மு.க.ஸ்டாலின்

பேனருக்காக நீதிமன்றம் ஓடும் முதல்வர், நீட் தேர்விற்கு நீதிமன்றம் செல்லாமல் இருப்பது ஏன்? மு.க.ஸ்டாலின்!

பேனர் வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்திற்குச் சென்ற முதலமைச்சர் நீட் தேர்வு வேண்டாம் என நீதிமன்றத்திற்குச் செல்லாமலும் இருப்பது ஏன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

பேனருக்காக நீதிமன்றம் ஓடும் முதல்வர், நீட் தேர்விற்கு  நீதிமன்றம் செல்லாமல் இருப்பது ஏன்? மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் மிகப் பெரிய விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இவ்வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வில் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றினால் மட்டுமே உண்மை வெளிவரும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பேனர் வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்திற்குச் சென்ற முதலமைச்சர் நீட் தேர்வு வேண்டாம் என நீதிமன்றத்திற்குச் செல்லாமலும் இருப்பது ஏன் என தி.மு.க தலைவர் முக ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சுபஸ்ரீயின் மரணத்துக்குப் பின்பும், விளம்பர மோகத்தில், பேனர்களை வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்திற்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, #NEET ஆள்மாறாட்ட முறைகேட்டில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாமலும் - நீட் தேர்வு வேண்டாம் என நீதிமன்றத்திற்குச் செல்லாமலும் இருப்பது ஏன்?'' என கேள்வியெழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories