின்

"தமிழ்நாட்டின் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தும்"- பன்னாட்டு மருத்துவ மாநாடு குறித்து முதலமைச்சர் கருத்து

"தமிழ்நாட்டின் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தும்"- பன்னாட்டு மருத்துவ மாநாடு குறித்து முதலமைச்சர் கருத்து
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை நந்தபாக்கம் வர்த்தக மையத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு இன்று தொடங்கி வரும் ஜனவரி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் , தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து செய்தியை வாசித்தார். அது பின்வருமாறு " இந்த சிறப்பு வேளையில் மேலும், சிறப்பாக நமது முதலமைச்சர் ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதை உங்கள் முன் வாசிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.இந்த மாநாட்டின் பங்கேற்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்களே, மிகுந்த மகிழ்ச்சியுடன், சென்னையில் நடைபெறும் உலக மருத்துவ மாநாட்டின் பொறுப்பாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வு நமது சுகாதார சேவைகளின் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.பல்வேறு சுகாதார அலகுகள் மற்றும் மருத்துவ சேவையின் தரம் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், சுகாதாரப் பாதுகாப்பை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் வகையில் நமது அரசு பல வெற்றிகரமான திட்டங்களை மேற்கொண்டுள்ளது.குறிப்பாக நமது பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதன் மூலம், நமது மாநில சுகாதாரத்தின் தரத்தினை மேலும் மேம்படுத்த உறுதிபூண்டுள்ளோம்.இன்று, சுகாதார சேவைகள் என்பது மருத்துவ அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது.

"தமிழ்நாட்டின் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தும்"- பன்னாட்டு மருத்துவ மாநாடு குறித்து முதலமைச்சர் கருத்து

பல்வேறு நாடுகளிலிருந்து பல தரப்பினர் பங்கேற்கக்கூடிய இத்தகைய மாநாடுகள் அந்த ஒருங்கிணைப்பைக் கொண்டு வருவதற்கும், சுகாதார நடைமுறைகளின் வளர்ச்சிக்கும் முக்கிய இடமாக செயல்படுவதற்கும் சிறந்த வாய்ப்பினை வழங்குகியுள்ளது. இந்த மாநாட்டின் முடிவுகள் வரவிருக்கும் ஆண்டுகளில் கொள்கை மற்றும் நடைமுறைகளில் வெளிப்படுவதன் மூலம் நமது சுகாதார அமைப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.குறிப்பாக, தமிழ்நாட்டில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்துவதில் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும் என நம்புகிறேன்.

உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் நமது மாநிலம் முன்னோடியாக இருந்து வருகிறது, மேலும் சுகாதார சேவைகளுக்கான முக்கிய இடமாக அறியப்படுகிறது. இது நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை அளித்துள்ளது. மேலும் நமது நிலையை மேலும் வலுப்படுத்த இந்த மாநாடு உதவும் என்று நான் நம்புகிறேன்.இந்த மாநாட்டை ஒருங்கிணைத்த அமைப்பாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் உரையாற்றினார்கள்.

banner

Related Stories

Related Stories