மு.க.ஸ்டாலின்

அரசியலுக்கு வரும் பெண்களுக்கு அன்னை சத்தியவாணி முத்து ஒரு பாடம்.. -நூற்றாண்டு விழாவில் முதல்வர் புகழாரம்!

அரசியலுக்கு வரும் பெண்களுக்கு அன்னை சத்தியவாணி முத்து ஒரு பாடம்.. -நூற்றாண்டு விழாவில் முதல்வர் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திராவிட இயக்கத்தின் முதல் பெண் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையாரின் நூற்றாண்டு விழா சென்னையில் மகளிர் அணி சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நூற்றாண்டு விழாவில் எனது உரையினை நான் பதிவு செய்ய விரும்புகிறேன் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பெண் சிங்கமாக வாழ்ந்த காட்டியிருக்கக்கூடிய சத்தியவாணி முத்து அம்மையாருடைய நூற்றாண்டு விழாவை கழகத்தின் மகளிர் அணியின் சார்பில் இன்றைக்கு எழுச்சியோடு ஏற்றத்தோடு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய நேரத்தில் கழகத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக அந்த எண்ணத்தை எண்ணியது நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா. பாரிமுனை பெத்தநாயக்கன்பட்டையில் ஒரு பள்ளிக்கூடத்தில் மகளிர் மன்றத்தினுடைய தொடக்க விழா கொண்டு நடந்தது.

அரசியலுக்கு வரும் பெண்களுக்கு அன்னை சத்தியவாணி முத்து ஒரு பாடம்.. -நூற்றாண்டு விழாவில் முதல்வர் புகழாரம்!

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய மகளிரை அழைத்து நம்முடைய அண்ணா அவர்கள் பேச சொல்லி இருக்கிறார்கள் அதில் பலருக்கு பேச தெரியவில்லை. இந்த சமூகத்தால் ஒடுக்கப்பட்டிருந்த மகளிர் தனக்கு போடப்பட்டிருந்த அந்த அடிமை விலங்கை உடைத்து முன்னேற அப்பொழுது வெளியே வர முடியாத காலம். அதனால் பல பெண்களுக்கு பேச்சுக் கலை கை கொடுக்கவில்லை.

பெண்களுக்கு இருந்த தடையை போக்க தன்னுடைய பேச்சின் போது அறிஞர் அண்ணா குறிப்பிட்டுச் சொன்னார்கள். டாக்டர் தர்மாம்பாள், மூதாட்டி ராமாமிருதம், சத்தியவாணி முத்து போல கழகம் கழகத்தில் இருக்கக்கூடிய மகளிர் பேசுவதற்கான பயிற்சி பெற்றாக வேண்டும். அதன் மூலமாக கழகம் வலுப்பெற வேண்டும் என்று அண்ணா சொன்னார். அதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கக்கூடிய வகையில் விளங்கியவர் இவர்.

அண்ணாவையே தன்னுடைய பேச்சால் அசத்தி காட்டியவர் தான் அம்மையார் சத்தியவாணி முத்து. அவரைப் போன்ற மகளிர் இந்த இயக்கத்திற்கு கிடைத்ததால்தான் இன்று பலர் பல மகளிர் பல தடைகளை உடைத்து உதவிகளுக்காக பேசிக் கொண்டிருக்கக் கூடிய காட்சியை பார்க்கிறோம். அதேபோல்தான் விருதுநகர் மாநாட்டில் அவர் அமர்ந்திருந்த அந்த காட்சியை பார்த்து அண்ணா பெருமையோடு சொன்னாராம் "மதுரை மீனாட்சி போல கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்" என்று.

அரசியலுக்கு வரும் பெண்களுக்கு அன்னை சத்தியவாணி முத்து ஒரு பாடம்.. -நூற்றாண்டு விழாவில் முதல்வர் புகழாரம்!

தற்போது இங்கே பெரும்பாலும் 99 சதவிகிதம் மகளிர் கூடி இருக்கிறீர்கள். இதைவிட ஒரு பெரிய அரங்கமாக இருந்தால் அங்கே பல்லாயிரக்கணக்கில் மகளிர் கூடியிப்பார்கள். ஆனால் அந்த காலத்திலே விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்குதான் பெண்கள் அரசியலுக்கு வந்தார்கள். அதுவும் திராவிட இயக்கத்திற்கு வந்தார்கள். அன்னை மீனாம்பாள் சிவராஜ், நீலாவதி ராமசுப்பிரமணியம், டாக்டர் தர்மாம்பாள் குருசாமி, அன்னை மணியம்மையார் இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்களை அந்த காலத்தில் இருந்தார்.

அதில் இளம் வயதிலேயே இணைந்து கொண்டவர் தான் சத்தியவாணி. இறுதியில் பல்லாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் சத்தியவாணி இருந்து இருக்கிறார்கள். சுயமரியாதை சுடர் என்றும், அறப்போர் தயங்காத வீராங்கனை என்றும், இயக்கத்தை வளர்த்த வலுவூட்டிய தியாக தீபம் என்றும் அம்மையாரை புகழ்ந்து எழுதியவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர். அவர் எழுதுவதற்கு என்ன காரணம் என்றால் அன்னை சத்தியவாணி ஒன்பது முறை சிறை சென்று உள்ளார்.

அரசியலுக்கு வரும் பெண்களுக்கு அன்னை சத்தியவாணி முத்து ஒரு பாடம்.. -நூற்றாண்டு விழாவில் முதல்வர் புகழாரம்!

1945 இல் நடந்த சம்பவம் அது. புதுச்சேரிக்கு நாடகம் நடத்த சென்ற நேரத்தில் கலைஞர் தாக்கப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட ஒரு வரலாறு உண்டு. கலைஞர் ஒரு போர் வீரனாக மாறினார் என்பது வரலாறு.

அதே போல புதுச்சேரி மாநாட்டுக்கு முந்தைய நாள் கலவரமும் வன்முறை நடந்த காரணத்தால் மாநாடு திட்டமிட்டபடி நடக்கவில்லை. அம்மையார் பேசுவதற்கு முன்பாக கையில் கம்போடு வன்முறையாளர்கள் மேடைக்கு வந்து விட்டார்கள். கூட்டமே கலைக்கப்பட்டது. அம்மையார் அவர்கள் பொன் ராமலிங்கம் வீட்டிற்கு செல்லும் போது அவரை அங்கே போக விடாமல் தடுத்து இருக்கிறார்கள்.

அதனால் வேறு வீட்டுக்குள் நுழைந்து தங்கி இருக்கிறார். முக்கியமானவர்கள் அனைவரும் புதுச்சேரியிலிருந்து தப்பிவிட்டார்கள். இவர் ஒருவர் மட்டும்தான் இங்கு இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு தேடி இருக்கிறது அந்த கலவர கும்பல் .

அரசியலுக்கு வரும் பெண்களுக்கு அன்னை சத்தியவாணி முத்து ஒரு பாடம்.. -நூற்றாண்டு விழாவில் முதல்வர் புகழாரம்!

அன்று காலையிலே அவர்கள் சிக்கியிருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கும். 22 வயதில் சத்தியவாணி முத்துவின் எதிர்கொண்ட தாக்குதல் வேறொரு பெண்ணுக்கு நடந்திருந்தால் இத்தோடு அரசியலை வேண்டாம் என்று போய் இருப்பார்கள். ஆனால் ஒரு சீர்திருத்த இயக்கத்தில் பெண்கள் ஈடுபடும் போது எதிர்கொள்ளக்கூடிய அந்த ஆபத்துக்கள் என்ன என்பதை உணர்ந்து அதன் பிறகு தைரியமாக ஈடுபட்ட காரணத்தால் தான் இன்றைக்கு வரலாற்றில் சத்தியவாணி முத்து அன்னை என்று அடைமொழியோடு அழைக்கப்படுகிற ஒரு சிறப்பை பெற்று இருக்கிறார்.

அரசியலுக்கு வருகின்ற பெண்களுக்கு இவர் ஒரு பாடம். அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் அதே ஆர்வத்தோடு இறுதி காலம் வரை அவர் இயங்கி இருக்கிறார். திராவிட கழகத்தினுடைய சொற்பொழிவாளராக, திராவிடர் கழகத்தினுடைய நிர்வாக குழு உறுப்பினராக, தி மு கழகத்தினுடைய பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு, கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினராக பத்தாண்டு காலம், கழகத்தின் கொள்கை விளக்க செயலாளராக பேரறிஞர் அண்ணாதுரை அமைச்சரவையில் அமைச்சராக, தலைவர் கலைஞருடைய அமைச்சரவையில் அமைச்சராக, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக இருந்தார்.

அரசியலுக்கு வரும் பெண்களுக்கு அன்னை சத்தியவாணி முத்து ஒரு பாடம்.. -நூற்றாண்டு விழாவில் முதல்வர் புகழாரம்!

மேலும் நாடாளுமன்ற உறுப்பினராக ஒன்றிய அமைச்சராக கழகத்தின் ஆதிதிராவிட நில பிரிவு உடைய பிரிவு செயலாளர் ஆக , 1991 ஆம் ஆண்டு பிரதமர் பொறுப்பிலிருந்து அகில இந்திய எஸ் சி எஸ் டி ஆணையத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் எடுத்து வைத்த அந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் பிரதமர் ஒப்புக்கொண்ட நிலையில் அப்பொழுது ஆட்சி கலைக்கப்பட்டது. அம்மையார் அவர்கள் அந்த பொறுப்புக்கு செல்ல இயலாத சூழல் அப்போது ஏற்பட்டு விட்டது. அதனை மனதில் வைத்திருந்த நம்முடைய தலைவர் கலைஞர் 1991 ஆம் ஆண்டு தந்தை பெரியார் விருதை அம்மையாருக்கு வழங்கி பெருமைப்படுத்தினார் என்பது வரலாறு.

அப்பொழுதுதான் ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சிக்கு வந்திருந்தார். முப்பெரும் விழாவினை கூட சென்னையில் நடத்த விடக்கூடாது என்று கலவரத்தை ஏற்படுத்தினார்கள். மிகப்பெரிய ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல் எறிந்து ஊர்வலத்தை கலைக்க பார்த்தார்கள். அப்பொழுது தைரியமாக மூன்று நாள் துணிந்து நடந்து எப்படியோ மேடைக்கு வந்து விட்டார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் குறித்து எழுச்சி உரையாற்றிய அந்த நாளை நான் எண்ணிப் பார்க்கிறேன். அம்மையார் மறைந்த போது உடனடியாக அண்ணா நகர் இல்லத்திற்கு கலைஞர் ஓடி சென்று அஞ்சலி செலுத்திய காட்சி; கலைஞர் அஞ்சலி செலுத்திய நேரத்தில் அவரோடு நானும் சேர்ந்து இருக்கிறேன்.

அரசியலுக்கு வரும் பெண்களுக்கு அன்னை சத்தியவாணி முத்து ஒரு பாடம்.. -நூற்றாண்டு விழாவில் முதல்வர் புகழாரம்!

போராட்ட குணம் தியாக உணர்வும் அசைக்க முடியாத கொள்கை மற்றும் கொண்டவராக இறுதி மூச்சு வரையில் இருந்த காரணத்தினால் சத்தியவாணி முத்து இன்றைக்கும் போற்றப்படுகிறார். இதனை இக்கால மகளிர் அணிகளும் பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு தான் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. தியாகங்களை செய்திருக்கிறார் என்கிற அந்த காரணம்தான் சித்திரை ஆண்டு காலம் கழித்து போற்றப்படுகிறார் என்றால் அதற்கு காரணம் அந்த அளவுக்கு ஒரு பெரிய போராளியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

அவரது நூற்றாண்டு விழாவில் அவர் ஏற்றுக்கொண்ட லட்சியம் வாழ வளர பாடுபடுவோம்; பணியாற்றுவோம். அதற்காகத்தான் திராவிட மாடல் ஆட்சி நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அவர் பெயரால் கேட்டு கொண்டு விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories