மு.க.ஸ்டாலின்

கமிஷன் கிடைக்காததால் ரூ.5000 கோடி நிதியை திருப்பி அனுப்பிய அ.தி.மு.க அரசு - மு.க.ஸ்டாலின் சாடல்!

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 5000 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தாமல் மத்திய அரசுக்கு அ.தி.மு.க அரசு திருப்பி அனுப்பியுள்ளது என மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கமிஷன் கிடைக்காததால் ரூ.5000 கோடி நிதியை திருப்பி அனுப்பிய அ.தி.மு.க அரசு - மு.க.ஸ்டாலின் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் கே.எஸ்.வெல்டிங் மணி மற்றும் சென்னை மேற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் புவியூர் எட்வின் ஆகியோர் இல்லத்திருமண விழா மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணக்களான அஸ்வின் குமார், கண்மணியை வாழ்த்தினார். அதன் பிறகு மேடையில் பேசிய தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அடிமை ஆட்சி நடைபெற்று வருவதாகவும், நெடுஞ்சாலைத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்துவிட்டதாகவும் அவர் சாடினார்.

கமிஷன் கிடைக்காததால் ரூ.5000 கோடி நிதியை திருப்பி அனுப்பிய அ.தி.மு.க அரசு - மு.க.ஸ்டாலின் சாடல்!

அதிமுக அரசின் குறிக்கோளாக கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் ஆகியவையே உள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலை திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தாமல் மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஏனெனில், அந்த சாலைப்பணிக்கு கமிஷன் வாங்க திட்டமிட்டிருக்கிறது அதிமுக. அது மறுக்கப்பட்டதாலேயே அந்த நிதி தற்போது திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது என சாடியுள்ளார். இந்த கொடுமைகள் அனைத்தும் 9 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இவற்றையும் தமிழக மக்களும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories