மு.க.ஸ்டாலின்

"டெல்டா விவசாயிகளின் உரிமைகளை ஒரு போதும் இந்த அரசு விட்டுக்கொடுக்காது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

"டெல்டா விவசாயிகளின் உரிமைகளை ஒரு போதும் இந்த அரசு விட்டுக்கொடுக்காது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2023) காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி, "முதலில் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் வேளாண்மைத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தேர்தல் உறுதிமொழி கொடுத்தோம். அந்த அடிப்படையில் தொடர்ந்து ஆட்சி அமைந்ததற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறைக்கு தனி கவனத்தை இந்த அரசு செலுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்ட உடனே அடுத்த நிமிடமே நம்முடைய அரசு அதை எதிர்த்து போராடியது. ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியது. ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் நானே அறிவித்தேன். இதன் விளைவாக, ஏல அறிவிக்கையை ஒன்றிய அரசு இரத்து செய்தது உங்களுக்குத் தெரியும். டெல்டா மக்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுக்காத அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து செயல்படும்.

"டெல்டா விவசாயிகளின் உரிமைகளை ஒரு போதும் இந்த அரசு விட்டுக்கொடுக்காது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

அதேபோல, காவிரி டெல்டா பகுதியினுடைய வேளாண் வளர்ச்சிக்கும், இந்தப் பகுதியிலுள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களை தூர் வாருவதற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீங்களெல்லாம் அறிவீர்கள். இந்த வகையில் காவிரி பாசனப் பகுதியிலுள்ள கால்வாய்களை தூர்வாருவதற்காக கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் 62 கோடியே 91 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 859 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. மேட்டூர் அணை பாசனத்திற்காக திறந்து விடப்படக்கூடிய நாளான ஜூன் 12-ம் தேதி அன்று திறக்கப்பட்டது. அதோடு வேளாண் பெருமக்களுக்கான பல்வேறு உதவிகளெல்லாம் வழங்கப்பட்டன. இதன் விளைவாக காவிரி டெல்டா பகுதியில் வரலாற்றுச் சாதனையை நாம் எட்டினோம். 4 இலட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13 இலட்சத்து 341 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு 39 இலட்சத்து 73 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப் பெரிய சாதனையை படைத்தோம். சாதனை என்று சொல்வதை விட, வேளாண் புரட்சியே நடந்தது என்று சொல்லலாம்!

அதனுடைய தொடர்ச்சியாக, 2022-23-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், காவிரி பாசனப் பகுதிகளில் தூர்வாருவதற்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடைமடை வரை தண்ணீர் செல்ல வசதியாக தூர்வாரும் பணிகளெல்லாம் துரிதமாக நடந்தது. மேட்டூர் அணை மிக சீக்கிரமாக மே மாதம் 24-ஆம் நாள் அன்று முன்கூட்டியே திறக்கப்பட்டது. இருந்தாலும், தண்ணீர் வந்து சேருவதற்கு முன்பே 4 ஆயிரத்து 964 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் அனைத்து தூர்வாரும் பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டன. உழவர்களுக்கான இடுபொருட்களும், கூட்டுறவு வங்கி கடன்களும் முழுமையாக கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, 2021-22-ஆம் ஆண்டு சாதனையை முறியடிக்கக்கூடிய வகையில். மற்றுமொரு வரலாற்றுச் சாதனையாக 2022-2023-ஆம் ஆண்டில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13 இலட்சத்து 53 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 41 இலட்சத்து 45 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. வேளாண் புரட்சி தொடர்ச்சியாக நடந்தது. இந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு திட்டமிடுதலை தமிழ்நாடு அரசு செய்தது. நீர்வளத்துறை மூலமாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 4 ஆயிரத்து 773 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 96 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளும் இன்னும் சில நாட்களில் முழுமையாக முடிக்கப்படும்.

"டெல்டா விவசாயிகளின் உரிமைகளை ஒரு போதும் இந்த அரசு விட்டுக்கொடுக்காது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

இதோடு வேளாண் பொறியியல் துறை மூலமாக, 5 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 146 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 651 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ளது. எஞ்சியுள்ள 45 விழுக்காடு தூர்வாரும் பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. அதேபோல, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக, 27 கோடியே 17 இலட்சம் கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 433 கிலோமீட்டர் நீளமுள்ள சிறிய கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 8 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் 25 எண்ணிக்கையிலான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கான குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ஆம் நாள் அன்று நான் மேட்டூர் சென்று அணையை டெல்டா பாசனத்திற்காக திறந்து வைக்க இருக்கிறேன்.

சென்ற ஆண்டுகளில் நாம் சாதித்துக் காட்டியது போலவே, மேட்டூர் அணையின் நீர் காவிரி டெல்டா பகுதிக்கு வருவதற்கு முன்னதாகவே நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியபடி அனைத்து தூர்வாரும் பணிகளும் சிறப்பாக முடிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் டெல்டா உழவர்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதியதோர் சாதனை படைப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.கழக ஆட்சியில் வேளாண் உற்பத்தி அதிகம் ஆகி இருக்கிறது. பாசனப் பரப்பு அதிகம் ஆகி இருக்கிறது. இவை அனைத்தும் வேளாண் துறையில் மாபெரும் புரட்சியைக் காட்டுகிறது. தூர்வாரும் பணியை தொடர்ச்சியாகச் செய்து மண்ணையும் மக்களையும் காப்போம் என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

"டெல்டா விவசாயிகளின் உரிமைகளை ஒரு போதும் இந்த அரசு விட்டுக்கொடுக்காது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் முதலமைச்சர் பதிலளித்தார் :

கேள்வி: கர்நாடகாவில் புதிதாக அமைந்த அரசு, மேகதாது அணை கட்டியே தீருவோம் என்ற முனைப்பில் இருக்கிறார்கள், இது சம்பந்தமாக நீங்கள் அந்த முதலமைச்சருடன் பேசி சுமுக தீர்வு காண்பதற்கு முயற்சி செய்கிறீர்களா?

முதலமைச்சர் பதில்: புதிதாக வந்திருக்கிற காங்கிரஸ் தலைமையில் இருக்கின்ற ஆட்சி மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த ஆட்சிகளும் இதையே தான் தொடர்ந்து திரும்பத் திரும்ப மேகதாது அணையை கட்டுவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போதும் நாம் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். அதே நிலையில் தான் எங்கள் ஆட்சி இன்றைக்கு இருக்கிறது. அதனால் எந்த காரணத்தைக் கொண்டும் கலைஞர் எப்படி அதில் உறுதியாக இருந்தாரோ, அதே உறுதியோடு இந்த ஆட்சி நிச்சயமாக இருக்கும், அதில் எந்தவிதமான சந்தேகமும் பட வேண்டாம்.

கேள்வி: காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும் என்று உழவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள், ஏனென்றால் காப்பீடு திட்டத்தில் முறையாக கிடைப்பது இல்லை, நிறைய பிரச்சினைகள் இருப்பதாக சொல்கிறார்களே?

முதலமைச்சர் பதில்: ஆய்வில் இருக்கிறது. ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி: நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை சந்தித்தீர்கள், அவர்கள் என்ன கோரிக்கை வைத்தார்கள்? வேளாண் பணிகளை நூறு நாள் திட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கைகள் இருக்கிறது...

முதலமைச்சர் பதில்: அந்த மாதிரி கோரிக்கை எதுவும் இன்று அவர்கள் வைக்கவில்லை. அவர்கள் கொடுக்கும் ஊதியத்தை முறையாக கொடுக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்தார்கள். அது முறையாக கொடுக்கப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் புகார் இருக்கிறதோ, அது குறித்து விசாரிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம்.

"டெல்டா விவசாயிகளின் உரிமைகளை ஒரு போதும் இந்த அரசு விட்டுக்கொடுக்காது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

கேள்வி: பத்திரிகையாளர் நல வாரியத் திட்டத்தின்கீழ் மதுரையிலும் திருச்சியிலும் விலை கொடுத்து வாங்கிய பட்டா நிலம் இப்போது இல்லையென்று தகவல் வந்திருக்கிறது. அது சம்பந்தமாக என்ன செய்யப் போகிறீர்கள்?

முதலமைச்சர் பதில்: அதை மறுபரிசீலனை செய்து கொடுப்பதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: கவர்னர் இன்னும் பல மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்காமலே இருக்கிறார், இது சம்பந்தமாக தெலங்கானா அரசு கூட கவர்னரை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார்கள். அதுபோன்று ஏதாவது ...

முதலமைச்சர் பதில்: நாங்களும் நீதிமன்றத்தை நாடலாமா என்று சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: கவர்னரை மாற்றுவதற்கு ஏதாவது கோரிக்கை வைப்பீர்களா?

முதலமைச்சர் பதில்: நாங்கள் நினைப்பது எல்லாம் நடந்தால் இந்த பிரச்சினையே இல்லை.

கேள்வி: கலைஞருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழகத்திற்கு மு.கருணாநிதி பெயர் சூட்டப்படுமா?

முதலமைச்சர் பதில்: நிச்சயமாக அது பரிசீலிக்கப்படும். இருக்கிற பல்கலைக்கழகத்திற்கு வைக்கலாமா அல்லது புதிதாக உருவாக்கப்படக்கூடிய பல்கலைக்கழகத்திற்கு வைக்கலாமா என்பதை நாங்கள் பரிசீலித்து முடிவு செய்வோம்.

கேள்வி: தமிழ்நாட்டில் முக்கியமான பல்கலைக்கழகங்களில் 2 வருடங்களாக பட்டம் தராமல் இருக்கிறார்கள், அதற்கு முக்கியக் காரணம் கவர்னர் தான் என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?

முதலமைச்சர் பதில்: ஏற்கனவே உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார், திரும்பும் நான் அழுத்தமாக சொல்கிறேன். உண்மைதான் அது.

கேள்வி: விரைவாக அவர்கள் பட்டம் பெற நமது அரசு சார்பில் ஏதாவது முயற்சி செய்யப்படுமா ?

முதலமைச்சர் பதில்: அதற்கு தான் பல்கலைக்கழகத்தில் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று நாங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டிருக்கிறோம்.

"டெல்டா விவசாயிகளின் உரிமைகளை ஒரு போதும் இந்த அரசு விட்டுக்கொடுக்காது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

கேள்வி: டாஸ்மாக் கடைகளை குறைக்கும் எண்ணம் ஏதும் இருக்கிறதா?

முதலமைச்சர் பதில்: ஏற்கனவே சொல்லியிருக்கிறோமே. இந்த ஆண்டு 500 கடைகளை குறைப்பதாக அறிவித்திருக்கிறோம்.

கேள்வி: அமைச்சரவையில் மாற்றம் இருக்க வாய்ப்பிருக்கிறதா?

முதலமைச்சர் பதில்: இப்போது வந்த செய்தியைப் பார்த்தீர்களென்றால், ஒன்றியத்தில் தான் அமைச்சரவை மாற்றம் வரும் என்று செய்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: நீர்நிலைகளை நன்றாக தூர்வாரியிருக்கிறீர்கள், சில இடங்களில் கழிவு கலக்கிறது, அவற்றை சுத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது?

முதலமைச்சர் பதில்: அதையும் கூடுமானவரை முயற்சி செய்து தடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏதேனும் புகார் இருந்தால் சொல்லுங்கள், அதையும் கவனிக்கிறோம்.

கேள்வி: வணிக (Commercial) மின்கட்டணம் உயர்வினால் வணிகம் பாதிக்கப்படும் என்று ஒரு கருத்து இருக்கிறது, அதைக் குறைப்பதற்கு ...

முதலமைச்சர் பதில்: அதுவும் ஒரே ஒரு பத்திரிகையில் தான் அதை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் அதைப் புரிந்து கொண்டார்கள். திட்டமிட்டு ஒரு பொய்ப் பிரச்சாரம். வீட்டு இணைப்பைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மின்கட்டணத்தை எந்தக் காரணம் கொண்டும் உயர்த்த மாட்டோம் என்று உறுதியாக சொல்லிவிட்டோம். ஆனாலும் ஏற்கனவே அதே அறிவிக்கை தான் வந்திருக்கிறது. உங்களுக்குத் தெரியும், பார்த்திருப்பீர்கள். புள்ளிவிவரத்துடன் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். வீட்டு இணைப்பிற்கு எந்தவிதமான கட்டண உயர்வும் கிடையாது, அனைத்து இலவச இணைப்புகளும் தொடரும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம். அதேபோல வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் என்பதும் தொடரும். கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு அளிக்கப்படக்கூடிய இலவச மின்சார சலுகைகளும் அப்படியே தொடரப் போகிறது. அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. ஒன்றிய அரசின் விதிமுறைப்படி பார்த்தீர்கள் என்றால், 4.7 விழுக்காடு கட்டணம் அதிகரிக்க வேண்டும். ஆனால், 2.18 விழுக்காடாக அதனை குறைத்து அந்தத் தொகையையும் மானியமாக தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு மின்வாரியத்திற்கு தருவதற்காக அரசு உத்தரவிட்டிருக்கிறது. எனவே வீட்டு இணைப்புகளை பொறுத்தவரைக்கும் எந்தவிதமான கட்டண உயர்வும் நிச்சயமாக இருக்காது.வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் அதுவும் 13 பைசாவிலிருந்து 21 பைசா வரை உயர்வு இருக்கும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம், அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. மற்ற மாநிலங்களில் பார்த்தீர்கள் என்றால், இதைவிட அதிகம். அதிமுக ஆட்சி இருந்தபோது பார்த்தீர்கள் என்றால், அதை செங்குத்தாக மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். மின்வாரியத்தை கடனில் மூழ்கடித்துவிட்டு போய்விட்டார்கள். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது, உதய் (UDAY) திட்டத்தில் கையெழுத்திட்டது அதிமுக ஆட்சி. அதனால்தான், இந்த கோளாறு எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இது தான் உண்மை.

கேள்வி : அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் வருவதை தடுப்பதாக சொன்னீர்கள். அது பற்றி தங்கள் கருத்து.. .

முதலமைச்சரின் பதில் : அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கேள்வி : ஆவின் பாலில் கலப்படம் செய்கிறார்கள் என்று கூறுகிறார்களே?

முதலமைச்சரின் பதில் : அது தவறான செய்தி. அன்றைக்கே அந்த துறையினுடைய அமைச்சர் மறுத்துவிட்டார். திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆதாரத்தை போலியாக தயார் செய்து போடுகிறார்களே தவிர, அது உண்மை இல்லை.

கேள்வி : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களுடைய ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டீர்களா? புதிதாக ஏதாவது கூட்டணிக் கட்சிகள் …. நீங்கள் அதில் கலந்து கொள்ளப் போகிறீர்களா?

முதலமைச்சரின் பதில் : நான் தலைவருடைய நூற்றாண்டு விழாவில் தெளிவாக பேசியிருந்தேன். வருகிற 23-ஆம் தேதி பீகார் மாநிலத்தினுடைய முதலமைச்சர் திரு. நிதீஷ்குமார் அவர்கள் ஒரு கூட்டத்தை கூட்டியிருக்கிறார், அதில் முடிவெடுக்கப்படும். நான் அதில் கலந்து கொள்ளப்போகிறேன்.

கேள்வி : மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் இரத்து செய்தது ஒன்றிய அரசின் தலையீட்டினால் தான் ஆனது என்று அது பற்றி….

முதலமைச்சரின் பதில் : அதற்குரிய விளக்கத்தை சொல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தில்லிக்கு அனுப்பி விளக்கம் சொல்லி, இப்போது மறுபடியும் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories