மு.க.ஸ்டாலின்

"டெல்டா மக்களை ஏமாற்றவே எடப்பாடி பழனிசாமியின் வேளாண் மண்டல அறிவிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சி.ஏ.ஏவுக்கு ஆதரவாக வாக்களித்து அ.தி.மு.கவும், பா.ம.கவும் இந்தியாவுக்கு பச்சைத் துரோகம் இழைத்துவிட்டது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

"டெல்டா மக்களை ஏமாற்றவே எடப்பாடி பழனிசாமியின் வேளாண் மண்டல அறிவிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 3 ஆயிரத்துக்கும் மேலானோர் நேற்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழர்களுக்காக, தமிழ் இனத்துக்காக தமிழ் மொழிக்காக தொடங்கப்பட்டது தி.மு.க எனப் பெருமிதமாக பேசினார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர்களுக்காக தொடங்கப்பட்ட தி.மு.கவில் இணைய வந்த மாற்றுக்கட்சியினரை இருகரம் கூப்பி வரவேற்பதாக தெரிவித்தார்.

"டெல்டா மக்களை ஏமாற்றவே எடப்பாடி பழனிசாமியின் வேளாண் மண்டல அறிவிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

உள்ளாட்சித் தேர்தலில், ஆளுங்கட்சியினரின் முறைகேட்டுக்கு மத்தியிலும் தி.மு.க வெற்றியை ஈட்டியதைக் குறிப்பிட்ட அவர், எத்தனை அராஜகங்களை ஆட்சியாளர்கள் கடைபிடித்தாலும் அடுத்து தி.மு.கதான் ஆட்சிக்கு வரப்போகிறது என மக்கள் உறுதியோடு இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

டெல்டா மாவட்ட மக்களை ஏமாற்றவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை எடப்பாடி அரசு வெளியிட்டிருக்கிறது என குற்றஞ்சாட்டிய அவர், எட்டுவழிச்சாலை திட்டத்தை தடுத்து நிறுத்தாமல் போனது ஏன் எனவும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் சி.ஏ.ஏ சட்டத்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு என்பதால்தான் நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளது. இந்த சி.ஏ.ஏ சட்டம் உருவாக அ.தி.மு.கவும், பா.ம.கவும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பச்சைத் துரோகம் இழைத்துவிட்டது என மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். கரப்ஷன், கமிஷனில் திளைத்துள்ள அ.தி.மு.க அரசை, சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

banner

Related Stories

Related Stories