மு.க.ஸ்டாலின்

“வகுப்புவாதத்தைத் தூண்ட நினைக்கும் அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்” - மு.க.ஸ்டாலின் பேட்டி!

“மோடி, தான் இந்தி பேசும் பகுதிக்கு மட்டுமே பிரதமர் என்று நினைக்கிறார்” என இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“வகுப்புவாதத்தைத் தூண்ட நினைக்கும் அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்” - மு.க.ஸ்டாலின் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பிரதமருக்கு எந்தவித அக்கறையும் இல்லை" என்றும் "அ.தி.மு.க.வை வகுப்புவாதம் செய்யவே பா.ஜ.க. பயன்படுத்துகிறது. எனவே தமிழக மக்கள் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை நிராகரிப்பர்" என்றும் "இந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கில நாளேட்டிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

"இந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கில நாளேட்டின் 26.3.2021 தேதியிட்ட இதழில் "மோடி, தான் இந்தி பேசும் பகுதிக்கு மட்டுமே பிரதமர் என்று நினைக்கிறார் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு" என்ற தலைப்பில் அதன் சிறப்புச் செய்தியாளர் திவ்யா சந்திரபாபு எழுதிய பேட்டி - கட்டுரை வெளியாகியுள்ளது.

அதன் விபரம் வருமாறு :-

திராவிட முன்னேற்றக் கழகத் (தி.மு.க.) தலைவர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். பல ஆண்டுகளாக அவர் தேர்தல் களத்தில் இருந்த போதிலும் இதுதான் அவர் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் முதல் தேர்தலாகும். 2018-ல் அவருடைய தந்தை கலைஞர் அவர்களுடைய மறைவுக்குப் பிறகு திராவிட இயக்கத்தின் பாரம்பரிய லட்சியத்தைக் கையில் ஏந்தி அவர் போட்டியிடுகிறார்.

இளைஞராக இருந்தபோது தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் இளைஞர் அணித் தலைவராகவும், ஆறுமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், சென்னை மேயராகவும், துணை முதலமைச்சராகவும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், இப்போது சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து வருகிறார். தன்னுடைய மாபெரும் தேர்தல் கள யுத்தத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, மு.க.ஸ்டாலின், "இந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கில நாளேட்டுக்குப் பேட்டியளித்தார். அவருடைய அரசியல் நம்பிக்கைகள், தற்போதைய தேர்தல் நிலவரம் பற்றியெல்லாம் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.

“வகுப்புவாதத்தைத் தூண்ட நினைக்கும் அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்” - மு.க.ஸ்டாலின் பேட்டி!

அதன் முக்கியப் பகுதிகள் வருமாறு :-

செய்தியாளர் : பத்தாண்டுகளாக பதவியில் (ஆட்சியில்) இல்லாத போது நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்?

தலைவர் மு.க.ஸ்டாலின்: பதவியில் இருந்தாலும் - இல்லாவிட்டாலும் மக்களுடைய நலனுக்கான பணியை ஆற்றுவதற்கு நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஏனெனில், தி.மு.கழகம் எப்போதும் மக்களோடு இருக்கும் இயக்கம். அவர்களுடைய மகிழ்ச்சியிலும், துயரத்திலும் அது உடனிருக்கும். தி.மு.கழகம் ஆட்சிக்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல; ஆனால் முக்கியமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நலிந்த மக்களின் சமூக அதிகாரத்துக்காகவும் தொடங்கப்பட்டது. தி.மு.கழகம் மக்களின் நலனுக்காக உழைக்கிறது. பெண்களின் உரிமைக்காகப் போராடுகிறது. நான் எப்போதும், அந்த வகையில் கட்சியை தலைமையேற்று நடத்தி வருகிறேன். ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் கோரிக்கையை ஏற்றுச் செயல்பட வேண்டும் என்ற வகையில் நானும் கட்சியை நடத்தி வருகிறேன்.

செய்தியாளர் : எடப்பாடிபழனிசாமி தலைமையிலானஅரசு தன்னுடைய ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்வார் என்று நம்புகிறீர்களா?அல்லது நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா? 2016-க்கு முன் அவர்அபூர்வமாகவே அறியப்பட்டிருந்தார். அவரை உங்கள் முதன்மையான எதிரியாகக் கருதிபோரிடுவது குறித்து நீங்கள்என்ன கருதுகிறீர்கள்?

தலைவர் மு.க.ஸ்டாலின் : தி.மு.கழகம் கொள்கைக்காகஉள்ள இயக்கம். நாங்கள் எப்போதுமே கொல்லைப்புறம் வழியாகஆட்சிக்கு வர முயற்சிக்க மாட்டோம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நலக்குறைவு மற்றும் மரணத் தின் மூலம் அ.தி.மு.க.வில் குழப்பம் நிலவியபோதுகூட, தி.மு.கழகம் கொல்லைப்புறம் வழியாக பதவிக்குவராது என்று மீண்டும் மீண்டும்தெளிவுபடுத்தியிருந்தோம்.பழனிசாமி ஆட்சியின் மாபெரும்ஊழல்களைப் பார்க்கும் போதும்,அவர் எப்படி தனது சக அமைச்சர்களை அரசு கருவூலத்தைகொள்ளையடிக்க அனுமதிக்கிறார்என்பதைப் பார்க்கும் போதும்,எவரும் பழனிசாமி அரசு தொடர்ந்துநீடிப்பதைப் பார்த்து, அதன் காலம்முடியும் வரை நீடிப்பதைப் பார்த்துஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. இப்போதும்கூட அரசு பணத்தில் அவர் நடத்தி வரும் விளம்பரப்பிரச்சாரத்தால் தான் அவர் அறியப்படுகிறார்; அவருடைய செயல்களால் அல்ல; மக்கள் இப்போதுஅவரை அவருடைய மோசமானஆட்சிக் காலத்தால் அறிவார்கள்.4 ஆண்டு கால மோசமான ஆட்சியால் அனைத்து முனைகளிலும்அவர் தோல்வியடைந்துள்ளார்.

செய்தியாளர் : நரேந்திரமோடிகுறித்து உங்கள்கருத்து என்ன?பாரதிய ஜனதாக்கட்சி உள்கட்டமைப்புத் திட் டங்களில் முதலீடுசெய்து கொண்டுவாக்குச்சாவடிஅளவிலான பலத்தை அதிகரித்துக் கொண்டு, தமிழ்நாட்டில் கால் பதிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதனுடைய ஆதாயங்கள் குறித்துஉங்கள் கருத்து என்ன?

தமிழகத்தின் வளர்ச்சியில் பிரதமருக்கு அக்கறையில்லை!

தலைவர் மு.க.ஸ்டாலின் : பிரதமர், இந்தி பேசும் மக்கள்வாழும் பகுதிக்கு மட்டுமே தான்பிரதமர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அவருக்கு எந்த ஆர்வமும்இல்லை. என்.டி.ஏ. (தேசிய ஜனநாயகக் கூட்டணி) அல்லாத கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள்மீது அவருக்கு ஆர்வமும் இல்லை.அக்கறையும் இல்லை. தொடக்கத்தில் இருந்தே மோடி அவர்கள்கூட்டுறவு கூட்டமைப்பைத் தவறாகப் பொருள் கொண்டு வருகிறார்.மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல்என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அமைப்பாகும். மத்தியில் உள்ளபா.ஜ.க. ஆட்சியால் அது தொடர்ந்துஅச்சுறுத்தப்பட்டு வரு கிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரைஅவர்கள் அ.தி.மு.க.வை வகுப்புவாதம் செய்யவே பயன்படுத்திவருகிறார்கள். வேறு வகையில்கூறுவதானால் வகுப்புவாத அடிப்படையில் நல்லிணக்கத்தோடுதிகழும் தமிழ்நாடு, மோடி ஆட்சிக்காலத்தில் எந்தவிதமான உள்கட்டமைப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

மதுரையில்‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் அது தொடங்கப்படவில்லை. தமிழ்நாட்டு மக்கள்அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் ஒன்றுதான்- இரண்டும் ஒரே மாதிரிதான்என்று நம்புகிறார்கள். எனவே,அவர்கள் பா.ஜ.க.வை நிராகரிப்பார்கள். அத்துடன், அதன்கூட்டணியான அ.தி.மு.க.வையும்தமிழகத்தில் நிராகரிப்பார்கள்.

செய்தியாளர் : தேவை ஏற்பட்டால் தேர்தலுக்குப் பிறகு, நீங்கள்பா.ஜ.க.வுடன் கூட்டு சேர தயாராகஇருப்பீர்களா? 1999-க்கும் - 2003-க்கும் இடையே பா.ஜ.க.வுடன் கூட்டுசேர்ந்ததை உங்கள் தந்தைநியாயப் படுத்தியிருக்கிறார். அதுஅரசியலில் தீண்டத்தகாதவர்கள் யாருமில்லை என்று கூறியிருக்கிறாரே?

தலைவர் மு.க.ஸ்டாலின் : தி.மு.கழகம் மதச்சார்பற்ற மதிப்பீடுகளின் மாவீரன் (சாம்பியன்).ஜனநாயகத்திற்கான கட்சி. தி.மு.கழகம் பா.ஜ.க.வுடன் அரசியல்ரீதியில் கூட்டு சேராது. நாங்கள்மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம். அது நாடு முழுவதும்தேசிய அளவில் காங்கிரசால்தலைமை ஏற்று நடத்தப்பட்டுவருகிறது.

இளைஞர்களின் வேலை வாய்ப்பைஅழிக்கும் பா.ஜ.க. - அ.தி.மு.க. அரசுகள்!

செய்தியாளர் : அ.தி.மு.க. -பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துஇருப்பதுதான் அதற்கானபாதிப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்களா, அத்துடன் இன்னமும்இந்தி எதிர்ப்பு உணர்வு தமிழ்நாட்டில் வலுவாக இருப்பதாகநீங்கள் கருதுகிறீர்களா?

தலைவர் மு.க.ஸ்டாலின் : நான் ஏற்கனவே இதுபற்றி சொல்லியிருக்கிறேன். அ.தி.மு.க.வும்,பா.ஜ.க.வும் ஒன்றுதான். இரண்டுமே தமிழ்நாட்டு இளைஞர்களின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல்உள்ளன. இரண்டுமே லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்புகளைஅழித்துக் கொண்டிருக்கின்றன.12-க்கும் மேற்பட்ட இளம் பெண்களும், இளைஞர்களும்""""நீட்"" தேர்வு காரண மாகதற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால்,அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.ஆகிய இரு அரசுகளுமேவெறும் பார்வையாளர்களாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.கிராம இளைஞர்களின்மருத்துவக் கல்வி கனவுபா.ஜ.க. வால் பறிக்கப்பட்டு இருக்கிறது. இப்போதும் கூட அது நர்சிங்படிப்புக்குக்கூட """"நீட்"" தேர்வை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு எப்போதுமே இந்தித்திணிப்பை எதிர்த்து வருகிறது.அது தாய்மொழியை புறக்கணிப்பதுடன் இழிவுபடுத்துகிறது.எங்கள் தாய்மொழியான தமிழ்மொழி செம்மொழியாகும். அந்தஉணர்வு மாநிலம் முழுவதும் எழுச்சியோடு உள்ளது. அது தேர்தலில்பிரதிபலிக்கும்.

“வகுப்புவாதத்தைத் தூண்ட நினைக்கும் அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்” - மு.க.ஸ்டாலின் பேட்டி!

தி.மு.கழகம் தொண்டர்களின் குடும்பம்!

செய்தியாளர் : நீங்கள் இளைஞர் அணி நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்யும் போது உங்க ளுக்கு 13வயது. நீங்கள் உங்கள் வழியில்நிர்வாகத்திலும், அரசி யல்ரீதியிலும் தி.மு.க.வில் பல் வேறுபொறுப்புகளில் பணி யாற்றியிருக்கிறீர்கள். அ.தி.மு.க. - பா.ஜ.க.கூட்டணி வாரிசு அரசி யல் பற்றிவிமர்சிக்கும் போது உங்கள்பதில் என்ன? உங்கள் மகன்உதயநிதி இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டு, அவர்நட்சத்திர பிரச்சாரகர் களில்ஒருவராக இருக்கிறார். சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தலைவர் மு.க.ஸ்டாலின் : தி.மு.கழகம் தொண்டர்களின்குடும்பம். ஏனெனில் அவர்கள்உன்னதமான திராவிட இலட்சியத்தை உறுதியுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். நீங்கள் ஒருகுறிப்பிட்ட கொள்கையுடன்உங்களை இணைத்துக் கொள்ளும்போது அது உங்களை மக்களின்உயர்வுக்கும் - மாநிலத்தின்வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கும். அப்படிப்பட்ட தருணத்தில்அவர் அல்லது அவள் வேறு ஒருமாறுபட்ட கட்சிக்கு அல்லது கொள்கைக்கு மாறுவார்கள் என்று நீங்கள்எதிர்பார்க்க முடியாது. தந்தையைஅல்லது அவரது கட்சி யின் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் போது,அதை வாரிசு அரசியல் என்றுகுறிப்பிட முடியாது. அவர் என்மகன் என்பதற்காக அவரை வேறுஒரு கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி நான் வற்புறுத்த முடியாது.

அதுதான் தி.மு.கழகத்தில்இருப்பவர்களின் நிலை.

பதற்றத்தால் பிறந்த விமர்சனம்!

செய்தியாளர்: உங்கள் தந்தைஉங்களை உருவாக்கியது போல்,நீங்கள் அவரை அரசியலில்உருவாக்கி வந்தீர்களா?

தலைவர் மு.க.ஸ்டாலின் :நானோ அல்லது என் கட்சியில்உள்ள யாருமோ தங்கள் மகன்களை அவர்கள் தி.மு.க.வில் இருக்கிறார்கள் என்பதற்காக தங்கள்மகன்களை உருவாக்க முடியாது.தி.மு.க.வில் உருவாகுவதற்குஒருவர் கடுமையாக உழைக்கவேண்டும். மக்களிடம் செல்லவேண்டும். நாட்டின் நலனுக்காகப்போராட வேண்டும். அ.தி.மு.க.மற்றும் பா.ஜ.க.வின் இந்த (வாரிசு)விமர்சனம் பதற்றத்தால் பிறந்தது.தங்களுடைய ஊழலையும், வகுப்புவாத கூட்டணியையும் கடந்த 10ஆண்டுகளாகத் துயரமடைந்தமக்களின் கண்களிலிருந்து மறைப்பதற்காகவும், அ.தி.மு.க.வின்தவறான ஆட்சியை மறைப்பதற்காகவும் பிறந்தது.

வகுப்புவாத - ஊழல்சக்திகளை தூக்கி எறியுங்கள்!’

செய்தியாளர் : உங்களுடையதந்தை கலைஞர் (கருணாநிதி)அவர்கள் இப்போது உயிரோடுஇருந்திருந்தால் அவர் உங்களுக்குஎன்ன ஆலோசனையை அளிப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தலைவர் மு.க.ஸ்டாலின் :அவர் எனக்கு, மக்களிடம் """"வகுப்புவாத மற்றும் ஊழல் சக்திகளைதூக்கி எறியுங்கள்!"" என்ற முழக்கத்தோடு செல்லுங்கள் என்றுஅறிவுரை கூறியிருப்பார். அத்துடன், தமிழ்நாட்டின் பெருமையையும், சுயமரியாதையையும் மீட்டுஎடுங்கள் என்று அறிவுரை கூறியிருப்பார். இப்போது, நான் அவர்என்ன விரும்பியிருப்பாரோ,அதைத்தான் சரியாகச் செய்து வருகிறேன். எனவே, அவர் இல்லாதபோதும் நான் அவருடைய இதயத்தில் நெருங்கியுள்ள கொள்கையைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.

செய்தியாளர் : அரசியல்பார்வையாளர்கள் தி.மு.க. 2019-ல் பெற்ற ஒட்டுமொத்தமானவெற்றியை 2021-ல் மீண்டும்உருவாக்க முடியாது என்றுசொல்கிறார்கள். உங்களு டையகணிப்பில் என்ன மாற்றம்ஏற்பட்டது? எது மாற்றியது?2019-ல் நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் வெற்றிபெற்ற பிறகு, எது தவறாகப்போனது? ஏனெனில்,தொடர்ந்து இடைத் தேர்தலில்மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்றவெற்றிகள் போதுமானதுஇல்லை. எனவே, உங்களுடைய200 இடங்களில் வெற்றி என்றகணிப்பு நிறைவேறுமா அல்லது இந்தத் தேர்தல் மிகவும்நெருக்கமானதாக இருக்குமா?

234 தொகுதிகளிலும்தி.மு.க. கூட்டணி வெற்றி!

தலைவர் மு.க.ஸ்டாலின் : பட்டவர்த் தனமான அதிகாரதுஷ்பிரயோகத்தை அ.தி.மு.க.அரசு செய்திருந்த போதிலும்எங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலிலும் பெருவாரியான வெற்றியைமக்கள் அளித்தனர். தி.மு.க.வெற்றியால் பதற்றமடைந்தஅ.தி.மு.க. அரசு அதனால் தான்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவில்லை. இடைத்தேர்தல்களிலும் கூட அ.தி.மு.க.வைவிட அதிக இடங்களில்தி.மு.க. வெற்றி பெற்றது. 2019நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றவெற்றி மீண்டும் இப்போதுதிரும்பவும் கிடைக்கும். தி.மு.கழகமும், அதன் தோழமைகட்சிகளும் 234 தொகுதிகளிலும்வெற்றி பெறும்.

செய்தியாளர் : நீங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுடையஉச்சமான முன்னுரிமைகள்எவை? நீங்கள் ஆட்சிக்குவந்தால், அது எவ்வாறு உங்கள்தந்தையின் ஆட்சியிலிருந்துவேறுபட்டதாக இருக்கும்?

தலைவர் மு.க.ஸ்டாலின் : ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’நிகழ்ச்சியின் போது பெறப்பட்டபுகார் மனுக்கள் 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும்என்று நான் உறுதியளித்திருக்கிறேன். அதுதான் என்னுடையமுன்னுரிமையாக இருக்கும்.திருச்சியில் நான் """"ஸ்டாலினின்ஏழு உறுதிமொழிகளை"" தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வைத்திட்டங்களாக அறிவித்தேன்.அது தமிழ்நாட்டின் அடுத்த 10ஆண்டுகளுக்கான தொலைநோக்காக இருக்கும். வழக்கம்போல், கதாநாயகனாக இருக்கும்தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்று வதாகஇருக்கும். எனவே, தெளிவானமுன்னுரிமைகள் என் கையில்உள்ளன. எனது அரசு பேரறிஞர்அண்ணா, முத்தமி ழறிஞர்கலைஞர் ஆகியோரின் உயரியகண்ணோட்டங்களால் வழிநடத்தப்படும் ஓர் அரசாகத்திகழும்.இவ்வாறு கழகத் தலைவர்மு.க.ஸ்டாலின் அவர்கள்பேட்டியளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories