மு.க.ஸ்டாலின்

”நேர்மைக்கு எடுத்துக்காட்டு; அச்சுறுத்தலுக்கு அஞ்சாத போராளி” - நல்லம நாயுடு மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

தான் பணியாற்றிய துறைக்கும், பொதுப்பணிக்கும் இறுதிவரை விசுவாசமாக இருந்த ஒரு போராளியான காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”நேர்மைக்கு எடுத்துக்காட்டு; அச்சுறுத்தலுக்கு அஞ்சாத போராளி” - நல்லம நாயுடு மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஓய்வு பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு மறைவு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரங்கல் செய்தி.

அதில், ”முக்கிய ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரியாகவும் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் எஸ்.பி.யாகவும் இருந்து ஒய்வு பெற்ற நல்லம்ம நாயுடு அவர்கள் வயது முதிர்வு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக - எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் நியாயத்தையும் - நீதியையும் நிலைநாட்டும் துணிச்சல்மிக்க அதிகாரியாகப் பணியாற்றியவர். ஊழல் வழக்குகளை - குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் வழக்குகளை விசாரித்தவர். உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தவுடன் “நீதி வென்றது” என்று அவர் அளித்த பேட்டி இன்றும் என் நினைவில் இருக்கிறது. சமீபத்தில்தான் “என் கடமை - ஊழல் ஒழிக” என்ற புத்தகத்தை என்னிடம் நேரில் வழங்கி - துறையில் தான் சந்தித்த சவால்கள் - அதை எதிர்கொண்ட விதம் ஆகியவை குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் விசாரணை அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டு - பொதுவாழ்வில் ஊழல் ஒழிப்பு என்பதை தனது நெஞ்சில் சுமந்து - தான் பணியாற்றிய துறைக்கும், பொதுப்பணிக்கும் இறுதிவரை விசுவாசமாக இருந்த ஒரு போராளியான காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்த சோகத்தில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் - அவரோடு பணியாற்றிய சக காவல்துறையினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories