மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்!

திருச்சியில் நடைபெற்ற தி.மு.கவின் விடியலுக்கான முழக்கம் பொதுக்கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரையாற்றி தமிழகத்தின் விடியலுக்கான 7 உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.

தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின்  7 உறுதிமொழிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க உள்ளிட்ட முன்னணி கட்சிகள், வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் தொலைநோக்குப் பார்வை கொண்ட - தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான செயல்திட்டங்கள் குறித்து இலட்சியப் பிரகடனத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் "விடியலுக்கான முழக்கம்" என்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில், நடுவில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் நடந்து மக்களை நெருங்கிச் சென்று சந்தித்தார். நடைமேடையின் நான்கு புறங்களிலும் திரண்டிருந்த மக்களின் வாழ்த்துக்களை கையசைத்து மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். பின்னர் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், “தமிழகத்துக்கான எனது கனவுகளை அறிவிக்கும் கூட்டம் தான் இந்த மாநாடு. தேர்தலில் போட்டியிட தி.மு.க முதல் முறையாக முடிவு செய்த இடம்தான் திருச்சி மாநகரம்.

திருச்சியில் எடுத்த முடிவை அடுத்துதான் தமிழகத்தில் 5 முறை தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. தி.மு.க ஆட்சி காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது. நவீன தமிழகத்தை தி.மு.க ஆட்சிதான் கட்டமைத்தது; அதனை அ.தி.மு.க ஆட்சி சீர்குலைத்தது. வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6-ம் தேதி அ.தி.மு.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது என கூறினார்.

இதனை தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 7 உறுதிமொழிகளை அறிவித்தார். அது, பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவை ஆகும்.

குடிமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்குவதை உறுதி செய்வோம்.

வீணாகும் தண்ணீர் சதவிகிதத்தை குறைப்போம்.

பசுமை பரப்பளவை 25 % உயர்த்துவோம்.

வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு,

மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி,

குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்,

அனைவருக்கும் உயர்நிலை கல்வி மற்றும் உயர்தர மருத்துவம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

எழில்மிகு மாநகரங்களின் மாநிலமாக தமிழகம் திகழும்.

உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கை தரம் உருவாக்கப்படும்.

அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் அமைப்போம்.

தமிழகத்தில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி உருவாக்கப்படும். குறிப்பாக, ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் சரிபாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories