மு.க.ஸ்டாலின்

“8 ஆண்டுகளாக வெறும் மனு மட்டுமே கொடுத்து வருகிறது அ.தி.மு.க அரசு” : கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி!

கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட பணிகளை பார்வையிட்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“8 ஆண்டுகளாக வெறும் மனு மட்டுமே கொடுத்து வருகிறது அ.தி.மு.க அரசு” : கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் நலத்திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின்.

வில்லிவாக்கத்தில் நடைபெற்று வரும் ரயில்வே கேட் மேம்பால பணிகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், அங்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.

“8 ஆண்டுகளாக வெறும் மனு மட்டுமே கொடுத்து வருகிறது அ.தி.மு.க அரசு” : கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி!

இந்த ஆய்வின்போது ரயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் கண்ணையாவும் உடன் இருந்தார். அப்போது பேசிய கண்ணையா, தி.மு.க தலைவரின் சீரிய முயற்சியால்தான் சாலை பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, கொளத்தூர் திருவீதியம்மன் தெருவில் உள்ள பூங்கா, நேர்மை நகரில் நடைபெற்று வரும் துணை மின் நிலைய கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

“8 ஆண்டுகளாக வெறும் மனு மட்டுமே கொடுத்து வருகிறது அ.தி.மு.க அரசு” : கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி!

இந்த ஆய்வின்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை தி.மு.க தலைவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தி.மு.கவின் தொடர் அழுத்தம் காரணமாக வில்லிவாக்கத்தில் ரூ.15 கோடி செலவில் ரயில்வே மேம்பால பணி நடைபெற்று வருவதாகவும், இதனை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

“8 ஆண்டுகளாக வெறும் மனு மட்டுமே கொடுத்து வருகிறது அ.தி.மு.க அரசு” : கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி!

மேலும், தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 7 ஆயிரத்து 825 கோடி ரூபாய் நிதி பாக்கியை வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கோரியிருப்பது குறித்து கேள்வி எழுப்பியபோது, மத்திய அரசிடம் அ.தி.மு.க அரசு கடந்த 8 ஆண்டுகளாக மனு மட்டுமே அளித்து வருகிறது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை” என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“8 ஆண்டுகளாக வெறும் மனு மட்டுமே கொடுத்து வருகிறது அ.தி.மு.க அரசு” : கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி!

இந்த ஆய்வின்போது மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப.ரங்கநாதன், தாயகம் கவி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்டோ உடன் இருந்தனர்.

banner

Related Stories

Related Stories