மு.க.ஸ்டாலின்

கத்தார் உலக வர்த்தகர்கள் மாநாடு : சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

கத்தாரில் அடுத்தாண்டு நடைபெற உள்ள உலக வர்த்தகர்கள் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கத்தார் உலக வர்த்தகர்கள் மாநாடு : சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 முதல் 9ம் தேதி வரை உலக வர்த்தகர்கள் மாநாடு (international business delegation summit) நடைபெற உள்ளது. உலக அளவில் பல முக்கிய நிறுவனத் தலைவர்கள், முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உலக வர்த்தகர் அமைப்பின் தலைவர் யூசுப் அல் ஜாஃபர் மற்றும் அமைப்பின் ஒருங்கினைப்பாளர்கள், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories